மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன் ( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக கடலூரில் வசிக்கத் தொடங்கி, பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் வாழ்க்கை கடலூர் முகவரியோடு தொடர்கிறது. கடுமையான நிதிச்சிக்கலைச் சமாளித்து ’சங்கு’ என்கிற பெயரில் ஒரு சிற்றிதழை நடத்தி வருகிறார். தொடக்கக்காலத்தில் மரபுக்கவிஞராகவும் […]
பாவண்ணன் பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது. ஆனால் கண்களைத் திறக்கவில்லை. கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார். வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுச் சென்று மூன்றுமணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது. விரைவாகவே எழுந்துவிடுவார் என்றும் பசிக்கு ஏதாவது கேட்டால் சூடான கஞ்சித் தண்ணீர் மட்டும் தந்தால் போதும் என்றும் வைத்தியர் சொல்லியிருந்தார். சில கணங்களுக்குப் பிறகு “வீர்ப்பா வீர்ப்பா” என அவருடைய குரல் மட்டும் எழுந்தது. தரையில் உட்கார்ந்து அவருடைய பாதங்களைத் தேய்த்து சூடு உண்டாக்கியபடி இருந்த […]
மொழி ததும்பும் மனம் வாய்க்கப் பெறுவது ஒரு பெரும்பேறு. சட்டென்று வெள்ளம் பொங்கிப் பெருகும் நாட்களில் கிணற்றின் மேல்விளிம்புவரைக்கும் உயர்ந்துவந்து ததும்பும் தண்ணீர்போல மொழி மனத்தில் பொங்கித் ததும்புகிறது. அத்தருணம் ஒரு படைப்பாளியின் வாழ்வில் ஓர் அபூர்வத்தருணம். மொழி பழகும் ஒரு குழந்தை கண்ணில் படுகிற ஒவ்வொன்றுக்கும் தன் போக்கில் ஒரு பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தி அழைக்கத் தொடங்குவதுபோல, அந்த அபூர்வத்தருணத்தில் படைப்பாளி தன் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பார்க்கிறான். புதிதாக அடையாளப்படுத்த முனைகிறான். புதிய […]
இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் […]
மதியழகனின் ’வியூகம் கொள்ளும் காய்கள்’ சுமக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் இளம்பருவத்து நினைவுகள் சுழலச்சுழல, அவற்றை அசைபோடுவதையே இத்தொகுப்பின் மையப்போக்காக எடுத்துக்கொள்ளலாம். அகலாத இந்த நினைவுகள் பலவகையானவை. சாதியை முன்னிட்டு எழும் நினைவுகள். காதலை முன்னிட்டு எழும் நினைவுகள். களிப்பான காட்சிகளை முன்னிட்டு எழும் நினைவுகள். மனிதர்களை முன்னிட்டு எழும் நினைவுகள். பாதிக்கும் மேற்பட்டவை இப்படிப்பட்டவை. ஒரு கவிஞனாக, தான் பயன்படுத்தும் சொல்லின்மீது கவனமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கிறார் மிக இயற்கையான வீச்சோடு சொற்களைப் பயன்படுத்தினாலும் எல்லாத் […]
புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ‘வெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு ‘மீன்கள் துள்ளும் நிசி’. காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் […]
கலாப்ரியாவின் சிறப்பான முன்னுரையோடு செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. நான்காவது சிங்கம் என்னும் தலைப்பின் வசீகரம், அசோக ஸ்தூபியின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் சிங்கத்தைப்பற்றிய கற்பனையைத் தூண்டுகிறது. கவிதையைக்கூட நான்காவது சிங்கத்தைப் பார்க்கமுடியாத ஒரு ஸ்தூபி என்று சொல்லலாம். அந்த எண்ணத்துக்கு வலிமை சேர்ப்பதுபோன்ற கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எழுதி எழுதி தமக்குரிய ஒரு கவிதைமொழியை ஜெகதீசன் கண்டடைந்துள்ளார் என்று சொல்லலாம். பல தளங்களைநோக்கி விரிவடையும் தன்மை கொண்ட ஒரு கவிதை முகம் […]
எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த […]
”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப் படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?” என்று கேட்டார். “உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச் சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை […]
பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் […]