குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் சில கடலாழங்களில் சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில் பதுங்கியிருந்த சேங்கள்ளனை உடலெல்லாம் எண்ணெய் தடவி அவன் கையிலகப் படாமல் சிறைப்பிடித்த தன் பாட்டனாரின் பெருமையை இன்னும் அவ்வப்போது என் தாய் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சில குகைகளுக்குள் சூரியக்கதிர்கள் உள்நுழையும் சிலவற்றில் அனுமதி மறுக்கப்படும். உள் அப்பிய இருட்டில் அடுத்த […]
பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the cup and the lip என்று சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள். பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை. ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள். நீர்க்கோப்பையின் […]
’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளஅவர்களில் பலர் சத்தமில்லாமல் கட்டிக்கொண்டாயிற்று,அல்லது கட்டிக்கொண்டுவிடுவார்கள் _உணவுப்பொருட்களும், புதுத்துணிகளும். பணக்கற்றைகளும்,நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்நவீன நிலவறை மாளிகைகள்அயல்நாடுகளில்மாக்கடலாழத்தில்அந்த நிலவிலும்கூட.அடிபட்டுச் சாவதெல்லாம்அன்றாடங்காய்ச்சிகளும்அப்பாவிகளுமே. தன்வினை நிராயுதபாணியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்குறிபார்த்துஅம்பெய்தி தலைகொய்யும்போதுஅசகாயசூரராக இறுமாப்படைகிறேன்.ஆஹா ஓஹோ என்று அவரிவர் புகழும் பேரோசையில்விழுந்தவரின் மரண ஓலம் எனக்குக் கேட்பதில்லை.கேட்டாலும் கேட்டுக்கொள்ளாமல்காலெட்டிப் […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமேஅரியணையைச் சுமந்தபடி. நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயேஅந்த வளரிளம் மனம்ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது….. உளவியலை அறிந்துகொள்ளும் முன்பேஎதிர்–உளவியலை அறிந்துகொண்டதில்நான் அடைந்த லாப நஷ்டங்களைஇந்தக் கொரோனா காலஉலகளாவிய பேரிழப்புகளின் சமயத்தில்பேசுவது சரியல்ல. ஒருவகையில் வாழ்க்கை வியாபாரம்தான்என்றாலும்வியாபாரிக்கும் இசைகேட்கவேண்டிய தேவையிருக்கிறதுதானே…. பட்டறிவு என்ற பெயரில் அவனுக்கு அறவுரை சொல்லஅனுபவங்கள் அத்தனை ஒற்றைத்தன்மை வாய்ந்தவையா என்ன? ஆனாலும் இன்று அந்த இளைஞனின் […]
துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் சிலிர்த்தெழுந்துஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசிஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்துகாணாப்பொணமாக்கி நாசமாக்காமல்ஓயமாட்டார்….அவரேஅடுத்தவரின் தலைவரைஅடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரைஅடுத்தவருக்கு விருப்பமான தேங்குழலைவெங்காயப் பொக்கோடாவைபால்கோவாவை ஃபலூடாவைஅடுத்தவரின் வயிற்றுவலியைமுதுகுவலியைமலச்சிக்கலைமண்டையிடியைமெத்துமெத்துப் பாதங்களின் பித்தவெடிப்பைபழித்துப் பழித்துப் பாசுரங்கள் குறைந்தது நூறேனும்எழுதித்தள்ளுவார்.அடுத்தவருடைய அவமரியாதைச் சொற்களாகக்கொள்ளப்படுபவைதான் உதிர்க்கும்போது‘அநீதியைக் கண்டு வெகுண்டெழலாகி’விடுகின்ற _அடுத்தவருடைய அகங்காரமாகச் சுட்டிக்காட்டப்படுபவைதன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கையாகி விடுகின்றஇருநாக்கு இருமனப்போக்கு இருப்பாரிருக்கஇருக்குமிங்கே நியாயமும்ஒருதலைப்பட்சமாய்…. கைவசம் இருக்கவேண்டிய ஆறேழு வார்த்தைகள் கண்டிப்பாக […]
பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும். உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை பீறிட்டெழும் நாள் வரின் இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும் அதை எப்படி எதிர்கொள்ளும்……. சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள். சிலர் ஐந்து ரூபாய். அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய். இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க […]
மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது இன்றல்ல நேற்றல்ல. மம்முட்டி காற்றுபோல்; அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும் அபத்தம் வேறிருக்க முடியாது. மம்முட்டி முழுநிலவுபோல். மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு மிகு தொலைவில். மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத இசைக்கோர்வை. செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட மறந்துபோய்விடுகிறது […]
பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து ஒரு கையின் இருவிரல்களால் பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள். அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர் கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன். சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர். சிறுமி அழவில்லை. […]
நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும். அழகாகவே இருந்தாள். அவளுடைய அடுத்த இலக்கு வெள்ளித்திரையாக இருக்கலாம். அதில் எனக்கென்ன வந்தது? கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அவள் பொருட்படுத்தவேயில்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும் எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு […]