நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் இதயம். விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும் எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை நிஜம் எதுவென அறியாத கணங்களில் குழம்பித்தவித்த மனசு ஆதிக்குழந்தையானது. நிலாமூட்டில் தோன்றி வழிதவறிய ஒற்றை நட்சத்திரம் விவாதம் தொடர்ந்தது. வெகுநேரம் ஆகியும் இரவு விடியாதது பற்றி இருளுக்குள் நீந்திச் சென்றது பறவை இரவும் இருளும் நிரந்தரமாக விவாதம் தொடர்கிறது. நேற்றின் மடி […]
தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப் புணர்ந்த கனவின் துளிகள் ஒன்றின் மேல் மற்றொன்றாகி சமாதிகளில் புதைக்கப்பட்ட உடல்களின் பெருங்கூட்டம் எங்கும் அலையடித்து கிளம்பும் பரவெளியில் மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து அறுபட்ட காதுகள் தொங்க விழிகளற்ற கொடிமர வேலிகள் உமிழ்நீர் துப்பல் சிதறல்களில் துருப்பிடித்து கருகி சாம்பலாகின. பேராறுதல் சொல்ல […]
என்னை தரதரவென இழுத்துச் சென்று கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல் கரைதிரும்புவதற்குள் ஒரு கெண்டைமீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தேன். கடலுக்குள் ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது. செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல் திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார். எனது துரித நீந்துதலை கண்டறியமுடியாத துக்கம் அவருக்கிருந்தது. கடலை வற்றச் செய்வதற்கு துஆ கேட்டபடி இருந்தார். ஆயிரமாயிரம் அதிசயங்களைக் கொண்டதொருகடல் நிலை கொள்ளாமல் தவித்தது போக திரும்பத் திரும்ப பொங்கியவாறு என்னை அணைத்தபடி இருந்தது. துரத்திவந்த இஸ்ராயீல் சுழியில் சிக்கியபின் திரும்பி வரவே இல்லை. ———————————————– […]
பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார். நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு அவருக்கிருந்தது. முன்னூறு வருடங்களுக்கு முன்பு தன்னோடு விளையாடிய குழந்தைகளும் விளையாடிய இடமும் உருத்தெரியாமல் போயிருந்தது. உயிரோடு சமாதிக்குள் போனபிறகு பிள்ளைகளுக்கு பழக்குலைகளை அதன்மேல் முளைக்கச் செய்த அதிசயத்தை தன்னால் இன்னமும் நிகழ்த்தமுடியுமென நம்பியிருந்தார். ஒரு சுற்று நடந்துவந்தபோது தன் பெயரில் தர்காவும் பிரமாண்ட கட்டிடமும் எழும்பியிருந்த போதும் கூட பரவசப்பட்டதாய் தெரியவில்லை. தன் வாசல் முற்றத்தில் உட்கார்ந்திருக்கும் தப்ஸ் கொட்டும் பக்கிர்களையும் முஸாபர்களையும் […]
ஹெச்.ஜி.ரசூல் இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம் சிறுபூவாய்விரிந்தது. கமுகந்தைகள் பற்றிப் படரும் நல்லமிளகு கொடிகள் துயரத்தின் வாசத்தை காற்றில் மிதக்கவிடுகின்றன. அதிகாலைப் பனியில் உதிர்ந்த ஒரு கொத்து கறுப்பு பூக்கள் பூமியின் இதழ்வருடி வலிபட முனங்குகின்றன. பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம் மெல்லத் தெரியத் துவங்கி ஒரு கனவாக உதிர்ந்திருந்தது. […]
ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார் தலைமையில் நடைபெற்றது.இரண்டாம் அமர்வு சம கால கதை எழுத்து என்ற பொருள் பற்றியது.கதையாளரும் மலையாளமொழிபெயர்ப்பு படைப்பாளியுமான ஏ.எம்.சாலன் நிகழ்வை நெறிப்படுத்தினார். நாவலாசிரியர் ஜாகிர் ராஜா குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரையில் எனும் தலைப்பில் விரிவானதொரு ஆய்வுரையை வழங்கினார்.பேரா.நட.சிவகுமார் தமிழில் கால்வினோவும் பிறரும் […]