நான் அங்கயே தலையால அடிச்சுண்டேன் கேட்டியோடா நீ….இப்பப் பாரு அந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு இளக்காரமா நம்மளப் பார்த்து வெளில போங்கோன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறை தான்….எப்படிப் பேச்சாலயே உந்தித் தள்ளினார் பார்த்தியோன்னோ …? நேக்கு எப்படி இருந்தது தெரியுமா? ரத்தம் கொதிச்சது…ஏற்கனவே நேக்கு ரத்தக் கொதிப்பு….இந்த மாதிரி அவமானமெல்லாம் என் வாழ்கையில வந்ததில்லை.நோக்கோசரம் நான் இப்போ இவர்கிட்ட இது மாதிரி அவமானத்தையும் தாங்க வேண்டியதாப் போச்சு….உன்னைச் சுமந்து பெத்தவளாச்சே……அதான் நேக்கு நெஞ்சு […]
ஓ ……நீங்களா….இப்பத்தான் உங்கள நெனைச்சேன்…….உங்களுக்கு ஆயுசு நூறு கேட்டேளா..! என்னவாக்கும் விஷயம்? சித்ரா சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். அதொண்ணுமில்லை….உங்கட குட்டி கௌரிக்கு வேறெங்கிலும் வரன் பார்த்து முடிச்சுக்கோங்கோ . எங்க கார்த்திக், நேக்கு இந்தப் பொண் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டான். அவனோட இஷ்டம் எதுவோ அது தான் எங்களோட இஷ்டமும்..நீங்க என்ன சொல்றேள்..? எதுவும் இப்போ நம்ம கையில இல்லையாக்கும்.இது எல்லாம் ஈஸ்வரன் கிருபை….நம்ம குட்டியள் இஷ்டம் தானே நமக்கு முக்கியம். அதான் நானே உங்க […]
நெடுங்கதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். பெண் பார்த்த படலம் முடிந்து இரண்டு நாளாகியும் வீட்டில் ஒரே மௌன போராட்டம் தான். ஏதோ கடமைக்கு சமைத்து வைத்துவிட்டு டைனிங் டேபிள் மீது “எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும்.”..என்று ஒரு பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து விட்டு கோவிலுக்குப் போய் விடுவாள் சித்ரா. ஏன்மா…? ஏன் பேசமாட்டேங்கறே? கௌரி சத்தமாக அம்மாவின் முகத்தைத் திருப்பி நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்கிறாள். அவா வேண்டாம்னு சொல்லிட்டு போனதுக்கு உனக்கெதுக்கு என் […]
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். சித்ரா…சித்ரா ..! மாப்பிள்ளை யாத்துக்காரா எல்லாரும் கிளம்பியாச்சாம்…இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடுவாளாம் இப்போ தான் ஃபோன் பண்ணினார். என் கணக்குக்கு இந்த டிராஃபிக்கில் மாட்டிண்டு வெளில வந்து சேர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் . அவாள்ளாம் வரும்போது நம்ம கௌரியை ரூமுக்குள்ள போய் உட்காரச்சொல்லு . நாம கூப்பிட்ட போது வந்தாப் போறும்ங்கிட்டியா ஈஸ்வரன் ஈனஸ்வரத்தில் சொல்லிவிட்டு போகிறார். ஒ……நான் அப்பவே சொல்லியாச்சு கேட்டேளா….நம்மாத்துல ..இதென்ன […]
(இது உண்மை நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டது) சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். வாசல்ல யாருன்னு சித்தப் போய்ப் பாரேன்டா ஆனந்த்… நிழலாடறது… ஊஞ்சலிலிருந்து தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு. இருங்கோ பெரீம்மா பார்த்துட்டு வரேன்….சொல்லிக் கொண்டே ஆனந்த் ரேழியைக் கடந்து செல்கிறான். யாரு…? என்றபடியே அந்த கனமான மரக் கதவை இன்னும் லேசாக திறக்கவும்.. நான் தான்டா ஆனந்து… முனுசாமி …! மெல்லிய குரலில் தனது கல்லூரித் […]
வெய்யில் சுளீரென்று முகத்தில் பட்டதும் தான் விழிப்பு வந்தது கருப்பாயிக்கு. வயது அம்பது ஆயிருச்சு. என்ன ஆயி என்னா …? இன்னிக்கும் வேலைக்கிப் போயி சம்பாதிச்சால் தான் தான் வீட்டில் உலை பொங்குங்குற நிலைமை. இதுல பெத்த மவள் வெள்ளையம்மாளும் அவள் பெத்த மவன் முருகனும் பாரமாகத் தான் தோன்றினார்கள் கருப்பாயிக்கு . ஒருத்தி ஓடா உழைச்சு குடும்பமே குந்தித் திங்கணுமுன்னா எப்படி முடியும்? அலுப்புடன் நினைத்துக் கொண்டவள் போர்வையை விலக்கினாள். வாசல் திண்ணையில் படுத்திருந்தவளின் உடல் […]
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர் ,சிதம்பரம் ஆறாவது ஃப்ளோரிலிருந்து கீழே இறங்க லிஃப்டு மேலே வர பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்த ஆர்த்திக்கு பொறுமை உதிர ஆரம்பித்தது. ச்சே….இன்னும் எத்தனை நேரம் இப்படியே..இங்கேயே நிற்பது..பேசாமல் காலை நம்பி படியில் இறங்க ஆரம்பித்திருந்தால் இந்நேரம் மூன்று மாடிகள் இறங்கியிருக்கலாம்..நினைத்த மாத்திரத்தில் லிஃப்ட் வந்து அவளெதிரே நின்று கதவைத் திறந்து ‘சீக்கிரம் ஏறு’ என்றது..உள்ளே நுழைந்ததும் சத்தமில்லாமல் வழுக்கிக் கொண்டு . சிகப்பு நிறப் புள்ளிகள் மின்னியப்படியே அம்புக் குறியை தலை […]
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர். சிதம்பரம். (இந்தக் கதைக்கு விதையாக இருந்த ஒரு ஜோக்கை எனக்கு எழுதி அதைப் படித்துச் சொல்லி என்னைச் சிரிக்க வைத்து இப்படிச் சிந்திக்க வைத்தவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.) கொரியர் போஸ்டில் வந்து இறங்கிய இன்விடேஷன் அரை மணி நேரமாகியும் இன்னும் என் கையை விட்டு இறங்காமல் பசையாய் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது.. எனது பாசமுள்ள தோழி வசந்தியிடமிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த திருமண அழைப்பு அது. அதிலும் மறக்காமல் […]
தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : 1968 குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், […]
என்ன சொல்றே நீ ரத்தினம்..? நாம இன்னிக்கு கண்டிப்பா போறோம். அந்த ஜோசியர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். இப்பப் போய் நீ இப்படிக் கேட்கறியே….வேண்டாம்…வேண்டா ம் நீ பாட்டுக்கு வண்டியை ஒட்டு…நான் பைரவி கிட்ட பேசிக்கறேன். அவளுக்கு ஒண்ணும் ஆகாது. வேணும்னா ஆதித்தனை போய் பார்த்துக்க சொல்றேன். அதுவும் தேவையிருக்காது. பைரவியே பார்த்துக்குவா. அதான் மாதவி கூட இருக்காளே…பிறகு என்ன…? நாம போயிட்டு வந்துடலாம்.பைரவியின் அப்பா தனது கைபேசியை எடுத்து பைரவியை அழைக்கிறார்.பைரவியின் வீட்டு […]