author

தி கான்ட்ராக்ட்

This entry is part 15 of 18 in the series 2 ஜூலை 2017

THE CONTRACT (1999) Dir: K.C.Boscombe DOP : Jay Ferguson Music : Haig Armen 0 – சிறகு இரவி 0 ஆக்ஷன் மூவிஸ் என்று போட்டால் யூ ட்யூப்பில் இந்தப் படம் கிடைக்கிறது. ஆனால் கொஞ்சம் இணைய இணைப்பில் நொண்டித்தனத்தால் மெதுவாக விரிகிறது. ஆரம்பமே அட்டகாசம். ஒரு ஆக்ஷன் படத்திற்கு ஆரம்பக் காட்சி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இதில் இருக்கிறது. லூகோஸ் ஒரு கட்டிடத்தின் மாடி அறைக்கு போகிறான். தன் கையில் இருக்கும் […]

எனது ஜோசியர் அனுபவங்கள்

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2017

  ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத ஒன்று. இதனாலேயே ஒரு வேலை கிடைத்தவுடன் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறியவன் நான். ஸ்திரத் தன்மைக்கு ஏங்கும் மனதாக என் மனது ஆனதற்கு அப்பாவும் காரணம். அதற்காகவேனும் அவருக்கு நான் நன்றி சொல்ல […]

புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1

This entry is part 4 of 11 in the series 4 ஜூன் 2017

  0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும் உறிஞ்சி விடும் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அட்டை நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அட்டையில் பைப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதி மணி உண்மையிலேயே லயித்து புகை பிடிக்கிறாரா? பாரதி மணியை நான் […]

அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு

This entry is part 17 of 21 in the series 27 ஜூன் 2016

REVIEW OF AMMA KANAKKU   0 நீல் பாட்டே சனாட்டா எனும் இந்திப் படம் தமிழ் பேசியிருக்கிறது. கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் கோர்வையாக இருக்கீறது. இயக்குனர்  அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு நல்வரவு. சாந்தியெனும் எனும் அமலா பால் விஜய்யின் ஒரே மகள் பத்தாவது படிக்கும் அபிநயா. படிப்பில் நாட்டமில்லாமல், முக்கியமாக கணக்கில் கோட்ட்டிக்கும் மகளை உசுப்பேற்றி படிக்க வைக்க சாந்தி எடுக்கும் முடிவுதான் மீண்டும் பள்ளியில் சேர்வது. முதலில் ரங்கநாதன் எனும் சமுத்திரக்கனிக்கு இஷ்டமில்லை. […]

ராப்பொழுது

This entry is part 5 of 14 in the series 29 மே 2016

அதிக நெரிசல் நிறைந்ததாக இருந்தது அந்த பேருந்து நிலையம். பல ஊர்களுக்கு போகும் பேருந்துகளும் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியேதான் போய்த் தீரவேண்டும். சரியான அடிப்படை வசதிகள் அற்ற, போதிய மின் விளக்குகளும் இல்லாத அந்த நிலையத்தில் சனங்களின் நடமாட்டம் எள்ளளவும் குறைந்த பாடே இல்லை. மனிதர்கள் விளக்கு இல்லை என்பதால் ஊர் போகாமலிருக்க முடியுமா என்பது அரசின் எண்ணமாக இருக்கவேண்டும். அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரும் தான் உண்டு தன் ரைஸ்மில் வியாபாரம் உண்டு என்று […]

தெறி

This entry is part 6 of 16 in the series 24 ஏப்ரல் 2016

0 சராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. 0 வெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் ) கேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய், கலைஞ்ச தலையோட ஒரு லுக் வுடறச்சயே தெரிஞ்சு போச்சுப்பா இது செமை மாஸ்னு! அப்புறம் அவுரு பொண்ணு நிவேதிதாவா பேபி நைனிகா கொஞ்சி கொஞ்சி பேசறப்ப, எனக்கு என் ஆளு நினைவுக்கு வந்துட்டே இருந்தது. […]

