ருத்ரா இ.பரமசிவன் ஒரு கொடியில் முப்பட்டையாய் மூணு வர்ணம். ஒரு கொடியில் நெடுக்கில் பட்டைகள். வேறெரு கொடியில் நடுவில் வட்டம். இன்னொன்றில் நீளப்பட்டைகள் நட்சத்திரங்களுடன். ஒன்றில் சூரியன். மீண்டும் ஒன்றில் அரிவாள். சில முக்கோணத்தொகுப்புகளுடன். அடுத்ததாய் பிறைநிலாவுடன். ஒன்றில் காலில் கட்டிய வாளுடன் சிங்கம். பல்லெல்லாம் மனித ரத்தம். எத்தனை எத்தனை கொடிகள்.. கொடியை உயர்த்தினால் விடுதலை என்று அர்த்தம். எல்லை கொண்டு வேலியிட்டு வேற்றுமையின் வர்ணங்கள் தீட்டி… மரணங்களை மொத்தமாய் உமிழ பீரங்கி குண்டுகள் எப்போதுமே […]
ருத்ரா இ.பரமசிவன் மறைந்து கொள்ளத்தானே வேண்டும் உனக்கு. இதையே மராமரங்களாக்கிக்கொள். தெய்வம் காதல் சத்தியம் தர்மம் அதர்மம் ஜனநாயம் ஆத்மீகம் நாத்திகம் சாதி மதங்கள். எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக்கொள் மனிதனே! இவற்றிலிருந்து கள்ளிப்பால் சொட்டுவது போல் ரத்தம் கொட்டுகிறது தினமும் உன் சொற்களில். மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய் கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய். உன் பிம்பங்களுக்கு நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய். மனிதனுக்கு மனிதன் உறவாடுவதாய் நடத்தும் உன் நாடகத்தில் அன்பு எனும் […]
ருத்ரா இ.பரமசிவன் இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு டூத் பேஸ்ட் கேட்கும் கணவன். வாசலில் பள்ளிக்கு அழைத்து செல்லும் வாகனம் வந்த போதும் வாய்க்குள் இட்லியை திணிக்கத் தெரியாமல் விழிக்கும் பையன். எட்டாவது போகிறான் என்று பெயர் இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள் எல்லாம் எட்டி வரவில்லை. அடுப்பில் சுரு சுரு வென்று குண்டுவில் நாகம் சீறுவது போல் ஆவிப்பீய்ச்சல்கள். எத்தனையாவது விசில் இது மறந்து போய் விட்டது. ஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே என்று முயல்குட்டி […]
ருத்ரா இ.பரமசிவன் மூளிகள் தான். விழியில்லை தான். ஆனால் பாச உணர்ச்சியின் பச்சை நரம்புகள் பால் ஊட்டிச் செல்லும் “பூமத்ய ரேகைகள்” அதில் ஓடுகின்றது உங்களுக்கு தெரிகிறதா? முல்லை முறுவல் காட்டும் உதடுகள் மொக்கைகளாக உங்களுக்கு தெரியலாம். பளிச்சென்று மின்னல் விழுதுகள் அன்பின் கீற்றுகளாய் இழையோடுவது உங்களுக்கு புலப்படவில்லையா? ஒரு முத்துவை சுமக்கும் இரு சிப்பிகளைக் கொஞ்சம் பிசைந்து உருட்டிச்செய்ததே இந்த குடும்பம். கண் எதற்கு? இமை மயிர் படபடப்புகள் எதற்கு? மூக்கு இல்லை. முகவாய் இல்லை. […]
ருத்ரா. அரிஸ்டாட்டில் ஒரு சிறு நேர்கோட்டை பாதியாக்கு என்றார். மீண்டும் பாதியாக்கு. பாதியையும் பாதியாக்கு பாதி..பாதி.. அது புள்ளிகள் ஆகலாம். கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம். கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம். ஆனாலும் பாதியாக்கு பாதியை பாதி ஆக்கு… எது ஞானம்? எது அஞ்ஞானம்? அது மெய்ஞானம்? எது விஞ்ஞானம்? முடிவில்லாததற்கு முடி போட்டு குடுமி போடமுடியாது. முனை தெரியும் வரை கையில் கருத்தில் நிரடும் வரை பாதியாக்கு பாதியாக்கிக்கொண்டே இரு. கிரேக்க மொழியில் மெலிடஸ் (கிமு […]
