author

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8

This entry is part 2 of 11 in the series 16 ஏப்ரல் 2017

    (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   8.           பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு? என்னைக் கிறுக்கன் என்று கூட நினைத்திருப்பீர்கள்தானே!  … இல்லை. இல்லவே இல்லை!  என் வருங்கால மருமகளுக்கு நான் வைத்த பரீட்சை அது!  மிகப் பிரமாதமாக அதில் நீ தேறிவிட்டாய் என் வருங்கால மருமகளே!” என்று கூறிப் புன்னகை […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7

This entry is part 2 of 12 in the series 9 ஏப்ரல் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி ஒரு நாற்காலியில் அமர்ந்து வார இதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறாள். வாசல் புறம் காலடியோசை கேட்கிறது. தலையை உயர்த்தித் திரும்பும் சுமதி நுழைவாயிலில் ஒரு கைப்பெட்டியுடன் நிற்கும் நெடிதுயர்ந்த மனிதரைப் பார்த்ததும் எழுந்து அங்கு செல்லுகிறாள். […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும் தலையசைத்துப் புன்னகை செய்கிறார். பதிலுக்குப் புன்னகை செய்தபின் இருவரும் பின்கட்டுக்குப் போய் முகம் கழுவித் துடைத்துக்கொண்டு திரும்பி வந்து சாப்பாட்டு மேஜையருகே அவருக்கு எதிரில் உட்காருகிறார்கள். செயற்கையான ஒரு புன்சிரிப்புடன் அவர்களை நோக்கித் தலையசைக்கும் ஜானகி அங்கு வந்து இருவருக்கும் முன்னால் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5

This entry is part 5 of 14 in the series 26 மார்ச் 2017

5.          சுமதியின் வீடு. அந்த வீட்டின் நடுக்கூடம் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய சுமாரான பரப்பளவில் இருக்கிறது. அதன் இடப் புறத்தில் குளியலறையும் நான்கு அடிகள் தள்ளி அடுக்களையும் அமைந்துள்ளன.  கூடத்தின் ஓர் ஓரத்தில் மெத்தை விரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது.  அதற்கு எதிர்ப்புற ஓரத்தில் ஒரு சாப்பாட்டு மரமேஜையும் நான்கு நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன.  அதன் அருகே ஒரு முக்காலியும் அதன் மீது ஒரு தொலைபேசியும் உள்ளன. சற்றுத் தள்ளி ஓர் அகன்ற […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4

This entry is part 1 of 17 in the series 19 மார்ச் 2017

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்க்கும் பிரகாஷ், “உங்கள் குரலில் ஏனிந்தக் கிண்டல்? ஒரு பெணணை விரும்புவது பெருங்குற்றமா என்ன?” என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்கிறான். “சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? ஒரு நண்பனைப் போல் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3

This entry is part 3 of 12 in the series 12 மார்ச் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   3.       காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து நிற்கிறார். “ஹேய்! என்ன இது? நாளைக்கு வரப்போவதாய்த் தொலைபேசியில் சொன்னாயே? இன்றைக்கே வந்து நிற்கிறாய்!  உன் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? நீ அதைப் பற்றித் தொலைபேசியில் சொல்லியிருந்திருக்கலாமே? நான் விமான நிலையத்துக்கு […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2

This entry is part 6 of 14 in the series 5 மார்ச் 2017

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 2. மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார் தந்தையும் மகனும் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள். நகுல் நாகரிகத்துடன் சமையல்கட்டு வாசற்படிக்கு நகர்ந்து சென்று நிற்கிறார். ஆவி பறக்கும் இட்டிலி, சட்டினி, சாம்பார் வகையறாக்கள் அவர்கள் நாவுகளில் உமிழ்நீர் துளிக்கச் செய்கின்றன. சாம்பாரில் தோய்த்த இட்டிலித் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

This entry is part 4 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 1. அந்த இரண்டு படுக்கையறைகளும் இடையே ஒரு தாழ்வாரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பரந்த அவ்விரு அறைகளின் தரை விரிப்புகளும் ஜன்னல் திரைச்சீலைகளின் வண்ணக்கலவையோடு ஒத்துப்போகும் வண்ணம் அதே பாணியில் அமைந்துள்ளன.  அவற்றுள் ஓர் அறையின் பெரிய கட்டிலின் மீது விரிக்கப்பட்டுள்ள கனத்த மெத்தை விரிப்பும் தரைவிரிப்பு, ஜன்னல் திரை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வண்ணச் சேர்க்கையோடு காணப்படுகின்றன. அந்த மெத்தையில் கனத்த உடம்புடன் அகலமும் நீளமுமாய் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர் மல்லாந்து […]