தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர் வேறொருவருக்கு என்று பரவியிருக்குமோ? ஒரு மனிதன் ஓய்வு பெறுவதில்தான் இந்த மக்களுக்கு எத்தனை மகிழ்ச்சி? நானே தேவையில்லாமல் மற்றவர்களிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றி அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் ஏனோ அது வெளிவந்து […]
யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது எங்கிருந்து வந்தாலும், எவரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். நியாயம் நியாயம்தானே? யார் சொன்னால் என்ன? எவர் வாயிலிருந்து வந்தால் என்ன? அவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேல், கீழ் என்ற பிரிவினைப் பார்வையெல்லாம் எதற்கு? இப்படியே ஒவ்வொன்றையும் இடக்கு மடக்காகப் பார்த்துப் பார்த்துத்தானே எல்லாமும் கெட்டுச் சீரழிந்து பாழாய்ப் போய்க் கிடக்கிறது? எல்லோரும் ஓரினம், […]
வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா. அவர்கள் அவரது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார். வாசிக்கக் கற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதை நீக்கமற உணர்ந்திருக்க வேண்டும். வாசிப்பினால் மனிதன் தேர்ந்த விவேகமுள்ளவனாக மாறுகிறான். வாசிப்பு மனிதனின் சளசளப்பைப் போக்கி அமைதியை உண்டாக்குகிறது என்றும், […]
“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….” எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள். எல்லாருக்கும் உண்டு…எல்லாருக்கும் உண்டு…தர்றேன்…தர்றேன்… அத்தனபேருக்கும் தந்துட்டுதான் போவேன்…. சார்…எனக்குத் தரலை…எனக்குத் தரவேல்ல…இந்தக் கைக்கு ஒண்ணு குடுங்க சார்… சார்…சார்…என்ற அந்தத் தெளிவான அழைப்பு இவனை அதிசயப்படுத்தியது. எல்லோரையும் முந்திக் கொண்டு முகத்துக்கு முன்னால் தெரிந்த அந்தக் […]
எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் படு விளையாட்டுத்தனமாக இருந்தான் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். அவன் இப்போது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர். வெறுமே விளையாடிட்டிருந்தவன்ட விளையாட்டா சேர்ந்து போச்சுறா காசு…என்றான் மாஞ்சா. ஏதோ அவனுக்குக் கிடைத்த சொத்து போல் சொல்லிக் கொண்டான். சொந்த ஊர் வரும்போதெல்லாம் மாரிச்சாமி அவன் செலவுக்குக் காசு கொடுத்து விட்டுப் போனான். அதென்ன அப்படியொரு தனி கவனிப்பு? […]
“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு…தமிழுங்குறே…? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு போட வேணாமா?” ராமுத்தாயி மகனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள். மாரிக்கு அப்படிப் பதில் சொல்லி விட்டாளே தவிர அவள் மனதிலும் ஒரு கலக்கமிருக்கத்தான் செய்தது. அப்படியான ஒரு சஞ்சலத்தோடுதான் மகனையும் […]
துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம் கொடுப்பா’ என்று அக்கறையாக நான் சொல்லியிருந்தேனோ அதைப் பொருட்படுத்தாமல் அவனே ப+னைபோல் பதுங்கினால்? தற்செயலாக நான் எழுந்துவர அடர்ந்து தலை கவிழ்ந்து நிழலாய்க் கவிழ்ந்திருந்த வாசல் மரத்தின் கிழே தலையைப் பதவாகமாய்க் குனிந்து சைக்கிளை மிக மென்மையாக மிதித்து நகர்ந்தான். “Nஉற…Nஉற…பார்த்தியா…பார்த்தியா…சொல்லாமப் போறான் பாரு…எவ்வளவு சைலன்ட்டா நழுவுறாம்பாரு…” அது அவன் காதில் நிச்சயம் விழுந்திருக்காது. அவன்தான் […]
அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் மனதில்தான் […]
பசுமையான, நெஞ்சை ஈர்க்கும் வண்ணம் கச்சிதமான அட்டைப் படத்தைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கண்ட போது, உடனேயே வாங்கிப் படித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுப் போனது. அதிலும் சுரா அவர்களின் இளமைத் தோற்றம் எங்கள் குடும்பத்து சாயலாக, அப்படியே அச்சு அசலாக ஒத்து இருந்ததாக உணரவே, மனதில் சட்டென்று பரவிய ஈரமும் நெருக்கமும் என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டன. திரு சுரா அவர்களின் துணைவியார் அவரோடு இணைந்த வாழ்க்கையின் சாராம்சங்களையும், […]
ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி. என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்? பயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன். நீ எழுப்பினாயா…எப்படி? வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும்? கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….? என்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா? […]