======ருத்ரா கனவு மிருகம் பிசைந்து தின்கிறது. ரோஜாக்களை கூழாக்கி பிஞ்சு சூரிய செம்பழத்தை ரசமாக்கி விழுங்குகிறது. செம்பவள இதழ் பிழியும் காலபிழம்பு இங்கு தாகத்தை தீயாக்கி தகிக்கிறது. ஏதோ ஒரு பிசாசு தன் தொண்டைக்குழியில் ஓலங்களைக்கூட சிவப்பு மதுவாக்கி கசிய விடுகிறது. ஒரு சொல் தானே சிந்தினாள் அவள். அதனுள் ஓராயிரம் அடுக்குகளை கருவறைக்கதவுகளாய் மூடி மூடித்திறந்தன. சிரிப்பின் சல்லடைக்குள் செங்கடலும் நீலக்கடலும் நிறம் கலந்தன. என்ன சொன்னாள் அவள்? அந்தி வானத்தை முறுக்கித்திருக்கி ஒரு போதைப்பிழியலில் […]
சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் ============================================================ருத்ரா இ.பரமசிவன் ஆன்டி டி.சிட்டர் ஸ்பேஸில் குளூபால் ஸ்பெக்ட்ரம். க்யூசிடியில் கருந்துளை சூப்பர் கிராவிடி ட்யூவல் லேட்டைஸ் கணித முடிவுகளின் ஒற்றுமை. வலுவாய் நிகழும் கப்லிங் அப்ராக்சிமேஷன்களில் உள்ள லிமிடேஷன்ஸ் மேலும் ஹேட்ரானிக் மேட்டர் கிராவிடி ட்யூவாலிடி கப்ளிங்க் எஸ்டென்ஷன்ஸ் ப்ரேன் காஸ்மாலஜியில் ராண்டல் சுந்தரம் மாடல். அப்ப்ப்பா.. இதில் சுந்தரம் மட்டுமே புரிகிறது. இது தான் […]
அமெரிக்க மூதாதையர்களான செவ்விந்தியர்களின் ஒரு சிறு அழகிய அன்பான இனிய குடும்பம் இது. அரிஸோனாவில் ஒரு தொல்பொருளியல் கண்காட்சியில் ஒரு சிற்பக்களஞ்சியமாக நவீனக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது. இது. கடல்கள் பிளந்தாலும் மலைகள் மறைத்தாலும் எல்லைகள் பிரித்தாலும் தொப்பூள் கொடியின் மலர்களில் என்றும் எப்போதுமே அன்பின் மகரந்தங்கள் தான். மானிடவெளிச்சத்தின் கொலு இது. எல்லோருமாய் பகுத்துண்டு வாழ்வதே குடும்பம் எனும் குறுகிய வட்டம் கூட சமுதாயமாய் ஒரு நாடாய் ஒரு உலகமாய் விரியவேண்டும் என்பதே […]
“உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள் நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன் முழித்த முழி முழியையே முழுங்கும்போல நீங்கள் யாரானால் என்ன நான் யாரானால் என்ன அனாவசியக் கேள்விகள் அனாவசிய பதில்கள் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்” ————————————————————————————- இது தான் எனக்கு கிடைத்து ஆத்மாநாமின் கவிதை என்று. இதில் தற்கொலை செய்து கொண்டது எந்த எழுத்து? தெரியவில்லை. இவை சுஜாதாக்களை அசோகமித்திரன்களை நிமிண்டியிருக்கிறது. […]
==ருத்ரா புரிதல்! எதை வைத்து எதை புரிவது? அந்தக்கூவத்தில் ஊறி பாதி அழுகிய தென்னை மட்டை புரிந்து கொண்டது தென்னையையா? அந்த கூவத்தையா? எந்த மொழி இங்கே அடையாள சத்தங்களை அடைக்காத்துக்கொண்டிருக்கிறது? சமஸ்கிருதத்துள் தமிழா? தமிழுக்குள் சமஸ்கிருதமா? சிவனா?விஷ்ணுவா? கல்லுருவின் கர்ப்பப்பைக்குள் முண்டிக்கொண்டு முனை கூட்டுவது. அதோ அந்த ஈழச்சகதியில் மூழ்கிப்போனது துப்பாக்கியா? தாகமா? எங்கும் எதிலும் இந்த ஒத்தையா ரெட்டையா விளயாட்டு தான். வேறு எல்லாவற்றையும் அப்பால் வையுங்கள். இந்த இருட்டுப்படலத்து வானம் திடீரென்று ஒரு […]