2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘அபராஜிதன்’ நாவலுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு திராவிடியன் ஸ்டாக் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பான ‘அரேபியப் பெண்களின் கதைகள்’ […]
வணக்கம். ‘திருமதி. பெரேரா’ எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள ‘ஆதிரை பதிப்பகம்’ இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ஒரு நூலாக வெளிவருவதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ‘திருமதி. பெரேரா’ எனும் இந்தத் தொகுப்பில் இதுவரையில் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ‘திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவல் போல இந்தத் தொகுப்பை நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு […]
– எம். ரிஷான் ஷெரீப் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசிகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த […]
‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பு பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று ‘ நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?’ போலச் செய்தேன்’ ‘ நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ […]
‘எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல […]
நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில் தென்படாத வர்ணக் கறையைப் போல மிகப் பெரிதாகவும் கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும் இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய நானறியாத ஏதோவொன்று என்னிடம் இந்தளவு தனிமை எங்கிருந்துதான் உதித்ததோ எனக்குள்ளே மூழ்கிப் போன ஒன்று எப்படி உனக்குரியதாயிற்றோ எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய் இந்தளவு துயர் தந்து போக? – காஞ்சனா அமிலானி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் பிறகு இலங்கையானது பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஒரு சாஸ்திரக்காரர் கூறிய ஆரூடம் பலித்தது போல, இலங்கையானது பல தரப்பட்ட நெருக்கடிகளைத் தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் அரசுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றியீட்டியதுவும், இன்னும் முடிவுறாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் போராட்டங்களும், இலங்கையின் ஆகாரங்களைப் பாதித்திருக்கும் ஆசனிக் விஷம் சம்பந்தமான பிரச்சினைகளும், விலைவாசி ஏற்றங்களுக்காகக் கிளர்ந்தெழும் மக்களும், டெங்கு நோய் மரணங்களும் […]
காலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும் வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம் உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது எங்கும் தப்பிப் போய்விடாது எனினும் வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது […]
– கே.சஞ்சீவ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம். வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன. அம் மக்களின் முகங்களில் […]