author

தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி “பெண்கள் தேவையில்லை ஆண்களே போதும்,” இந்த தலைப்பில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதன் விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையின் குறிப்புகள் இணைப்பும் தாஹீர் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது (http://www.enayamthahir.com/2011/12/blog-post_29.html) குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண்துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது “ஸ்டெம்செல்” மூலம் […]

தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி மாற்றுத்திறனாளி என்றால் வானத்தில் வெட்ட வெளியில், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குதித்து வந்த ஜந்துவா?… அப்படி ஒன்றும் இல்லை, சராசரி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் தான் இருந்தன எனக்கு. காலம்தான் கனவுகளை செதுக்குகிறது போலும். பால்யப் பருவக் கனவுகளில் முதலாவதாக இருந்தது என்னவோ இந்த அம்மா எப்பவும் பழைய கஞ்சிதான் ஊத்துறா, ஒரு நாளாச்சாம் சுடு சோறு சாப்பிடனுங்கறது தான். அதன் பிறகு ஒர்த் டிரஸ்ட் பயில வந்த பிறகு தான் […]

தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   கண்விழிக்கச் சோம்பல் பட்டேன். “மம்மி எழுந்துரு, மம்மி எழுந்துரு” என்று இரு முறை அழைத்தாள் மகள் அருள்மொழி. இரு முறைதான் அழைத்ததாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த இரு அழைப்புதான் என்னை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். முன்பு வசித்த வீட்டை விட இரு மடங்கு தூரம் இப்போது உள்ள வீட்டிற்கும் அலுவலகத்திற்கும். கைகள் ஓய்விற்காகக் கெஞ்சுவது புரியத்தான் செய்தது. இன்று அலுவலகம் செல்ல வேண்டும். நேற்று “உழைப்பாளர் தினம்” போல் விடுப்புதானே என்று இன்னும் கொஞ்ச நேரம் என்று முடங்கி […]

தினம் என் பயணங்கள் -14

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி     வெகு நாட்களாக நான் வீடு தேடும் படலம் ஒரு வழியாக முடிவிற்கு வந்து விட்டது.  வாடகை வீடு என்ற போதிலும் என் எதிர்பார்ப்புகளையும், நான் வாழ்தலுக்கான அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது அந்த வீடு. பலவாறான பேச்சுகளையும்,  நிராகரிப்பையும் கேட்டிருந்த எனக்கு, “மேடம் உங்களுக்கா வீடு, திருமலை டீச்சர்ன்னு சொன்னார், நீங்க தாலுக்கா ஆபிஸ்ல தான வேலை பாக்குறீங்க,” என்று, ஆச்சர்யமாய் விசாரித்த மேல் போர்ஷன்காரர்,வாக்காளர் அட்டை வாங்க வந்த போது முன்பே அறிமுகமாகியிருந்தார்.  என் அம்மாவைச் சொல்லியிருப்பார்கள் டீச்சர் என்று. “இப்போது அம்மா ரிட்டயர்ட் ஆகிவிட்டார்கள்,” என்று முறுவலித்தேன் நான். […]

தினமும் என் பயணங்கள் – 13

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்பது பாவம் ஆகாதா? மனம் ஆயிரத் தெட்டுக் கேள்விகளை இதயத்தின் ஆழத்தைக் கிள்ளி வலி ஏற்படுத்தியபடியே வினா எழுப்பும், ஆரம்ப காலங்களில் ராஜகுருவை வெறுத்த நான், மகள் மடியில் விழுந்த காலக் கட்டங்களில், அவனின் அருகாமைக்காக மிகவும் ஏங்கினேன். அவன் வருகைக்காக வாயிலை நோக்கியபடிக் காத்திருந்த நாட்களும், அவன் கடிதத்திற்காக தபால்காரரை எதிர்பார்த்துத் திண்ணையில் வெயில் உறுத்த படுத்துத் துவண்ட நாட்களும் அதிகம். இன்றோ நாளையோ அவன் வந்து விடக்கூடும் என்ற […]

தினமும் என் பயணங்கள் – 12

This entry is part 2 of 19 in the series 13 ஏப்ரல் 2014

    சூரியன் உதிப்பதும் பின் மறைவதும் போல என் அனுதினப் பயணமும் சலிப்பில்லாத இயக்கம். உண்மையில் சூரியன் நிலைத்திருப்பதும் புவி அதனைச் சுற்றி வருவது அறிவியல் உண்மை என்ற போதிலும், பேச்சு வழக்கில் சூரியன் தான் உதிக்கிறது. பின் மறைகிறது.   அதனை ஒத்ததாகவே என் பயணமும் மாயை, பொய்க் கூற்றுதான். இதில் நான் எண்ணுவதும் பின் செயல்படுவதாகத் தோன்றினாலும், பெருவாரியான சம்பவங்களும், நிகழ்வுகளும் என் வசம் இருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று அடுக்கடுக்காக […]

தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

    இந்த வாழ்க்கையின் எந்திரத்தனத்தை எங்கே தொலைப்பது?   அது வந்து ஒட்டிக் கொள்கிற வேலம் பிசினை போல, வந்திருந்தவனைப் பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாகப் பெற்றவன்.   “என் வேலைய முடிச்சுடு உனக்குச் சீதாபழம் கொண்டார்ரேன்“ என்றான் தலையைச் சொரிந்தபடி. இது எங்கூட்டு வேலைக்காரி…என்று நிழற்படம் நீட்டும் போதே 32 பல்லும் சிரித்தது. சொன்ன போதே அவனிடத்தில் வெளிப்பட்டது என்ன? என்று வினா […]

தினமும் என் பயணங்கள் – 10

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாகத்தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் புதியவள். அதை உயிர்ப்பித்து அதில் தட்டச்சு செய்து சேமிப்பில் தேக்கி வைக்கவே கற்றிருந்தேன். அந்த வகையிலேயே என் கணிணி அறிவின் தரம். வேலைக்கு வந்த புதியது என்பதால் அவ்வளவாக யாரும் என்னைப் பணி செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்தியதில்லை. வேலை நேரமே எனக்கு பயிற்சி […]

தினம் என் பயணங்கள் -9

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் தனக்குள்ளே எண்ணங்களை தோற்றுவித்து தோற்றுவித்து பின் அழித்துக் கொள்கிறதா? மனம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதற்கு உருவமும், நிறமும், மணமும் இருக்கிறதா? தொடர்க் ​கேள்விகளின் அடுக்கடுக்கான பயணத்தோடே இன்றைய என் பயணமும் தொடர்கிறது.   “இந்த பிளாஸ்டிக் டப்பாவை மாத்திட்டுவா, இப்படியா ஏமாத்துவாங்க, எங்களை ஏமாத்தினா பரவாயில்ல, […]

தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

மனம் வின்னென்று ஒரு வலியைப் பரப்பிச் சென்றது. நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணிச் செய்தியைக் கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணைக் கமிஷனர்  உள்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.   வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான் போலும். சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதிகாரத்தைத் […]