மலைகளின் இளவரசி கொடைக்கானல். தமிழகத்தில் தேனிலவுத் தம்பதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயற்கை வரம். கோக்கர்ஸ் வாக், கொடைச்சாலையின் தென் புறம், செங்குத்தான சரிவுகளின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள், 1கி.மீ தொலைவுள்ள குறுகிய நடைபாதையின் இரு புறமும் இயற்கை அன்னையின் இன்ப ஊற்று உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். பனி மூட்டம் இல்லாத நாட்களில் தென்புறம் டால்பினின் மூக்கு, பாம்பர் பள்ளத்தாக்கு பெரியகுளம் மற்றும் மதுரை நகரின் பறவைக்கண் காட்சி, என அனைத்தும் இன்னொரு உலகிற்கே இட்டுச்செல்லும். ”அனாமிகா, என்னம்மா.. […]
இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர். ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன். தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு தரமான கப்பலிது; கோளாறில் உள்ளது உமது உந்தி மட்டுமே. அடைய முடியாத எந்த ஒன்றிற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ அதுவே, நமக்கு ஏற்கனவே கிடைத்த ஒன்றைக் காட்டிலும் உயிரைப் போன்ற உன்னதமானதாக தோற்றமளிக்கும். […]
வாலிகையும் நுரையும் (14) பவள சங்கரி பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல. பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை: ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக் காட்டிலும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே உள்ளது. உம் முன்னால் தெளிவானதொரு கண்ணாடியாக யாம் நிற்கும் தருணம், நீவிர் எம்மை உறுத்துப் பார்த்து உம் உருவத்தையேக் கண்டீர் ஆங்கே… பின் நீவிர், “யான் உம்மை விரும்புகிறேன்” […]
இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும். எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்.. ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில் ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்.. நாம் அதை அனுபவிக்கும் வெகு […]
பவள சங்கரி காலை நேர பரபரப்பு ஏதுமில்லாமல் ஒரு மயான அமைதி.. சரியான இடைவெளியில் டொக்.. டொக்.. என்று செக்யூரிட்டி சிஸ்டத்தின் சத்தம் மட்டும் பலமாக ஒலிப்பது போல இருந்தது. வீடு முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம். புகை வரும் திசை நோக்கிச் சென்ற கால்கள் பூஜை அறையில் ஜெகஜோதியாக விளக்குகளும், புத்தம் புது மலர்களின் மென்மணத்துடன் பளபளவென துடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியிலான விக்கிரகங்கள். வரவேற்பறையில் அலங்காரமாக வீற்றிருக்கும் புத்தர் மற்றும், நடராசர் சிலைகளும்கூட குறைவில்லாமல் இருந்தது. […]
இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு த்டையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத் துறந்தவர் எவரோ அவரே துறவி. சான்றோருக்கும், கவிவாணருக்கும் இடையே அங்கோர் பச்சைப்பசும்புல்வெளி இருக்கிறது; அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிறாரவர்; கவிவாணரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார். இருப்பினும் சந்தையில் தங்கள் தலைகளைக் கூடையில் சுமந்து கொண்டு, ”ஞானம்! விற்பனைக்கு ஞானம்!” எனக்கூவித் திரியுமந்த தத்துவ ஞானிகளைக் கண்டேன் யான். பாவமந்த தத்துவ ஞானிகள்’. தம் இதயத்திற்கு உணவளிக்கும் பொருட்டு தம் […]
இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி விஞ்ஞானமோ இல்லை. யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது. எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருபவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர். அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன். இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது. புழுக்கள் […]
Sand And Foam – Khalil Gibran (10) அவனுடைய சதைப்பிண்டத்திற்கு ஏறுதல் கடினமாவதுடன் அச்சுமை அவனுடைய பாதையையும் நீண்டதாக்கும். மேலும் உம்முடைய உணங்குதலில், அவனுடைய பிண்டம் மேல்நோக்கி புடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவனுக்கோர் அடி எடுக்க உதவும்; அது உம்மை மேலும் துரிதமாக்கும். ஒருவரைப் பற்றிய உம்முடைய அறிதலுக்கப்பால் எவரைப் பற்றியும் உம்மால் எடைபோட இயலாது, மேலும் உம்முடைய ஞானம் எத்துனை சிறிதன்றோ. யான் அடக்குமுறைக்குப் போதிக்குமோர் வெற்றிவீரனுக்குச் செவி […]
வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம். பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான். மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான். பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர் நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்; மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன் அதைச் செய்கிறோம். உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த […]
சுய – நுகர்வின் விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும் ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் , யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான். பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்? உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; […]