அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. உங்களிடம் இருப்பது எத்தனை காலணிகள்? இந்த ஆண்டு நீங்கள் தொலைத்த காலணிகள் எத்தனை? உங்கள் […]
25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி சாலைகள். அதிகமான பேருந்துகள், லாரிகள். எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்கள். இதோ கந்தக நிறத்தில் சூரிய வெளிச்சத்தில் கம்பீரமாகத் தெரிகிறது பெரியகோவில். ‘இவ்வளவு நாளா எங்கடா போயிருந்தே?’ என்று கேட்பது போல் இருக்கிறது. அது சரி. நான் தஞ்சாவூருக்கு ஏன் வருகிறேன் தெரியுமா? என் வாழ்க்கையின் முகவரி எழுதப்பட்டது தஞ்சாவூரில்தான். அதை எழுதியவன் […]
கிட்டத்தட்ட பத்து நாட்கள் ரஜூலா கப்பலில் பயணப்பட்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நயினா முஹம்மது என்கிற நயினார். தேக்காவில் இருக்கும் அலி டீக்கடையில் வேலை பார்க்கத்தான் அவர் வருகிறார். கப்பல் தஞ்சோங் பஹாரில் வந்து நின்றது. மேட்டூர் மல்லில் தைத்த இரண்டு அரைக்கை சட்டை, இரண்டு தறிக் கைலி, லைஃபாய் சோப், 501 சவுக்காரம் அரை பார், கருவப்பட்டை பல்பொடி, ஓர் ஈரிழைத் துண்டு எல்லாமுமாக ஒரு எல் ஜி பெருங்காயத் துணிப்பையில் வைத்து அதன் காதுகளை […]
தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. இல்லையென்றதும் அமர்ந்துகொண்டு அடுத்த நாற்காலியையும் சரிசெய்தார். அவர் மனைவி வரவேண்டும் என்று ஊகித்தேன். தூரத்தில் ஒரு பெண் 2 வயதுப் பையனைத் தூக்கிக்கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பிஞ்சின் கையில் ஒரு கார் பொம்மை கார் படம்போட்ட அட்டைப் […]
நாகா டோர்செட் ரோட்டில் இருக்கும் அந்த மூவறை வீட்டை 70 களில்தான் வாங்கினார். 20000 தான் விலை. மாதத்துக்கு 120 வெள்ளி செலுத்திக் கொண்டிருக்கிறார். நாகலிங்கம் என்கிற நாகாவைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 12 வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். வந்ததுமுதல் அடைக்கலராஜ் வம்சாக்கடையில் தான் வேலை செய்கிறார். அடைக்கலராஜிடம் தான் காசு என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, குடும்பம் என்றால் என்ன என்றெல்லாம் நாகா தெரிந்துகொண்டார். ‘நமக்கு வரும் காசை கடவுள் மாதிரி பாக்கணும் தம்பீ. அப்பத்தான் […]
நாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் நான்கு பெட்டிகள் எங்கள் உடமைகளைப் பொத்திக்கொண்டு கூடத்திற்கு வந்துவிட்டன. கையில் இழுத்துச் செல்ல இரண்டு சிறிய பெட்டிகளும் அவைகளுக்குத் துணையாக வந்து உட்கார்ந்து கொண்டன. என்னுடைய கணினிப் பையும் சாய்ராவின் கைப்பையும் அந்த மேசையில் தயாராக இருக்கின்றன. எல்லாப் பெட்டிகளும் எப்போது எங்களை இழுத்திச் செல்லப் போயிறாய் என்று கேட்பதுபோல் இருக்கிறது. இப்போது இரவு […]
1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. அப்போதுதான் முதன்முதலாக பலர் விமானத்தையே பார்த்தார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் அறந்தாங்கியும் ஒன்று. ஆவிடையார் கோவில் ரோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 300 பேர் வீடுகளை இழநது தங்கதுரையின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். செம்பராங்கற்களைக் கூட்டி அடுப்பு வைத்து பெரிய பெரிய அண்டாக்களில் கஞ்சி காய்ச்சி பருப்புத் துவையலுடன் பரிமாறப்பட்டதும் தங்கதுரையின் வீட்டில்தான். தங்கதுரையும் மனைவி […]
1 இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். கொஞ்சம் ஊறியபின் சாப்பிட்டால் மெல்லும் வேலை மிச்சமாம்.. மாத்திரைகளைத் தந்துவிட்டு ஒரு தாமிரச் செம்பில் தண்ணீர் எடுத்துவந்தார் கதீஜா. தாமிரம் உடம்புக்கு நல்லதென்று கதீஜா ஊரிலிருந்து வாங்கிவந்த செம்பு அது. மகன் அப்துல்லா அவர் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார். இந்த முகம்மதைப்பற்றி தெரிந்துகொள்வோம். முப்பது ஆண்டுகளுக்கு முன் அடிவாழைக்கன்றுபோல் 6, 9, 12 வயதுகளில் மூன்று […]
ராவுத்தர் வீட்டில் சுப்பனுக்கும் செல்லிக்கும் தனிஉரிமை உண்டு. ராவுத்தர் அறையில் இருக்கும் சுருட்டுச்சாம்பல் டப்பாவைத் தட்டி சுத்தம் செய்வதுமுதல் ராவுத்தரின் வேட்டி சட்டைகளை வண்ணானுக்குப் போடுவதுவரை எல்லாமே செல்லிதான். ராவுத்தர் அறையில் இருக்கும் அந்த தாத்தா கடிகாரத்தை யாரும் அவ்வளவு எளிதாகத் தொட்டுவிடமுடியாது. அதற்கு வாரம் ஒரு முறை சாவி கொடுப்பது சுப்பன்தான். வடிவேலுவின் முதல் படத்தில் வடிவேலுவைப் பார்த்திருக்கிறீர்களா? அச்சுஅசலாய் அதுதான் சுப்பன். கரையில்லாத நாலுமுழக் காடாவேட்டி. இடுப்பில் கால்கவுளி வெற்றிலை, நிஜாம்லேடி புகையிலைப் […]
பழநியப்பன் சிங்கப்பூர் வந்தபோது அவன் மகள் பிரேமாவதி தொடக்கநிலை 3. இப்போது உயர்நிலை 3. வரும்போது அப்பா சொன்னது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ‘இந்த மண்ணில் ஒரு சொத்து வாங்கிப் போடு. நீ இந்த மண்ணை மறந்தாலும் இந்த மண் உன்னை மறக்காது.’ இப்போதும் அது ஞாபகத்துக்கு வந்தபோது தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். ராஜமாணிக்கம்தான் பேசுகிறான். பழநியோடுதான் அவனும் சிங்கப்பூர் வந்தான். பழநியப்பன் அறந்தாங்கி. ராஜமாணிக்கம் அமரடக்கி. அறந்தாங்கியிலிருந்து 10 மைல். […]