இனிமேல் இந்தத் திருநெல்வேலி ஊருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதோ.? எத்தனை ஆசையோடு வந்தாள் விமலா. உள்ளத்தில் அலைபாயும் ஒரேக் கேள்வியோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு மதுரை செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் .அவளது நினைவுகள் மேற்கொண்டு நகர மறுத்து நேற்றிரவு நடந்த நிகழ்வையே சுற்றி…சுற்றி.. வந்து கொண்டிருந்தது. தனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல்…சின்ன வயசிலேயே. அப்பாத் தவறிப்போனதால்….அம்மாவின் நிழலிலேயே….வளரும்போது…கூடப் பிறந்த அக்கா கல்பனாதான் ..விமலாவுக்கு எல்லாமே. எந்த ஒரு வெளிக்கவலையும் தெரியவிடாமல் பார்த்துக் கொள்வாள் .கல்பனாவுக்கு […]
(இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..) மனசு பூரா…எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து இப்போது தான் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு வழியா….என் தொல்லை தாங்காமல் என் வீட்டுக்கு வர அம்மாவை பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு பஸ் ஏற்றி விட்டு..ஜெயா..நீ வந்து அம்மாவை அழைச்சுக்கோ.. ன்னு சொன்னான்.. என் தம்பி. அதுவும் அம்மாவுக்கோ….என்னைப் பார்க்கும் சந்தோஷத்தை விட சிதம்பரத்தில் சபாநாயக்கர் கோவிலில் நடராஜ தரிசனம் காணும் ஒரே ஆவலும் …ஆசையும்… தான் […]
மணம் கரைந்து…. உலர்ந்து உதிர்ந்தது … செடியில்…பறிக்காத மல்லிகை..! —————————————— சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்.. மணத்தாலும்…விதவை தானே… மல்லிகை…! —————————————– இரும்பென…. கருவண்டு.. காந்தமாக… மகரந்தம்…. பாவம்….தாமரை…! ——————————————— சேற்றில் நான்…! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ———————————————— பூக்காட்டில் பாம்பு…! நெருங்க மறுக்கும் அவள்… கருநாக… ஜடையில் என் நர்த்தனம்..! தாழம்பூ..! ——————————————— ஈராறு ஆண்டுகளாய்… காத்திருந்தது… தென்றல்… ! முதல் குறிஞ்சியின்… வாசம் பிடித்து தூது சொல்ல..! ———————————————— மழை கரைக்காமல் குடை கொண்டு […]
அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ…….இந்த மரம் தான்… கந்தசாமி…! .அப்போ…..நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ எனக்குத் தெரியாது…நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது…இது காய்க்காத மரம்….வெட்டிப்போடு… ஆமா…. சொல்லிப்புட்டேன்..மத்தபடி பேசினதெல்லாம் நியாபகம் இருக்குதுல்லே…என்ன….நீ ஒரு ஐநூறு ரூபா கூட ..தர மாட்டேங்கறே…. இந்த மரத்துக்கு….ரொம்ப கறாரா கட்டாதுன்னு சொல்றே…..அதான் எனக்கு குறையாத் தெரியுது…..என்று ஆதங்கத்தோடு கேட்க.. நெசமாலுமே…கட்டாது சாமி…தோ ..பாருங்க….!..நானே…ஒரு மெசினை வாடகைக்கு எடுத்தாத்தான் வேலை […]
டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது…. யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்… நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று கொண்டிருந்தாள்…ஆனால்….அவள் முகம்….வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது…. இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா…இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? . அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வெறும் வாய்களுக்கு மெல்லும் அவல்….அவள்… தான்..! உள்ளே வா…பத்மா.. இல்ல ஆன்ட்டி..வெளியில் கிளம்பறீங்க போலத் தெரியுது… ம்ம்…வாக்கிங் போகத் தான்……கிளம்பியிருக்கேன்.. சரி…போயிட்டு வாங்க….நான் போறேன்…! ம்ம்ம்….சொல்லு பத்மா…என்ன விஷயம்? அவள் தயங்கினாள்……திரும்பிப் […]
