ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில் புரண்டு புரண்டு காற்றோடு மிதந்து போன தூக்கத்தை இமைகளின் முடிகளால் கட்டி இழுக்க எத்தனித்தேன்… என்னையே இழுக்கிற காற்றில் எதுவுமே நடக்கவில்லை. சுழலும் காற்று சூழ்ந்த இரவில் பற்பல பகற் கனவுகளோடு புரளும் நான்… குமரி எஸ். நீலகண்டன்
கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்… அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்… எதிரே வருபவர்களெல்லாம் அதில் தடுக்கி விழலாம். குழிகளையும் சாலையையும் பொறுத்து காயங்களும் ஏற்படலாம். மிகச் சிலரே அதில் தண்ணீர் ஊற்றி குழிகளை நிரப்பி செடி வளர்த்து அதில் ஒரு பூ பூப்பது வரை கூடவே இருந்து பராமரிப்பர்… ஆனாலும் அவனுக்கு அவன் மனதானது எப்போதும் அர்ப்ப ஆயுளுடன் சீர் செய்யப் படுகிற தார் […]
”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு’ எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே […]
கயிறு காதலில் பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது ஒற்றைக் காலில் பம்பரம் சுற்றிச் சுற்றி வந்தது துணையைத் தேடி. இத்து இத்து கயிறு செத்துப் போகும் நிலையிலும் முனை மழுங்கிய பம்பரம் முனைந்தது தன் காதல் சுற்றை இயன்றவரை. களித்தனர் தோழர்கள் கயிற்றோடு பம்பரம் களித்தக் காதல் விளையாட்டில். குமரி எஸ். நீலகண்டன்