(லதா ராமகிருஷ்ணன்) உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம் ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக் கொண்டவாறு சிலபலர்….. பெற்றெடுத்த பிள்ளையாய் தத்தெடுத்து முத்தம் கொடுக்க அல்லது குற்றேவல்காரராய் பாவித்து எத்தித் தள்ள. இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம் இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும் கால்களின் வளைநகங்கள் கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும், […]
(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த தோழி நீலா அல்லது லீலா. நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப் பகையாளிபோல் பார்த்தபடி “பார்த்தே தீரவேண்டும்; நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்- உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்” என்றாள். பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில் கிளப் டான்ஸர்(?) […]
(லதா ராமகிருஷ்ணன்) ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும் பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _ இரவுபகல் பாராது விரும்பிய நேரமெல்லாம் பாய்ந்து பிடுங்கி பற்களால் பெருங்கூர் வளைநகங்களால் பிய்த்தும் பிறாண்டியும் தானியங்கள் நிறைந்திருக்கும் கோணிப்பைகள் பால் பாக்கெட்டுகள் அந்த அறையில் சலவை செய்யப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புதுத்துணிமணிகள் பார்த்துப் பார்த்து கவனமாய் எழுதிய கவிதைகள் கணக்குவழக்குகள் பத்திரப்படுத்திய […]
(லதா ராமகிருஷ்ணன்) நான்கைந்து வருடங்களுக்கு முன் அந்த உண்மையைச் சொன்னவரை ‘நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று சீறிப் படமெடுத்தாடியவர் இன்று அதையே உலகெங்கும் முதன் முதலாய் தன் உள்ளம் மட்டுமே உணர்ந்ததொரு பேருண்மையாய் உச்சஸ்தாயியில் முழங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பது இதுவல்லவே என்று அரற்றிய பாரதியாரின் ஆவியை வாணி-ராணி ராதிகாவின் மெகாத்தொடர் அடியாள் பேயோட்டியின் உதவியோடு விரட்டிவிட்டதைப் பார்த்து வெலவெலத்துப் போன நிஜப்பாம்பு நந்தினி நாகினியாக […]
(லதா ராமகிருஷ்ணன்) யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் பலநேரமும்……. மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில் தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே அதிகம் என்றால் புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள் தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். . விரும்பும்வகையில் வாக்கியங்களை வெட்டித்தட்டி இட்டுகட்டிச் செய்யப்படும் ’எடிட்டிங்’ வேலைகளில் எகிறும் ’டிஆர்பி’ ரேட்டிங்குகள். அது பொய்யில்லையா என்றால் வாய்மை எனப்படுவது […]
சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது. ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு பாராது. உள்வட்ட எதிரிகள் தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் துல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள் ஊரில் நிலவும் குழப்பங்கள் துயரநிகழ்வுகள் இயற்கைச்சீற்றங்கள் […]
கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு கிளைபிரியும் பாதைகள் _ அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அஃறிணை உயர்திணைகள்_ அசுர, தேவ கணங்கள் அர்த்தனர்த்தங்கள்_ அதிரூப நர்த்தனங்கள் ஆவென்று வாய்பிளந்திருக்கும் அதலபாதாளங்கள் ’வா, சற்றே உட்கார்ந்து இளைப்பாறு’ என்று அன்போடு அழைக்கும் சுமைதாங்கிக்கற்கள் அத்தனையும் அத்துப்படி. அகவொளியில் துலங்குமொரு வரைபடம் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன இன்னும் பலரைவிட ஒரு மண்ணாந்தையும் தன்னை மேலானவராகக்காட்டிக்கொள்ள மிக எளிய வழி அவர்களைப் பைத்தியமாக முத்திரை குத்திவிடல்.
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே?” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்? – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” “கேளடா மானிடா, உன் கோபாவேசமெல்லாம் எனக்குக் கால்தூசு” ”வாழையடி வாழையாக வந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளமாட்டேன் என்று இப்படிப் பிடிவாதம் பிடிக்கலாமா? “தோ, தோ நாய்க்குட்டி போதும் எனக்கு. காட்டுவிலங்குகளை கண்ணிவைத்து வேட்டையாடினால் கொள்ளைக் காசு!” பேழை நிறைய பொற்காசுகளிருந்தால் மட்டும் பெரியவனாகிவிடுவாயா _ சின்னராசு?” […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை…… மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன. வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ வேந்தரா என்ன – வெறும் மொழிபெயர்ப்பாளர்தானே? கனன்றெரியும் விழிகளில் குளிர்நீரூற்றிக்கொண்டு தொடர்ந்தார் தன் தேடலை. எத்தனையாவது முறையோ….. ஏகாந்தமாய் எங்கோவொரு மலைமுகட்டோரம் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தவரை ’என்ன எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கிறாய் வெண்ணைவெட்டி மொழிபெயர்ப்பாளரே’ என்று பின்னிருந்தொருவன் கேட்டான், கையில் குண்டாந்தடியோடு. […]