1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம். காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா தருவார். பொத்தக்காசு தந்தாத்தான் வாங்குவேன். அதெ சுண்டுவிரல்ல மோதிரமா மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன்.அப்போதெல்லாம் நானும் என் பெரியத்தா மகள் மும்தாஜும் சேர்ந்துதான் எப்போதும் போவோம். வருவோம். அந்தக் காலணாவை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையே வைத்து […]
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும் இவை அத்தனையையும் வாகனப்பிரிவு துல்லியமாய்ச் செய்யவேண்டும். அந்த நிறுவனம்தான் வெற்றிபெறும். அந்த வகையில் ரவிச்சந்திரனின் கப்பல்துறை நிறுவனம் வெற்றிபெற்றிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் இருக்கும் அந்த நிறுவனத்தின் வாகனத்துறை குபேரனின் கையில். ரவிச்சந்திரன் அடிக்கடி சொல்வார். […]
தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து பரந்த ஓர் ஊர்க் குடும்பத்தின் விழுதாகத்தான் இருக்க வேண்டுமாம். உறுதியாக இருந்தார் சாந்தினி. அவர் நினைத்தபடியே பதவி உயர்வு கிடைத்துவிட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள், மாப்பிள்ளை தேடும் வேலைகள் தொடர்கின்றன. திருச்சியில் ஒரு பெரிய உணவுக்கடை வைத்திருக்கும் புண்ணியமூர்த்தியின் மகன் சாமியப்பாவுக்கு சாந்தினி பற்றிய தகவல் கிடைக்கிறது. கேட்டரிங் முடித்துவிட்டு அப்பாவோடு தொழிலுக்கு துணையாக இருப்பதாக […]
கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று. கடைக்குள் ஒரு தனி அறையை அவரே உருவாக்கியிருக்கிறார். வெட்டுக்கத்தியால் கூடையைத் திறந்து, சரக்கைக் கொட்டிக் கவிழ்ப்பார். அழுகலோ, வெம்பலோ, வாடியதோ இருந்தால் உடன் சரக்கைத் திருப்பிவிடுவார். ஒரே வாரத்தில் கணக்கு பாக்கியை சுத்தமாக செலுத்தும் ஒரே ஆள் காய்கறிச் சந்தையில் தீபன்தான். அலாவுதீன் கடையில் காய்கறிப் பிரிவு மொத்தமும் தீபன் கையில்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு 1000 வெள்ளி சம்பாதித்துக் […]
தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும் சிலேட்டுக் குச்சிகள் இருக்கும். பள்ளிக்கூடத்தில் திருடிய சில சாக்பீஸ் துண்டுகளும் இருக்கும். ஒரு நாள் அடுப்படித் திண்ணையில் அறிஞர் அண்ணா படம் வரைந்திருந்தேன். அந்தத் திண்ணையில் தான் அத்தாவுக்கு அம்மா சாப்பாடு வைப்பார்கள். அண்ணா படத்தின் மீது அம்மா பாயை விரித்தபோது அத்தா அந்தப் பாயை சற்று இழுத்துப் போட்டு […]
பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும் ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’ வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10 வயது சிறுமி. தாஞ்சூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு நடுவே பண்ணை வீடாகத்தான் சாவித்திரியின் அப்பா மருது அந்த வீட்டைக் கட்டினார். அந்த இடத்தின் ரம்மியம் அவரை வெகுவாகக் கவர அதையே வசிக்கும் […]
‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம். அதில் ஒருவர்தான் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ ஆட முடியும். முறை வைத்து அந்த ஊஞ்சலில் நாங்கள் ஆடியிருக்கிறோம். நான் மட்டும்தான் அதில் 180 டிகிரி தாண்டி ஆடுவேன். சவுக்குக் குச்சியோடு பூங்கா காவல்காரர் எங்களை அடிக்க ஓடிவருவார். ஆடும் ஊஞ்சலிலிருந்து தடாலென்று குதித்து […]
கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’ என்று. உடம்பு முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டதுபோல் அந்த வாசகம் அவரோடு ஒட்டிக் கொண்டது. ஈசூனில் இருக்கும் ஒரு பெரிய முதியோர் இல்லத்தில் தன்னை ஒரு தொண்டூழியராக இணைத்துக் கொண்டார். சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 வரை தேர்வே இருந்தாலும் அதைப் புறக்கணிக்கும் அளவுக்கு […]
தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது அது உண்மை என்றுதான் தோன்றியது. அந்த ராஜேந்திரபுரம் கிராமத்தில் கிட்டத்தட்ட பாதிக் கிராமம் அருணின் குடும்பச் சொத்து. 5 அண்ணன்மார்கள் , அண்ணிகள் 3 அக்காள் குடும்பம், அப்பா வழி தாத்தா பாட்டி, அம்மா வழிப் பாட்டி, 25 பொடுசுகள், பண்ணையாட்கள், […]
கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன். அவன் கோலாலம்பூரிலிருக்கும் அவன் அத்தாவின் பணமாற்று வியாபாரத்தில் இறங்கிவிட்டான். அசாத்தியத் துணிச்சல்காரன். ஒரு மழை இரவு முடிந்து நானும் அவனும் அறந்தாங்கி புதுக்குளக் கரையில் நடந்தோம். ஒரு நண்டுப் பொந்தைப் பார்த்துச் சொன்னேன். ‘இதுதான் […]