வளர்ந்த குழந்தையை இடுப்பிலிடுக்கிக்கொண்டவள் உணவூட்டினாள்; உடுப்பு மாட்டிவிட்டாள்; ’ஆடுரா ராமா ஆடுரா ராமா ’ என்று அன்றாடம் பாடிப்பாடி ஆன விலங்கிட்டு வானரமாக்கிவிட்டாள். குதித்தபடி குட்டிக்கரணம் போட்டவாறிருக்கும் வளர்ந்த பிள்ளை சில சமயங்களில் சொன்ன பேச்சைக் கேட்பதில்லையென்று கல்லுரலிலும் கட்டிவைக்கிறாள். மண்ணைத் தின்னாமலிருக்க மூக்கின் கீழ் மிகப்பெரிய பிளாஸ்திரி ஒட்டிவைத்திருக்கிறாள். காணக்கிடைக்குமோ வளர்ந்த குழந்தை வாயிலும் அண்டசராசரத்திருவுருவை. .. என்றேனும் எண்ணிப்பார்த்திருப்பாளோ அம்மங்கைத் தெரிவை.
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) காதில் பஞ்சடைத்து இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன் பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி…. பட்டாசுச் சப்தம் பயமுறுத்த தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம் நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு அதுவாகவே யிருக்கும். சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு நகைப்புக்காளாகி செவிபொத்தி, புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம் குளியறையில். கிண்டல் குட்டு கிள்ளு எல்லாமே என் மேல் அக்கறை கொண்டோரின் எதிர்வினைகளாக…. ஒருபோது பாவம் பார்ப்பார்கள்; ஒருபோது பிடித்திழுத்துவந்து வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) விழியும் செவியும் பழுதாகிவிட்ட வாழ்வில் விதித்ததெல்லாம் அறையின் ஓர் ஓரமாய்க் கட்டிலில் அமர்ந்திருத்தல்; அவ்வப்போது சுவரொரு பாதையாக கையைக் காலாக்கி அடிக்கு அடி விரல்களை அழுந்தப் பதித்து கழிவறைக்குப் போய்வருதல்; உணவுநேரத்தில் அவசரமாய் ருசித்துச் சாப்பிட்டுப் பின் நீட்டிப் படுத்து நித்திரையில் அமிழ்ந்துபோதல். மிக அருகே சென்று ஆயிரம் ‘வாட்’ குரலெடுத்துக் கத்தி என் வரவை உணர்த்தினால் “அம்மா சௌக்கியமா?” என்பார் அதி சன்னக் குரலில். விரல்களில் நகம்வெட்டும்போது ஒருமுறை சதை […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) எது உன் உயரம்? குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா? எது உன் உயரம்? அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின் தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா? எது உன் உயரம்? விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து சிறுகூண்டிலடைத்துவிட்டு தட்டுச்சோறு தந்து அதன் ரட்சகன் என்று மார்தட்டிக்கொள்வதா? எது உன் உயரம்? மொட்டைத்தலையைப் பார்த்து எள்ளிநகையாடிவிட்டு உன் வழுக்கை அழுக்கை மட்டும் எண்ணிப்பார்க்க மறுப்பதா? […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” என்கிறாய்; ”நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்ல” என்கிறாய். “உன் கால்கள் கால்களெனில் என்னுடையவை சிறகுகள்” என்கிறாய்; உன் மனத்துணிவு ஒரு கூடையெனில் எனதோ கடற்கரைமணலளவு” என்கிறாய்……. உன் என்னிடையேயான தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்: என்னை நீ வெல்லவே யியலாது _ ஏனெனில் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பார்த்த நீயல்லாத நீ பார்க்கும் நானற்ற நான் தான் நான் தானா வலி ஆணா பெண்ணா விடை தெரிந்து ஆவதென்ன காலத்தீயில் கடையெரிந்து கரிந்து உடல் வெந்து சாம்பலாகிப் போன பின் வந்ததென்ன வருவதென்ன…. தலையென்ன காலென்ன முண்டமென்ன குலைகுலையாய் முந்திரிக்கா காய்த்த மரத்தைக் கண்டதுண்டமாய் வெட்டிய கை நட்ட செடிகளும் நிறையவே உண்டுதான். சுட்ட பழமும் சுடாத பழமும் கட்புலனுக்கானதோ? அவரவர் கைப்பக்குவமோ….. […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பேசிக்கொண்டேயிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும். இப்படித்தான் உண்மையான சமத்துவம்பேணவேண்டும். இனியேனும் தெரிந்துகொள். உன் நாவை அறுத்துக்கொடுத்துவிடு அன்பளிப்பாய். பண்பாளர் நான். கண்ணால் கண்டால்தானா? கற்பனையில் கண்டுனது அண்டைவீட்டுப்பெண்ணை அவிசாரியாக்கி குரலெடுத்துக்கூவுவேன் உரக்க இன்னும் உரக்க ஆமாம்சாமிகளாகவேண்டும் நீயும் அவள் கணவனும். உன் வழிகாட்டியை அத்தனை இழித்துப் பழிப்பேன் நான்; கிழிகிழியென என் தலைவரைக் கிழிக்க எழுந்தாலோ பிற்போக்குவாதி நீ – யுனக்கிருப்பதோ பெருவியாதி. என் முழக்கங்களுக்கெல்லாம் என்றும் […]
2.யாவரும் கேளி(ளீ)ர் நாராசம் எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம் உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே…. ஆயாசம் பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்; பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்; பெண்களைப் பெண்களுக்காகப் பேசச் செய்கிறோம் என்றார்கள் பீடமேறிகள் பலவகை என்றேன் பிடிசாபம் என்று பகைத்துச் சென்றார்கள். வாசம் அன்னார் பேசும் அபத்தங்களையும் முன்மொழிந்து வழிமொழிந்தால் மட்டுமே என்னை அங்கீகரிப்பது என்றிருப்பவரிடமிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் நேரம் பட்டமரத்திலிருந்தும் […]
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) 1.தொழில்நுட்பம் காசுள்ளவர்க்கும் காவல்படை வைத்திருப்பவர்க்கும் காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ எப்போதும் தேவை எளிய கவிஞர்களின் தலைகள். தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை. ரசனை பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை ஏந்திவந்தார் நீந்தத் தெரிந்தவனை மூழ்கடிப்பதே குறியாய் வண்டை வண்டையாய் தொண்டைத்தண்ணீர் வற்ற ஏசிமுடிக்க. கூசாத மனசாட்சி வாய்த்த நீசர்கள் கூலிக்குப் போட்டுத்தள்ளுகிறவர்களைக் காட்டிலும் மோசமானவர்கள். வாசிப்பு அடிக்க அடிக்க அம்மியும் நகரும் […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய் எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்; (ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா புலம்பிக்கொண்டிருப்பார் அது அவர் சொல்லிமுடியாச்சொந்தக்கதை சோகக்கதைகளில் ஒன்று) குறுக்குவழியில் சென்று சேமித்த நேரத்தை ஆனானப்பட்ட மேதைகளைப் பழிப்பதில் செலவழிப்பார். நாடு கெட்டுப்போச்சு என்பார் நாடென்பதை வாலாட்டும் நாயாக பாவிப்பார். குரலற்றவர்களின் குரல் நான் என்பார் ’அறிவற்றவர்களின் அறிவுநான்’ என்ற அகங்காரம் தொனிக்க. தானா ரீனா வந்தால் தங்கம் கொட்டும் என்பார் (இவருடைய கஜானாவில் சேர்ந்தால் […]