author

பூக்களாய்ப் பிடித்தவை

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பது போல மெல்லப் பின்பக்கம் போய் அடிக்கமுடியவில்லை. ஈயைப் பிடிக்கும் உள்ளங்கைக் குழித்த சாகசமும் பலன் தரவில்லை. சாட்டையடித்து மெய்வருத்திக்கொள்ளும் கழைக்கூத்தாடி போல கைகளால்மாறி மாறி அடித்துக்கொண்டாலும் தப்பித்து விடுகின்றன கொசுக்கள். சரி, கடித்துவிட்டுப்போகட்டும் என இயலாமையில் சோர்ந்து கண்ணயர்ந்த பின், ரத்தம் குடித்த போதையில் நகர முடியாது நான் புரண்டு படுத்ததில் நசுங்கி நேர்ந்த அவற்றின் மரணம் பெயர் தெரியாத குட்டிச்சிகப்புப் பூக்களாய்ச் சிதறிக்கிடக்கும் மறு நாள் காலையில் என் படுக்கை விரிப்பில். […]

எனக்கு வந்த கடிதம்

This entry is part 3 of 32 in the series 15 ஜூலை 2012

ரமணி திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி உணவு சாலையில் வேலையில் இருந்தார். நல்ல வெங்கலக்குரல் அவருக்கு. தள்ளித் தள்ளி நட்டுவைத்த மரங்கள் போல சில பற்கள் மாத்திரம் இருக்கும் அவர் வாய்க்குள். எப்போது அவர் பொன்மலைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எங்களுக்கு ஏதாவது தின்பதற்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ” மாவு மில் மாதிரி என்னடா வாய் அரைச்சுண்டே இருக்கு ” என்று […]

அன்பிற்குப் பாத்திரம்

This entry is part 30 of 32 in the series 1 ஜூலை 2012

  என் நெடு  நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது.  நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு  மதிய சாப்பாடு  எடுத்துச் செல்லும் அலுமினிய டிஃபன் பாக்ஸில் அடைக்கமுடியாத அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டதால் என் அக்கா பள்ளிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த ( எவர் ) சில்வர் டிஃபன்பாக்ஸ் அன்று எனக்குப் பள்ளிக்கு எடுத்துச் செல்லக்  கிடைத்திருந்தது . ரொம்பச் சின்னதாகவும் இல்லாமல் அதேசமயத்தில் ஒரு சம்புடம் போல இருந்தாலும் ரொம்பப் பெரியதாகவும் இல்லாமல் அதன் உடம்பில் […]

கல்வித் தாத்தா

This entry is part 38 of 43 in the series 17 ஜூன் 2012

ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் வாரத்தில் புத்தகம் நோட்டு எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கழிந்தபின் அடுத்த வாரத்தில் என்ன நோட்டு எத்தனை பக்கங்களில் இருக்கவேண்டும் என்று எழுதிப்போட்டதை என் பெரியண்ணாவிடம் நானும் என் தம்பியும் கலெக்டரிடம் மனுகொடுத்தபின் காத்திருப்பது போலக் காத்திருந்தோம். போன வருடத்தைய நோட்டுகளில் மிச்சமிருந்த பேப்பர்களைக் கிழித்துத் தைக்கச்சொன்னதில் என் பழைய நோட்டுகளில்தான் அதிகம் எழுதாமல் வெள்ளைத் தாள்கள் மிச்சமிருந்ததால், அவற்றைக் கொண்டு தைத்த நோட்டுகளை எனக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்றும் புதிதாக […]

காசி யாத்திரை

This entry is part 39 of 41 in the series 10 ஜூன் 2012

  காசி ,   எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் இந்தப் பையனை ஒங்க க்ளாசில ஒக்காரவக்கச் சொன்னாரு ” என்று காசியின் முதுகில் கையைவைத்து மெதுவாகத் தள்ளிவிட்டான். தயங்கியபடியே காசி வகுப்பில் நுழைந்துகொண்டிருந்த பொழுது, நடராஜன் சார், பியூன் ராஜனைப் […]

தடயம்

This entry is part 4 of 28 in the series 3 ஜூன் 2012

    மழை ஈரத்தில் பூமி பதிந்துகொண்ட பாத அடையாளங்கள் போல எல்லா நினைவுகளும் காலத்தில் தேங்கி நிற்கவில்லை.   ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற உறைந்த வெள்ளைப் புகை உருவாக்கின ஒற்றையடிப்பாதையை சூரியன் உருகிக் கரைத்துவிடுவதுபோல   என் வாழ்க்கை வனாந்தரத்தின் ப்ரத்யேக ஸ்வரங்களைத் தொடுத்து விடுமுன்னர் கலைத்துவிடுகிறது காலம்.   கர்ப்ப வாசம் தேடி இப்போது அலையும் மனமும் விட்டுச் செல்லவில்லை எந்தச் சுவட்டையும்.     —  ரமணி

தொலைந்துபோன கோடை

This entry is part 2 of 41 in the series 13 மே 2012

மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ‘ ஒவர் ஆயிலிங்க் ‘ என்றால் என்ன என்று கேட்டபோது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ” ம்! உன் தலை ” என்றார். பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்குக் காலையில் நான் தின்றுகொண்டிருந்த கடலையைக் […]

முன்னால் வந்தவன்

This entry is part 26 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இப்படி ஒரு தடாலடி வேலையை  எலி என அறியப்படும் ராமகிருஷ்ணன் செய்துவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருமுறையும் எப்படியோ என்னை அறியாது கூட இருக்கும் நண்பர்கள் செய்துவிடும் திருட்டு அல்லது சில்மிஷங்களில் மனசே இல்லாமல் தலையைக்கொடுத்துத் துன்பம்  ஏற்கிற ஜன்மமாகவே ஏன் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை.  ராமகிருஷ்ணன், கூட இருந்தே குழிபறிக்கிறவன் என்பதால் காரணப்பெயராக எலி என்று மிகச்சரியான பெயர் வாங்கி,  அப்படி அழைக்கப்படுவதால் எந்தவித கோபமும் கொள்ளாதவனாகவே இருந்தான்.  அவர்கள் வீட்டிலேயே  கூட அவனை எலி […]

விபத்தில் வாழ்க்கை

This entry is part 43 of 44 in the series 22 ஏப்ரல் 2012

    எண்ணங்களின் கனத்தில் உடைந்து விழுந்துவிட்டேனா என்று தெரியவில்லை. இல்லை மௌனம்தான் பெருஞ்சுமையாய் அழுத்திற்றோ என்னவோ!   ரயில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல என் எண்ணங்களும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்டு காயப்பட்டுக் கிடக்கிறது.   எனினும் தூரத்துச் சந்திரனோடு பயணித்து என் விடியலைக் கண்டுவிடலாம் என்ற என் பால்வீதிக் கனவைக் கவிதையாக்கிக் கொடுத்தேன்.   நம்பிக்கைகள் அடர்ந்த காட்டில் கடவுளை முன்னிறுத்தி நான் உலகத்திற்கான கனவு விடியலை என் வாழ்க்கையின் பாடலாகக் காட்டிவிட்டதாகப் பெருமை பேசுகிறார்கள்! […]

வந்தவர்கள்

This entry is part 40 of 44 in the series 15 ஏப்ரல் 2012

” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ ( இந்தக்காலத்து டிப்ளமா இன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயரிங்க் ) படித்துவிட்டு அங்கேயே ஏதோ பட்டறையில் சூப்பர்வைசராக இருந்தவனை என் மாமா வலுக்கட்டாயமாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பில் கலாசி என்னும் கடை நிலைப் பணிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். […]