இரண்டுமே பெண் சாயல் கொண்ட ஆண் வேடம். ஆனால் பிரகாஷ்ராஜின் மகாராணி கொஞ்சம் பச்சை. இருக்குமிடம் அப்படி. அதுவமல்லாமல் வசந்த் ( இயக்குனர் ), அவரை திருநங்கையாகவே காட்டுகிறார். இதில் ஒரு சமூக வக்கிரம் கூட உள்ளது. திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், அதை ஒரு திருநங்கையே ‘மேடமாக’ இருந்து நடத்துவதும் கொஞ்சம் ஓவர்தான். கதை நாயகன் அப்பு (பிரசாந்த்- நல்ல நடிகர், காணாமல் போய் விட்டார்) ஹீரோயிசம் எல்லாம் காட்டவில்லை. தான் விரும்பிய பெண்ணை பணத்தைக் […]
பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன்,வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் சென்ற ஆடுஜீவிதத்தமிழன் என எல்லோருக்குள்ளும் ஒரு ஒட்டுப்பொறுக்கி உண்டு. இப்போதும் கூட அமேரிக்காக்காரனுக்கு ராத்திரி இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தொண்டூழியம் பார்க்கிறவனும் ஒட்டுப்பொறுக்கி தான். எப்போதும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் அவனது ஆருடத்தில் நாடு கடத்தப்படும் யோகம் உண்டு என்பதே ஒரு சோகம். முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைசாமி அதைப் பெருமையாகச்(?)சொல்லுவார். […]
எத்தனுக்கு எத்தன் கதையைப், பரபரவென்று, 143 ந்¢மிடங்களில் சொல்லும் படம். புலனாய்வு துறை வேலை மறுக்கப்பட்டவன், பொய்யாக ஒரு புலனாய்வு குழு அமைத்து, கணக்கில் வராத பணத்தையும், நகைகளையும் அபகரிப்பது ஒன் லைன். ரசிகனை யோசிக்க விடாமல், துரித தூரந்தோ எக்ஸ்பிரஸாக அமைக்கப்பட்ட திரைக்கதை, மெயின் லைன். ‘எ வெட்னஸ்டே’ படத்துக்குப் பிறகு வந்திருக்கும், நீரஜ் பாண்டேயின் படம். எதிர்பார்ப்புக்கு மேலேயே இருப்பது, அவருக்கு பச்சைக் கொடி. அடிதடி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அக்ஷய் குமார், ஏழு பிள்ளைகள் […]
சித்ரா சிவகுமார் ஹாங்காங் டப்பா. மதிய உணவு எடுத்துச் செல்லும் டப்பா. அதுவும் ஸ்டான்லி என்கிற பள்ளி செல்லும் சிறுவனின் டப்பா. இது தான் கதையின் கரு. ஒன்றரை மணி நேரம் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை, இந்த மதிய உணவு டப்பா காரணமாக நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லுவதே “ஸ்டான்லி கா டப்பா” – ஸ்டான்லியின் டப்பா என்ற ஹிந்தி திரைப்படம். கடந்த வாரம் வரை எப்போதும் விஜய் தொலைக்காட்சியையே நாங்கள் இங்கு ஹாங்காங்கில் பார்த்து வந்தோம். […]
விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். […]
முஷர்ரப்( முஷாபி ) இலங்கை அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை ‘வூட்லன்ட’; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்கள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது. தமிழ் நாடு முழுவதும் ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் வரவேற்பை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் வழங்கியிருந்தமைக்கு இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளும், அரசியல் ஊடுறுவல்களுமே காரணம் எனலாம். இதற்காக முஸ்லிம் அமைப்புகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் கமல் ரசிகர்கள் நன்றி சொல்லக் […]
சமீபகால உதயங்களை மனதில் கொண்டு, தினமலரின் அங்காடிதெரு குழு அமைத்துக் கொடுத்த மேடையே ‘குறும்பட மேதை ‘ பட்டத்திற்கான போட்டி. விதையிலிருந்து தோன்றிய விருட்சங்கள் போல், குறும்பட இயக்குனர்களின், ‘பெரும்’ படங்கள் வெற்றி பெறுவதும், வரும்காலத்தில் புதிய சிந்தனைக் களங்களை கட்டி ஆளும் மன்னர்கள், இவர்களே என்பதையும் மனதில் இருத்தி, தினமலர் குழுமம் ஏற்பாடு செய்த விழாவுக்கு ஒரு சுயநலமும் உண்டு. நல்ல படங்கள் வெளிவந்தால், அதை பாராட்டும் பத்திரிக்கையும், ஏற்றம் பெறும் அல்லவா. பத்துக்கு எட்டு […]
டாக்டர் எல் கைலாசம் சமீபத்தில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் வண்ணப்படத்தை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கத்தில் பார்த்தேன். படத்தை திரையிடக்கூடாது என்று ஒருபுறமும், திரையிட்டே ஆகவேண்டும் என்று மறுபுறமும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கேரளா காவல் துறையினர் பாவம் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மீடியா உழைப்பாளிகள் கேமராவுடனும் கையில் மைக்குடனும் திரை அரங்கின் வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். உண்டு கொழுத்த மோப்பம் பிடிக்கும் நாய்களுடன் கடின முகத்துடன் சிறப்பு காவலர்கள் அங்கும் […]
“படத்தில் வரும் காட்சிகள் இதுவரை நடந்தவை பற்றியோ , அவை சம்பந்தமான நிகழ்ச்சிகள்/நபர்கள் பற்றியதோ அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே” என்று ஆரம்ப எழுத்துகள் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இந்தப்படத்தின் முதல் எச்சரிக்கை அதிர்வையே தருகிறது. ஆக்ஷன் ஃபிலிம் எடுக்கிறதுன்னா இனிமேல் இதுக்குமேலே எடுத்தாதான் உண்டு. அருமையான நடிக/கையர் தேர்வு,அதற்கான களமும், அவர்களின் மொழியும் எல்லாமுமாகச்சேர்ந்து ஒரு விஷுவல் ட்ரீட் தமிழனுக்கு..எங்க ஊர்க்காரன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்துருக்கான்யா .என்று மெச்சிக்கொள்ள ஒரு படம். படத்தை மெதுவாகத்தள்ளிக்கொண்டும் , […]
சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் கட்டுரையை இங்கு வெளியிட்டேன். அதில், விஸ்வரூபம் படத்திலும் இது போன்ற சர்ச்சைகள் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எதிர் பார்த்ததை போலவே, மிக மிகத் தீவிரமான ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் வியப்புக்கு இடம் தரும் ஒரு நிகழ்வு என்னவென்றால், மத்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு சட்டவிரோதமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்குப் […]