மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் தழுவிய நிலையில் முக்கிய மருத்துவப் பிரச்னையாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 2013 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர். இன்று உயர் இரத்த அழுத்தம் பொது நல மருத்துவத்துக்கு ஒரு சவாலாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை ஓசையில்லா கொலையாளி என்பதுண்டு ( High […]

மருமகளின் மர்மம் 18

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிட்டிருந்தேன். முதல்ல நான் உன்னை சரியா கவனிக்கல்லே. முக்கால் முகத்தை மறைக்கிற மாதிரி முக்காடும் கண்ணடியும் போட்டுக்கிட்டிருந்தே. ஆனா, மேரி யம்மாவைப் பார்த்ததும் உன்னை நல்லா கவனிக்கணும்னு எனக்குத் தோணிடிச்சு. கவனிச்சதும், உன்னோட அழகான உருவம், நடை இதுகள்லேருந்து..  ..  ..’ ‘போதும். நிறுத்து.’ அர்ஜுன் இளித்த பின் தொடர்ந்தான்: […]

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே…..     உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த இசைப்பிரியாக்களின் வலியோலங்கள். நிலைகுலையவைத்தபடி. ஐயோ தாங்க முடியவில்லையே……     நிர்பயா, உன் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கையின் மரணாவஸ்தையிலிருந்தே இன்னும் என்னால் எழுந்திருக்க இயலவில்லை. அதற்குள் […]

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.   உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க செல்வது என்ற தீர்மானத்தை உறுதி செய்துகொண்டதிலிருந்து அங்கு செல்வதற்கான நல்ல நாளினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார் உ.வே.சா. ஒரு நல்ல நாளில் தந்தையுடன் மாயவரம் பயணம் செய்தார். தெய்வத்தைக் காண்பதுபோல் மகாவித்வானை நேரில் கண்டார். உ.வே.சா-வின் தந்தையார் மகாவித்வான் அவர்களிடம் வந்ததற்கான காரணத்தைச் சொல்லி வேண்டுதலையும் வைத்தார். மகாவித்வானார்  உ.வே.சா- விடம் கற்றலுக்கான […]

தினம் என் பயணங்கள் – 7

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் சங்கமித்துவிட, என் தொடர்ப் பயணம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது குறித்தான கேள்விகள் என்னை குடையத் தொடங்கிவிட்டன.   என் வெற்றியும் தோல்வியும் நிறுத்துப் பார்க்க நான் பயன்படுத்துவது என்னை சுற்றியுள்ளவர்கள் மூலமாகவே, அந்த சுற்றியுள்ளவர்களின் சுட்டுவிரல்கள் என் பக்கமாகத் திரும்பி நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவள் என்று கூப்பாடு போட்டுக் கத்துவதைப் போன்ற பிரம்மை […]

நீங்காத நினைவுகள் – 36

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

         சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நாம் முயன்றாலும் அவை நம் உள்ளத்தை விட்டு அகலுவதில்லை. அதிலும், அவை சிறு வயது நினைவுகளாக இருப்பின் வாழ்க்கையின் கடைசி நாளில் கூட அவை நினைவுக்கு வருவதாய் ஒருவர் சொல்லக் கேள்வி. மிகச் சிறு வயதில் என் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அப்போது எனக்குப் பதினொரு வயதுதான். […]

கொலு

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  அமெரிக்க மூதாதையர்களான  செவ்விந்தியர்களின் ஒரு சிறு  அழகிய அன்பான இனிய குடும்பம் இது. அரிஸோனாவில்  ஒரு தொல்பொருளியல் கண்காட்சியில்  ஒரு சிற்பக்களஞ்சியமாக  நவீனக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது. இது.   கடல்கள் பிளந்தாலும் மலைகள் மறைத்தாலும் எல்லைகள் பிரித்தாலும் தொப்பூள் கொடியின் மலர்களில்  என்றும் எப்போதுமே அன்பின் மகரந்தங்கள் தான்.   மானிடவெளிச்சத்தின் கொலு இது.   எல்லோருமாய் பகுத்துண்டு வாழ்வதே குடும்பம் எனும் குறுகிய வட்டம் கூட‌ சமுதாயமாய் ஒரு நாடாய் ஒரு உலகமாய் விரியவேண்டும் என்பதே […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின் படைத் தளபதிகளில் விரல் விட்டு எண்ணும்  அளவிற்கு பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். துரோணர், துரோணர் அவருடைய புதல்வன் அசுவத்தாமன், துரோணரின் சகோதரி கணவர் கிருபர் முதளியோர் அந்தணர்களே. அந்தக் காலத்தில் அனைத்து விதமான வித்தைகளையும் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 48.குடும்பத் த​லைவியா இருந்து புகழ் ​பெற்ற ஏ​ழை…………….. “ம​னைவி அ​மைவ​தெல்லாம் இ​றைவன் ​கொடுத்த வரம் மனது மயங்கி என்ன…..? உனக்கும் வாழ்வு வரும்…… ​பொருத்தம் உடலிலும் ​வேண்டும் புரிந்தவன் து​ணையாக ​வேண்டும்” என்னங்க பிரமாதமாப் பாட்டுப் பாடிகிட்டு வர்ரீங்க…அதுவும் ம​னைவியப் பத்திப் பாடிக்கிட்டு வர்ரீங்க….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? […]

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  அவுஸ்திரேலியாவில்   பல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர் விழாக்களையும்    கலை,   இலக்கிய   சந்திப்புகளையும்     அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்      நடத்திவரும்     அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய கலைச்சங்கத்தின்        ஏற்பாட்டில்    எதிர்வரும்        மார்ச்   22   ஆம்      திகதி    (22-03-2014)   சனிக்கிழமை    குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்              கலை – இலக்கிய    சந்திப்பு                                       Centenary Community Hub                         171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074   என்னும்    முகவரியில்    காலை  10  மணி   முதல்  மாலை  5 மணி  வரையில்    நடைபெறும். […]