வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும், மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள் ஏங்கியே தவித்தனரே! [ஶ்ரீம.பா.10.32.2] பட்டுப் பீதாம்பரமுடுத்தி பன்மலர் வனமாலையணிந்து பங்கயத் திருமுகம் தன்னில் மோஹனப் புன்னகை மிளிர மன்மதன் மயங்கும் மாறகோடி ஸுந்தரனாய் மதுஸூதனன் அவர்கள் முன்னே தோன்றினாரே! [ஶ்ரீம.பா.10.32.3] பிரிந்த உயிர் திரும்பி வர மிக உவகையுடன் வரவேற்கும் விறைத்தவுடல் போல் அருளால் ஆருயிர் […]
குரு அரவிந்தன் கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. பாட்டும் தொகையுமான சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம் இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் தலைவன் நன்னன் வேண்மாள். பாடியவர் இரண்ய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். திணை பாடாண் ,துறை ஆற்றுப்படை.. ஆசிரியப்பாவால் ஆனது . தன் வறுமை தீர வள்ளல் ஒருவனை நாடிப் பாடிப் பரிசில் பெற்று வரும் கூத்தர் , தன் எதிர்ப்படும் இரவலனை அந்த வள்ளலிடம் செல்ல விடுப்பது ஆற்றுப்படை என்பதாகும். அவ்வகையில். தன் வறுமை […]
குரு அரவிந்தன் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் […]
கோ. மன்றவாணன் திருக்குறளில் உள்ள கல்லாமை அதிகாரத்தில் ஒரு குறள் : கல்லா தவரும் நனி நல்லர், கற்றவர்முன் சொல்லாது இருக்கப் பெறின். கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்பதுதான் இந்தக் குறளின் பொருள். பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையும் இதுதான். கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்றால், கல்லாதவர்கள் கெட்டவர்களா என்றோர் உள் கேள்வி எழுகிறது. கல்லாதவர்களும் என்ற சொல்லில் வருகிற உம்மின் அழுத்தத்தைக் கவனியுங்கள். ஒருவர் படிக்கவில்லை என்றால்… கற்கவில்லை […]
குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் […]
கௌதம் சாரின் ஜே கே சார் புத்தகத்தை இரண்டு வாரங்களில் நிதானமாகப் படித்து முடித்தேன். ஏறக்குறைய முதல் 125 பக்கங்கள் வரை நிதானமாகப் போய்ப் பின்னர் ஒரே மூச்சில் ஒரு நாளில் படித்து முடிக்கும்படி இருந்தது. ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க நான் எடுத்துக் கொள்ளும் நேரம் புத்தகத்தைவிட அதிகமாக என் மனநிலையைப் பொருத்தது. ஆனாலும் இந்நூலில் முதலில் கௌதமன் சார் தன் வாழ்க்கைக் குறித்துக் கொடுக்கும் அறிமுகங்களை அறிந்த பின்னரே நுழைய முடிகிறது. இது ஜே […]
சோம. அழகு நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் […]
குரு அரவிந்தன் சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிகழ்வில் சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம், தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம், திருக்குறள் ஓர் உலகப் பொது நூல், ஆகிய மூன்று […]
காலமும் கணங்களும் : இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் ! முருகபூபதி பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள். தேநீரின் […]