‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது முடிவற்றதென அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது….. முற்றுப்புள்ளி யுண்மையில் அடுத்திரு புள்ளிகளை யருவமாய்ப் பெற்றிருப்பதென சற்றும் பொய்யற்ற தொனியில் நற்றமிழ்க்கவிதையொன்று நடுமுற்றத்திலொரு மேடையில் எடுத்துரைரைத்தபோது சற்றும் தாமதியாதென்னிரு கைகள் தட்டத்தொடங்கின. பற்றின் பரவசம் அடியாழ மனந்தொற்ற….. நுழைவாயில் முன்கூடம் உள்ளறை, பின்கட்டு, விடைபெறல், வெளியேறல் _ எல்லாமிருக்கும் முப்புறம் சூழ்ந்த நீர்ப்பெருக்கிலும் எனக் கலங்கித்தெளிந்துய்யக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது காலம்.
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு) எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை நான்கைந்து பொட்டலங்களாகப் பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம். சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல் அல்லது, சித்தி தொடங்கி வாணி ராணி சாகாமெகா சீரியல்போல். மறந்துவிடாமலிருக்க அவற்றின்மேல் குறியீடுகள் அல்லது குறிப்புகள் தந்தால் நலம். கூடவே, செய்முறைவிளக்கங்களுமிருந்தால் மிகவும் உதவியாயிருக்கும் மற்றவர்களுக்கு; ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் உங்களுக்குமேகூட. என்றாலும் பொட்டலங்களின் பட்டியல்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் மனதில் உருப்போட்டுக்கொண்டுவிடுவதே […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது? நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால் கண்களைத் துடைத்துவிடக்கூடும்…. கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள் சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும் மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து வாய்நிறைய சிரிக்கக்கூடும்…. நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால் தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்….. அதுவும் அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _ அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் அதே யதே நுண்வெளிகளில்….. அவர்கள் செய்வது சமூகப்பணி; அவர்கள் காட்டுவது மனிதநேயம். அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள் அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே. (ii) மெத்தப்படித்தவர் அவர் _ சத்தம்போட்டுத் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் அதே யதே நுண்வெளிகளில்….. அவர்கள் செய்வது சமூகப்பணி; அவர்கள் காட்டுவது மனிதநேயம். அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள் அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே. (ii) மெத்தப்படித்தவர் அவர் _ […]
பிரதி ”எதற்கு ? வேண்டாம் _ போதும்.” உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி; கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி; கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது கவிதை கன்னங்களில் நீர் படிய. பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட ஒளிவட்டங்களுக்கு அப்பால் காரிருளார்ந்த நள்ளிரவில் மினுங்கிக்கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள். கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் பிறகான கைத்தட்டல்களுக்கு மேலாய் ககனவெளியில் கலந்திருக்கின்றன […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் அரைகுறை ரசவாதம் ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும் இறுகிய கருங்கல்லாகவும் காலம்…. நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு என்னால் முடிந்த உருவங்களையெல்லாம் வனைந்துபார்க்கிறேன். நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம் நான் குருவியாய் செதுக்க முனைந்து குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த உருண்டையைப் பார்த்து. கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது. மால் கற்றது கையளவெனினும் கடல்முழுக்கப் […]
நிலா என்னைத் தேடிவந்ததுண்டு அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா? மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன். அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும். அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்கும். இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்ததுபோலிருந்ததொரு காலம். நானே நிலவாகி நின்றதொரு காலம் கண்ணால் காற்றேணி கட்டி நள்ளிரவில் நிலவில் வலம் வந்ததொரு காலம் நிலவிறங்கி நெருங்கிவந்து என் நெஞ்சுருக தலைவருடித் தந்ததொரு காலம். காணாமல் போய்விட்ட […]
தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது. பலசமயங்களில் இல்லை. இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது ’போனால் போகட்டும் போடா’…… ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது; நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில் உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..? அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _ மௌனமாய் _ மகிழ்ந்து […]
ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின் திருப்பெயர்களைச் செதுக்கியபடி; சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி; சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி. சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப் பலகோணங்களில் படமெடுத்தபடி….. உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை. மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா? அறியேன். வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி விபத்தாயமைந்த இருப்பா? […]