ஷைன்சன் இத்திரைப்படம் பிரஞ்சுப் பாடகியான இடித் பியாஃபின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே பிரஞ்சுத் திரைப்படம் இது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது மற்றும் ஒப்பனைக்கான விருது). (இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் வெளிவந்த, வெளிவராத வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழில் இதுவரையில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய முழுமையான திரைப்படம் வந்ததில்லை. பெரியார், காமராஜ் என்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் […]
ஷைன்சன் இவ்விரண்டு திரைப்படங்களும் கலைப்படைப்புகள் என்ற அளவில் பெரிய மைல்கற்கள் அல்ல. கலாசாரப் பிரதிபலிப்பு என்ற தளத்திலேயே இவை செயல்படுகின்றன. இவ்விரண்டுமே ஒரே நிகழ்வினை மையமாகக் கொண்டுள்ளன- எதிர்பாராமல் கருவுறுதல். இந்நிகழ்வுக்கு இரு வேறுபட்ட சமூகங்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை இத்திரைப்படங்களின் மூலம் காண்கிறோம். இரண்டு திரைப்படங்களிலும் வரும் குடும்பங்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவையே. எனவே சமூகப்படிநிலையின் தாக்கத்தைப் பற்றி நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. கலாச்சாரத் தாக்கமே இரண்டு திரைப்படங்களையும் வேறுபடுத்துகிறது. […]
சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான் பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே […]
அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது வந்திருக்கும் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு புதுசு புதுசாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு சப்ஜெக்ட் ராஜாவுக்கோ ஏன் ரஹ்மானுக்கோ கூட கிடைக்கவில்லை. அத்தனை அற்புதமான இசை எங்கும் […]
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் […]
பிரச்சார நெடியின்றி சொல்ல வந்ததை,அழுத்தமான வசனங்களாலும் , இயல்பாகவே அமைந்து விட்ட காட்சிகளைக்கொண்டும்,காட்சிகளுக்கு பொருந்தும் அளவான இசையோடும் என இவ்வளவையும் வைத்துக்கொண்டு கூடவே ஒரு செய்தியும் சொல்லவேண்டும் என நினைத்து எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் காந்தி. செண்ட்டிமெண்ட்டலாக K Series-ல் ஆரம்பிக்கும் ‘ஏக்தா கபூரின்’ டீவி சீரியல்களுக்கென வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரிடமிருந்து இப்படி ஒரு நம் மனதில் அழுந்தப் பதியவைக்கும் படம், முதலில் ஒரு சபாஷ் போட்டுவிட்டுத்தான் விமர்சனம் எல்லாம். தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறான் அந்தப்பையன் […]
பள்ளியில் பத்தாவது வரை படித்த அனைத்தும் விக்கிபீடியா’வில் பார்த்து ஒரு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம் என்றாகிவிட்டது போல,பழைய ஜாம்பவான்கள் நாற்பது வருடங்களாக இழைந்து இழைந்து கொடுத்தவற்றை நேற்று வந்த அநிருத் மூன்றாவது படத்திலேயே கொடுத்திருக்கிறார். பாம்பேயில் கூட பல வருடங்களாக தனியான ஆல்பம் என்ற விஷயங்கள் பரவலாக ஆரம்பித்து விட்ட போதும் இன்னும் தமிழுக்கு அந்த இசைக்கோர்வைகள், தனியான ஆல்பங்கள் , சினிமா சேராத ஆல்பங்கள் என்றவை வர இன்னமும் காலம் பிடிக்கும், தமிழன் இந்த விஷயங்களில் […]
கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதி ராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் […]
உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை “விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும் கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கட்டுரை முதல் வரிகள் ஆங்கிலத்தில். முதல் உலகப் போரை ஆரம்பித்தது யார்? என்று தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்குலகின் கொலைக் குற்றங்களைப் பட்டியலிட்டு, இதெல்லாம் முஸ்லிம்கள் செய்தது […]
விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நம் கண் முன்னே தோன்றி தன்னை நிலைனாட்டிக்கொண்டு விட்ட ஒரு அவலம் என்ற முறையில் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் எப்படி நாம் பொதுவாக சரித்திரத்தை, […]