அச்சாணி… ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு… பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி குடும்பத்தை சுற்றி பின்னோக்கி சென்றது .பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்….நடந்நிகழ்ச்சிதான்…..இருந்தாலும்…இன்று நினைத்தால்……கூட….எல்லாம்…. நேற்று நடந்தது போல் இருக்கு. வாசல் தெளித்துக் கோலம் போட பக்கெட் தண்ணீரோடு கதவைத் திறக்கும்போது…..அதற்காகவே காத்திருப்பது போல…ஒரு இளம் பெண் அவள் அருகில் கிழிந்த பாவாடையைக் கட்டிக் கொண்டு மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு ஐந்து வயதுப் […]
மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்… டிக்… டிக்… கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக… வயதாக… வயதாக தூக்கம் தொலைந்து வர அடம் பிடிக்கிறதே..இதே…எனக்குப் பெரிய கவலை…நினைத்தபடியே.. மெல்ல கடிகாரத்தை உற்றுப் பார்க்கிறாள் . இரவு விளக்கின் ஒளியில், மணி இரண்டைத் தாண்டி விட்டதை அறிந்து…அட ராமா..இன்னுமா தூக்கம் வரலைன்னு…அலுத்துக் கொண்டாள். “மெத்தைய வாங்கலாம்…தூக்கத்தை […]
போகும் வழியில் புரிந்து போனது.. சமுதாயம்..ஜனநாயகம்.. சமத்துவம்..கற்றுத்தந்தது.. வழியிலொரு ஆலமரம்..! சுமை தாங்கும் நிம்மதியில் தான்.. எத்தனை விழுதுத்தூண்கள்..! மரத்தின் விழுதுகளா…? அத்தனையும் மதவிழுதுகள்… தாங்குகிறது இந்தியா..! நடுப்பரப்பை பிடிக்கவென்றே… பறவையாய் விரித்தது கிளைகள்.. அத்தனையும் சாதிக்கிளைகள்… விழுதுகளை தாங்குமா….கிளைகள்..? மரத்தின் நடுமுதுகில்… எதையோ…எதிர்த்து கொத்திவிடும் மரங்கொத்தி… பொந்துக்குள்ளே .புதையலாய் நாகம்..! ஊரஊர தேயாத பாதை நீ…! கலவரக் கட்டெறும்பின் கட்டாயப் படையெடுப்பு..! கிளைகொன்றாக… வண்ணக் கொடிகள்.. தாவும் குரங்குகள் சண்டையிட்டு விளையாட ஊழல் அரசுகள்… வந்துபோன […]
உலகம் என்பது என்னுள் சுழல்வது…. ——————————- என்னை … அறியவா… எனக்கு இந்தப் பிறவி..! —————————— இந்த உடல் .. வாடகை வீடு… காலியாகி விடும்…….! உயிரே…புரிந்துகொள்.. இப்படிக்கு…. ஆன்மா..! ———————————- விதை தரும்…. விருக்ஷமும்… மண்ணுக்குள் அன்று…. விதையாகத் தான்..! ——————————————– கைப்பிடி …. மூளைக்குள் அனந்தகோடி அறைகள்…! ——————————– அளவில்லாததை…. “இதயம்” என அளந்து… வைத்தான்.! ———————————– பூஜ்ஜியமும் இல்லை ராஜ்ஜியமும் இல்லை… எதற்கு எல்லை..? ————————————– ஒன்றும் இல்லாத பரவெளிக்கு……? பந்தல் எதற்கு…! […]
பொற்கொடியாய்… நினைவில் நின்ற தென்றல்… இன்று….தானே.…புயலாய் மாறி…. உயர்த்தியது போர்க்கொடி…! உன் ஆனந்தத் தாண்டவத்தில்….! உன்னோடு சேர்ந்து உன்னை எதிர்த்து… தலைவிரித்தாடி… கைமுறித்தது…தென்னை… முக்கி முனகி ஆடும்போதே… ஒடிந்து விழுந்தது முருங்கை… சளைக்காமல் ஆடியும்… முடிவில் பல கிளைகளைத் தவறவிட்டது அரசு..! தண்டோடு மடங்கியது வாழைக் கூட்டம்… தோற்று… வேரோடு படுத்தது வேம்பு…! வீதியெங்கும் மரங்களின் மறியல் போராட்டம்…! சூறைக் காற்றின் அகோர சுவடுகள்…! நகர்வலம் வந்து.. கடல்கடந்தது… தானே… தென்றல்….!! அல்ல…. அல்ல..புயல்…! ஆடிக் களைத்து வலியில் அழுதன மரங்கள்..! மரணத்தின் பிடிக்குள்… […]