author

ஏற்புரை

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

1.   பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை நிறைந்தவர்களே…. ஆனாலும் ஒலிபெருக்கி மூலம் விரயமாக்கப்படும் வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் மனது. அவையெங்கும் இறைபடும் வார்த்தைகளின் மேல் காலடிகள் அழுந்தப் பதிந்து, அரைத்து மிதித்து உடைத்து நசுக்கி எத்தித்தள்ளிப்போகும் காட்சி யென்றுமே நிலைகுலையச் செய்வது. […]

விளைவு

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள் _ அன்பின் பெயரால். ஒரு கதாநாயகன் ஒன்பது கயவர்களை இருநூறாண்டுகளாக ஓயாமல் உருட்டிப் புரட்டிக்கொண்டேயிருக்கிறான். தெருவோர டாஸ்மாக் கடையில், நெருங்கிய நண்பர்களில் ஏழுபேர் கரங்கோர்த்து மிதித்துக்கொல்கிறார்கள் எட்டாமவனை. ஒளியூடகங்களில் ஆடல் என்ற பெயரில் பூமி […]

துளிவெள்ளக்குமிழ்கள்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

’ரிஷி’ (1) பட்டுப்போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரியும் நிலையில் இட்ட தெய்வம் நேரில் வந்ததேபோல் மொட்டவிழ்ந்து விரிந்திருந்தன மலர்கள் சில. கண்வழி நுகரக்கிடைத்த நறுமணத்தின் கிறக்கத்தில் கணத்தில் இடம் மாறி ‘வேண்டும் வரம் கேள்’ என்று இறைவனிடம் சொல்ல எண்ணி அண்ணாந்தேன் நான் ஆகாயமெங்கும் சிறகடித்துக்கொண்டிருந்தேன்! (2) முதன்முறையாய் பார்த்துக்கொள்கிறோம் என்னிடம் பாய்ந்தோடி வந்தது குழந்தை. விட்டகுறை தொட்ட குறையாய் இது என்ன ஒட்டுதல்? அள்ளியெடுத்துப் பின் யாரோவாகிவிட்டால் எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்… எப்படி எதிர்கொள்வது […]

’ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

அலைவரிசை _ 1 காரணத்தைப்பாருங்கள்; காரணம்முக்கியம். காரணத்தைக்கூறுங்கள்; காரணம்முக்கியம். உண்மைக்காரணம், பொய்க்காரணம் என்ற பாகுபாடுகள் முக்கியமல்ல. உரைக்கப்பட வேண்டும் காரணம். அதுமட்டுமே முக்கியம். காரணம் கற்பிக்கப்படுமா? யார் சொன்னது? கூறுகட்டி அல்லது வேறு வேறு நிறங்களிலான பாலிதீன் பைகளில் பொதிந்து விற்க பெட்டிக்கடையல்ல, வணிகவளாகங்களே வந்தாயிற்று தெரியுமா! இதம்பதமான விளம்பரங்கள் நஞ்சையும் அமிர்தமாக்கிவிடும். களமும் காலமும் விளைவும் வித்தியாசப்படலாம்_ ஆனால் காரணம் ஒன்றே யெனக் கத்திச் சொல்லுங்கள். இல்லை யென்பார் முடியைப் பிடித்து இழுத்துத் தள்ளுங்கள். அவர்கள் […]

நாடெனும்போது…

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

நந்தியாவட்டை,  மந்தமாருதம் வந்தியத்தேவன்,  சொந்தக்காரன் சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா   _ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்   ”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது” என்று நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ வில்லங்கம்தான்.   தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும். எச்சரிக்கையா யிருக்க வேண்டும். 2. ”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _”   “_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம் உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால் எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?” […]

’ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 3 of 25 in the series 20 ஏப்ரல் 2014

    1.  நுண்ணரசியல் கூறுகள்   அ]   உங்கள் எழுத்தை வெளியிட வேண்டுமா? கண்டிப்பாக கழுத்தின் நீளத்தைக் குறைத்துக்கொண்டுவிடுங்கள். உங்கள் படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டுமா? தரை மீது தலைவைத்து நடக்கப் பழகுங்கள்…. நீளும் நிபந்தனைகள். நுண்ணரசியலாளர்களின் கைகள் கட்டமைக்கும் நவ கொத்தடிமை வடிவங்கள்.   ஆ]   கழுத்தை நெரித்தால் தான் கொலை; வன்முறை. நாங்கள் படைப்பை நெரித்துக் குழிதோண்டிப் புதைப்போம் கருத்துச் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்தவாறே! உட்கட்சி ஜனநாயகம் வேண்டிப் பதைப்பதெல்லாம் உன்மத்தமல்லாமல் […]

கருகத் திருவுளமோ?

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

      ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி. வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக. காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து தன் ’கௌரவ’த்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் தாய். மகனும் சகோதரர்களும் இழிதுணையாய்.   ’உண்டா’யிருக்கும் செய்தியைத் தாயிடம் ஆசைஆசையாய் தெரிவித்தவளை பாசாங்குப் பாசம் காட்டிப் பிறந்தவீட்டுக்கு வரவழைத்து கருவைத் துண்டாக்கும்படி கட்டாயப்படுத்தியதில் குலைந்துபோனது தாய்மையின் கௌரவம். விரும்பி வரித்தவனைத் […]

’ரிஷி’ கவிதைகள்

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

  சாக்கடையல்ல சமுத்திரம்   ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்… வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி அள்ளும் கொள்கல அளவுக்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொள்ளும் நதியின் நன்னீர் பொங்குமாக் கடலின் மங்கலத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கும்; இனங்கண்டுகொள்ளும் தன்னை அத னோர் அங்கமாய் என்றே இன்றுவரை நம்பியிருந்தேன். தன்மேற் செல்லும் தோணியிலிருந்தும் படகிலிருந்தும் சாகரப்பரப்பில் சவாரி செய்யும் […]

வழக்குரை காதை

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை. சும்மாயிருக்க முடியவில்லை. ‘வை… ராஜா… வை’ என்று சற்றுத் தொலைவில் பாட்டுச் சத்தம் கேட்டதும் ‘ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்; ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்’ என்று விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார் வானொலிப்பெட்டியின் மீது.   ‘மகாராஜா’ என்று கூறாமல் ராஜா என்று குறிப்பிட்டது முதற்குற்றம் நீதியரசே’ என்று வாதத்தைத் தொடங்கினார் வழக்குரைஞர். ‘ராஜ்யாதிபதி என்று குறிப்பிட்டிருக்கலாம். சாம்ராஜ்யதிபதி வெகு சிறப்பு. சக்கரவர்த்தியோ சூப்பராயிருக்கு….! என்று குரலை உயர்த்திக்கொண்டே […]