ஹலோ நான் பேய் பேசறேன்

This entry is part 9 of 17 in the series 10 ஏப்ரல் 2016

– சிறகு இரவி 0 விபத்தில் இறக்கும் இளம்பெண்ணின் ஆவி, அவள் அலைபேசிக்குள் நுழைந்து பழி வாங்கும் வினோதக் கதை! 3 ஜி என்கிற இந்திப்படத்தின் கதையை ஒற்றியெடுத்து, கொஞ்சம் சுந்தர் சி காமெடி சேர்த்து, இயக்குனர் பாஸ்கர் உருவாக்கிய படம் சோடையில்லை! மரண கானா பாடும் வஞ்சிரத்தின் தங்கை கவிதா. அவளைக் காதலிக்கீறான் சில்லறை திருடன் அமுதன். ஒரு விபத்தில் இறக்கும் வட இந்திய / சேட்டு பெண் ஶ்ரீதேவியின் அலைபேசியை லவட்டி விடுகிறான் அமுதன். […]

தோழா – திரைப்பட விமர்சனம்

This entry is part 13 of 16 in the series 3 ஏப்ரல் 2016

– சிறகு இரவி 0 சக்கர நாற்காலியில் வாழும் கோடீஸ்வரனும் அவனது அன்புக்கு பாத்திரமாகும் கேடி ஒருவனும்! நெகிழ்ச்சியான திரைக்கதையுடன் இயக்குனர் வம்சி! 0 பிரஞ்சு படமான தி இன்டச்சபிள்ஸை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் படம் மண் மணம் மாறாமல் மனதைக் கவர்கிறது. ஒரு விபத்தில் முகம் தவிர மற்ற அவயங்கள் செயலற்றுப் போகும் பெரும் தனக்காரர் விக்கிரமாதித்யாவுக்கு பணியாளாக சேர்கிறான் ராயபுரம் சீனு என்கிற ஒழுக்கமற்ற இளைஞன். இருவரின் வாழ்வும் பின்னி பிணைந்து, பாச நதியாக […]

புகழ் – திரை விமர்சனம்

This entry is part 9 of 10 in the series 27-மார்ச்-2016

சிறகு இரவி 0 ஆங்கிலேயர்கள் விளையாடிய மைதானம். அதை அபகரிக்க எண்ணும் அரசியல் கூட்டம். இன்னொரு வண்ணத்தில் ‘மெட்ராஸ் ‘ கதை! 0 நியாயத்துக்காக போராடும் புகழும் அவனது நண்பர்களும், பஞ்சாயத்து தலைவர் தாஸ் என்கிற அரசியல்வாதியால் பகடைக்காய்களாக உருட்டப்படுகிறார்கள். பல தலைமுறைகளாக அவர்கள் விளையாடும் மைதானம், மந்திரி ஒருவரால், தாஸின் உதவியோடு அபகரிக்கப்படும்போது புகழ் வெகுண்டு எழுந்து, அவர்களை வீழ்த்துகிறான். தன் காதலி புவனாவை கைப்பிடிக்கிறான். புகழாக, லோ பட்ஜெட் மாஸ் ஹீரோவாக புதிய பரிமாணம் […]

விடாயுதம் – திரை விமர்சனம்

This entry is part 10 of 10 in the series 27-மார்ச்-2016

சிறகு இரவி 0 அவசரக் கோலமாக ஒரு ஆவி யுத்தம்! கொட்டாவியை வரவழைக்கும் அலங்கோலம்! 0 முன்னாள் மந்திரி சித்திரவேலும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நெல்லி எனும் பெண்ணின் ஆவி, அவனது மகள் தேவதையின் உடலில் புகுந்து அவர்களை பழிவாங்கும் கதை! ஆஸ்கர் விருது வாங்கிய ‘ஸ்லம் டாக் மில்லியனர் ‘ பட நாயகி டன்வி லோன்கர் ( Tanvi Lonkar ) தேவதை வேடத்தில் அதிகம் பேசாமல் வெளிறிப் போகிறார். ஜே.கே.ஆதித்யா மந்திரி […]