author

தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

    ஜி. ஜே.  தமிழ்ச்செல்வி       விடியற் கால பொழுது சில நேரம் சோர்வாக அமைந்து விடுவது உண்டு. அது என் மனநிலை பொறுத்தது என்ற போதிலும் அந்த மனநிலையை மாற்ற பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படிப்பட்ட நாள்தான் அந்த நாள் ! (14.07.2014) எனது துக்க நாள் !   பல நேரங்களில் நான் சோர்வை உணரும் போது எந்த காரியங்களிலும் ஈடுபடுவ தில்லை. கால்கள் நடக்க சக்தி அற்றது போல் பாசாங்கு செய்யும், கைகள் தட்டச்சு […]

தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை

This entry is part 10 of 26 in the series 13 ஜூலை 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஒரு கதை சொல்லப்படுகிறது. உற்றுக் கேட்கிறேன், உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று மனம் இடித்துரைத்த பின்னும். அப்போது ஒரு குரல் என் காதில் விழுந்தது. “ஒரு அடையாள அட்ட வேணும் மேடம்.” ஏற்கனவே விண்ணப்பிச்சுட்டீங்களா? இல்ல இனிமே தான் விண்ணப்பிக்க போறீங்களா? வந்திருந்த இருவரில் ஒருவன் நெடு நெடுவென வளந்திருந்தான். அடர் கறுப்பு நிறம். மற்றவன் அவன் வளர்ந்தவனின் தோள் பட்டையில் தலை உயரம் ஒத்திருக்க நின்றான் மாநிறம். “இல்ல மேடம் […]

தினம் என் பயணங்கள் -24 என் சைக்கிள் பஞ்சர் !

This entry is part 14 of 19 in the series 6 ஜூலை 2014

  அவசரம்! அலுவலகத்தில் வேலை பத்து விரல்களுக்கு மேல் சுமையாய் கிடக்கிறது. நான் சைக்கிளில் ஏறி அமர்ந்து, அம்மா கொடுத்த தோள் பையை வாங்கித் தோளில் மாட்டியபோது தான் பிரசில்லா [தமிழ்ச்செல்வியின் பெயர்] இந்த மூட்டையை பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் கொண்டு வந்து தரியா என்றாள் ஜெயலட்சுமி டீச்சர். அம்மா தலைமை ஆசிரியையாக பணியாற்றிய போது, அவளுக்குகீழ் பணியாற்றியவள். எப்பொழுதும் ஆட்டோவுக்குத்தான் போன் செய்யச் சொல்வாள், இதென்ன திடீர் என்று என்ற எண்ணம் தோன்றிய போதும் சரிக்கா […]

தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி சமீப காலத்தில் சிலர் வினா எழுப்பினார்கள், தினம் என் பயணங்கள் என்று ஏதோ எழுதுகிறாய். தலைப்பைப் பார்த்து பயணக் கட்டுரை என்று எண்ணி படிக்க வருபவர்கள் ஏமாறுவார்கள் என்று. உண்மையில் பக்கத்துத் தெரு வரை சென்று வருவதைப் பயணம் என்று சொல்வதற் கில்லைதான். ஆனால் இது ஒரு மாற்றுத்திறனாளியைக் குறித்தது. ஓர் உயிரினத்தின் பெயரியல், சூழியல், சிறப்பியல்புகளைப் பற்றிப் படிப்பது போல, உயிரினத்தைப் பற்றி (மனித இனம்) மற்றோர் உயிரினம் படிக்கும். ஆனால் […]

தினம் என் பயணங்கள் -22 தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம் (23.05.2014) விடிந்தது தெரியாத தூக்கம், நேற்று இரவு (22.05.2014) விதவிதமாக படுத்து உட்கார்ந்து என்று பல நிலைகளில் இருந்து படித்ததின் விளைவு. தேர்வு பயம் போய் படிப்பின் மீது காதல் ஏற்பட்டிருந்தது. உந்து சக்தியாய் இருந்து அநேகர் ஊக்கப்படுத்தியபடி இருக்க, படித்தலின் மீது காதல் வர காரணமானவர் பிரபீஸ்வரன். தேர்விற்காக எக்சல் ஷீட்டில் டைம் டேபிள் போட்டு படித்தலை ஒழுங்கு படுத்தியது வரை (அவர் சொன்னபடி நான் […]

தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி (22.05.2014) வாழ்க்கையை ரசிப்பு வட்டத்திற்கு கொண்டு வர பல அனுபவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் ருசித்துப் பருகுவதான முயற்சிதான் என்னுடையது. வாழ்வோ சாவோ அதை ரம்மியத்தோடு கடந்து உயிர்ப்போடு வாழ்ந்து முடிக்க எத்தனிக்கும் ஒரு சாதாரணளின் வாழ்க்கையை எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்ல ஆசிக்கும் இலட்சிய நடை இந்த எழுத்து. சராசரி பெண்ணிற்கு மறுக்கப்படாத வாழ்வனுபவங்கள், பாசம், பாதுகாப்பு, இயலாமை என்று காரணம் காட்டி மறுக்கப்பட்ட போதும், அதை முனைந்து […]

எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழிப் பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய் பயணித்த நொடி எங்கிருந்தோ வந்து இதயத்தைக் கீறிச் சென்றது உன் நினைவுகளின் உயிர் ! குடை தாங்கி நீளும் உன் கரங்கள் தரும் பாதுகாப்பின் உயிரலைகள் காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது நினைவுப் படுகையில். நனைந்து விழும் கூந்தல் நீர்ச் […]

தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி மூன்றாம் நாள் தேர்வு 21.05.2014 துணிச்சல் என்னவென்று அறிந்து கொள்ள மிகவும் முனைந்தேன். துணிச்சல் என்றால் என்ன? ஒரு சிலர் என்னைத் துணிச்சல் அற்றவள் என்று சொன்னது காரணமாக இருக்கலாம். எதிராளி நம் செயல்கள் மூலமாகவே நம்மை மதிப்பிடுகிறார். தேர்வு நடத்தும் அலுவலரின் செயல்தான் என் பார்வையை அவர் பின்னேயே நகர்த்திக் கொண்டிருக்க செய்தது. ஒவ்வொரு நிகழ்விலும் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொண்டேன். அவருக்கு அந்த […]

தினம் என் பயணங்கள் – 19 இரண்டாம் நாள் தேர்வு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி வாழைத் தண்டு கலவை கீரை மணத்தக்காளி கீகீகீகீகீரெய்ய்ய்ய்ய்….. என்று ராகமாய் செவி தீண்டிய வார்த்தைகளில் கண்விழித்தேன். நேற்று பிலிட் [B. Litt] பட்டப் படிப்பிற்கான பாட இலக்கணத் தேர்வு. நேற்று இருந்த பதட்டம் இன்று இல்லை. வெகு நேரம் கண் விழித்துப் படித்ததில் கண் எரிந்தது. புத்தகம் வாங்கிய போதிலிருந்தே படித்திருக்க வேண்டும். இதென்ன சாகுற நேரத்துல சங்கரா சங்கரான்னு என்று இடித்துரைத்த மனதை அதட்டியது மற்றொரு மனம். தேர்தல் வேலை இருந்தது. […]

தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி​     பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்து விடுவது உண்டு. இந்த பயணம் கல்வி உயர்வுக்கான பயணம். 19.05.2014முதற்கொண்டு 23.05.2014 வரையிலான தமிழ் இலக்கியம் (B.LIT) பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத்​ தேர்வு.  இதற்கு முன்பே பி.சி. ஏ [B.C.A -Bachelor of Computer Application] ​பட்ட படிப்பிற்காக விண்ணப்பித்துப் பணம் கட்டியும் என்னால், அழைத்து செல்ல ஆள் இல்லாததாலும், பிராக்டிகல் வகுப்பில் கலந்து கொள்ள இயலா காரணத்தினாலும் தேர்வு எழுத முடியாமல் போனது.   வேலை செய்து கொண்டே படிப்பதும், சிரமமாகத்தான் இருந்தது. அக்காலக் கட்டச் சூழ்நிலையில் இரவு 12 மணிவரை […]