பொருள் கொண்டு மனிதம் மதிப்பீடு செய்யப்படும் வழிமுறையை பழக்கப்படுத்தி கொள்வதில் இனி சிக்கல் இருக்கபோவதில்லை. மற்றவர்களை உதாரணம் கொண்டு உருவாக்கப்படவில்லை இந்நிலை. ஒரு நீடித்த பகலில் கைவிடப்பட்ட நம்பிக்கையை சுமந்து கொண்டு சுய நீர்மம் நிறைவில் மனதின் அழுத்தங்களை தாங்கி கொள்ள இயலாத நிலையில் என்னையும் ஆட்கொண்டது நாளை உங்களையும் தான் . இனி உயிரினம் வாழ நிர்பந்தங்களை பட்டியல் கொண்டு மன குற்றங்களை மறைத்து மறந்து வாழவே உசித்தம் . அது மிக எளிதான இயல்பு தான் . […]
என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர் நியாயங்கள் பொய்மையும் உண்மையும் உருவில் அலைந்து கொண்டிருக்கிறது . அவர்களுக்கு விருப்பமானவற்றை அணிகிறார்கள் நம்மையும் அணிவித்து விடுகிறார்கள் அவர்களின் வாயிலாகவே. -வளத்தூர் தி .ராஜேஷ் .
விதைத்து விட்டிருக்கும் வாழ்வியலின் கவன சிதறல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது . மூன்றாம் வயதின் நினைவின் மீது இக்கணம் அமர்ந்திருக்கிறேன் . அப்பா மளிகை கடை கொண்டிருந்த காலம் தினமும் முத்தங்களும் ஐந்து காசும் ,பத்து காசும் கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும் நினைவுகளும் அறிவதற்கில்லை நாங்கள் பெற்றிருந்த அகமகிழ்வை. பின் காலத்தின் பயணம் தொடங்கியது அனைத்தும் நின்றது . வேறு வகையின் பயணம் இனிதே தொடங்கியது . குத்தகை நிலமொன்று இருந்த காலம் […]
மகா சந்திப்பொன்றில் சுய பகிர்வு உள்ளடக்கிய வாரத்தைகளை தேடி கொண்டிருக்கையில் ஊடுருவும் பார்வை விடுவித்து கொள்ளும் மவுனம் கடந்து கொண்டிருக்கிறது . உன் வெட்க நிற பிரிகையில் வண்ணங்களை தூவி கொண்டிருக்கிறாய் பொழிவின் ஒளி பிரபஞ்சத்தை மறைப்பதாக இருக்கிறது . போதும் விட்டு விடு உன் ஒவ்வொரு செய்கை நம் நிறைவின் தொடக்கமாகிறது . நொடிகளை இச்சமயம் பழித்து கொண்டிருக்கிறது நம் எண்ணங்கள் . முடிவிலி காலம் உண்டெனில் அது இதுவாக இருக்க கடவது . அதில் […]
நம் சந்திப்புகளின் கோர்வையை எளிதாக சொல்லிவிட முடிகிறது இந்த காலத்திருக்கு . உன் புன்னகையின் உலா வீற்றிருப்பதை இந்த மாலையும் மயங்கி கிடக்கிறது . நம் இரவினையும் விட்டு வைக்கவில்லை நினைவுகள் மவுன மன ஒலிகளை கடத்துகிறது உன்னிடமாகவும் என்னிடமாகவும் இரவு ஓய்ந்து விட்டிருக்கிறது . உன்னிடம் சொல்வதற்காக விட்டு வைத்திருக்கிறது விடியல் அவை ஒவ்வொன்றாக பட்டியலிட்டிருக்கிறது உறக்கமற்ற இரவுவின் நம் கனவின் மீதங்களை . இதற்காகவே அன்றும் பிரபஞ்சம் இருந்திருகின்றது . -வளத்தூர் தி .ராஜேஷ் […]
என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை ஆக்குவது என்பதில் பெரும் போட்டிகளும் போராட்டங்களும் நாளும் நடைபெறுகின்ற இயல்பாகிறது . புதிய படிமங்கள் தோன்றுவதில் பழையனவை ஆதங்கம் கொள்கின்றன தான் இன்னும் கீழே செல்கிறோம் என்று அவை இன்னும் தொன்மையாகிறது என்பதை அறியாமை உடையவானகிறது . நிறங்களின் தன்மையை மேலும் […]
ஓர் எண்ணம் மன தொலைவுகளை கடந்து கொண்டிருக்கிறது இக்கணம் . அதில் நம் கனவுகள் மீதம் கொண்டு உருவாக்கப்படுகிறது இந்த இரவு. அதில் சிதறல் கொண்டிருந்த ஒரு மவுனம் மன ஒலிகளில் விழுங்கப்படுகிறது . அதில் ஒன்றும் நிகழ்த்தியிருக்கவில்லை ஒரு அக மவுனமே அனைத்தும் சாத்தியமாக்கியது . அதில் என்னை விதைக்கும் பிரபஞ்சத்தில் இயக்கமாவேன் உணர்த்துவதற்கு காலம் பின் தொடரும் பிறகு நீயும் . அதில் நிறைவு தன்மையற்ற பகிர்வுகள் நேற்றைய மீதம் கொண்டு வளர்த்தெடுக்கப்படுகிறது . […]
அகம் சார்ந்த வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது ஆதலால் முன்னோர்களின் வழியின் திறவுக்கோல் வைத்து சரிப்பார்த்துக்கொள்ள முடிகிறது நான் எதிர் கொள்ளும் அனைத்தின் விளைவுகளும் . இதில் திறவுக்கோல் அளவுகள் பரிசோதிக்க அவசியம் இருக்கவில்லை அனைத்துக்குமான நிறைவை உள்ளடக்கியது இவை . என் அகம் பிரபஞ்ச தொன்மையில் தொலைந்து போயிந்த ஒன்று வார்த்தையின் தேடல்களில் அவை சிக்குவதில்லை மன உணர்வின் அதிர்வுகளும் அறிவதில்லை . கிடைக்க பெறாத எதுவுமே நம்பிக்கையாக்கப்படுவதால் அவ்வண்ணமே நானும் ஆக்கப்பட்டேன் . கொடுர நம்பிக்கை […]
முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்கலாமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன் முதலின் அனைத்தும் . இங்கு தான் முதன் முதலாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய தன் சுய விருப்பங்கள் . நீள்கின்ற அவைகளை சுய தொன்மை சுருக்கி விட்டது பல மாலை பொழுதின் கண்ணீரோடு . இன்றளவும் நினைவின் வடுவும் உறுதி […]
மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த உயிரின் இறுதியும் இவ்வாறே இருக்க உலவ விட்டிருக்கிறது அந்த ரகசியம் . இதன் முறையே பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்டளை உணர்வதற்குள் ஒவ்வொரு செயலின் அறியாமை கடந்து விடுகிறது . பிரபஞ்ச எண்ணங்கள் அனைத்துமே உனதாக்கினேன் அதுவே அகமகிழ்வு என்றே வளர்ந்தேன் உணர்ந்த பின் உன்னில் […]