பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)

This entry is part 29 of 32 in the series 15 ஜூலை 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com   புதுநெறி காட்டிய கவிஞர்கள்   நல்ல சிந்தனையிலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்கும் சிறந்த குறிக்கோளை உடையவர்கள்தான் சிறந்த கவிஞராகத் திகழ முடியும். சிறந்த கவிஞன் தன்னுடைய உயிர்-மூச்சு-உழைப்பு-தொழில் எல்லாம் கவிதைதான் என்று எண்ணுவான். கருத்துக்கள் செறிந்த கற்பனை வானில் எவரும் எட்டிப்பிடிக்க முடியாத மிக உயர்ந்த நிலையில் சிறகடித்து வட்டமிட்டுத் திரிவான். அவன் பழைமைகளைப் பார்ப்பான். இருக்கின்ற உண்மைகளை உணர்வான். எதிர்காலததில் எழவேண்டிய புதுமைகளை உணர்த்துவான். செய்ய […]

பில்லா -2 இருத்தலியல்

This entry is part 27 of 32 in the series 15 ஜூலை 2012

அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும் ஒரு மனிதனின் கதை.”அங்கருக்கப்பவே நீ ஒழுங்கா இருந்ததில்ல, இப்பவும் அப்டியே தான் இருக்கியாடா”ன்னு அக்கா கேட்கிறார்.தவறி விழுந்த துப்பாக்கியை தடவி எடுத்து அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது. சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல், மிருகம் போல நடத்தப்படுதல், முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது தள்ளிவைத்திருத்தல், தாம் நினைத்த அமைதி வாழ்க்கையை, எல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல், இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்ன தான் செய்வான் ? இதற்கும் […]

வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்

This entry is part 25 of 32 in the series 15 ஜூலை 2012

முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரி சிவகங்கை மனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்குப் பலப்பல பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு என்பது ஒரு தனிமனிதனின் விடுதலை மிக்க இடமாகும். ஒரு மனிதன் தனக்கான வசதிகளை தானெ தேடிச் சேர்த்து அவற்றை அனுபவிக்கும் […]

பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை

This entry is part 21 of 32 in the series 15 ஜூலை 2012

சிறகு இரவிச்சந்திரன். வெகு நாட்களுக்குப் பிறகு போரூர் நூலகம் போனதில், கிடைத்த வெகுமதி, புதிய பார்வையில் வந்த மேற்சொன்ன கதை. கி.அ. சச்சிதானந்தம் தொகுத்த “ அழியாச் சுடர்கள் “ தொகுப்பிலிருந்து எடுத்துப் போட்ட பழைய கதை. தகப்பன் ஓடிப்போய், தாய் வேறொருவனுடன் துணை தேடிப் போனபின், அற்புதமரி என்கிற பதினெட்டு வயதுப் பெண், அன்புக்கு ஏங்கி, கிடைக்காத விரக்தியில் சமூகத்தின் பால் வன்மம் கொண்டு, நினைத்தபடி வாழும் கதை. கதை ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் […]

கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

This entry is part 10 of 32 in the series 15 ஜூலை 2012

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமிழிலக்கிய உலக மாநாடு 07.07.2012 சனிக்கிழமை ‘காப்பியங்கள் ‘ அமர்வில் ஆற்றிய தலைமை உரை   முன்னுரை : கம்பன் – கன்னித் தமிழுக்குக் காவிய மாளிகை கட்டி எழுப்பியவன்! பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று பல்லாயிரம் பேர்களைக் கொன்று புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு! பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து பல்லாயிரம் பேர்கள் உள்ளம் புகுந்து கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் ! கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா? […]

என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.

This entry is part 6 of 32 in the series 15 ஜூலை 2012

பவள சங்கரி ஓய்வு பெற்ற ஒரு சி.பி.ஐ. உயர் அதிகாரியின் மலரும் நினைவுகள்   ஆசிரியர் : கே.ஏ. ராஜகோபாலன் ஆங்கில மொழியின் தமிழாக்கம் : ராணிமைந்தன் பக்கம் :320 முதற்பதிப்பு – பிப்ரவரி 2000   நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation)  பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்படுகிற, நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கிய விசயங்களை ஆய்வு செய்யும் இந்திய அரசாங்கத்தின் உயர்நிலை புலனாய்வுத் துறைதான் சி.பி.ஐ என்கிற இந்தத் […]

குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்

This entry is part 2 of 32 in the series 15 ஜூலை 2012

ஹெச்.ஜி.ரசூல் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னாமுகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். தாயார் அன்னை பாத்திமாவின் ஊர் தொண்டி. கனகாபிஷேகமாலை எழுதிய கனக கவிராயர் வழிவந்த குணங்குடியாரின் சமகால படைப்பாளி தொண்டி மண்ணில் பிறந்த மோன குரு ஷைகுமஸ்தான். தந்தையூரான குணங்குடி இவரது கவிதைப்பரப்பெங்கும் ஒரு குறியீட்டுச் சொல்லாடலாக தொடர்ந்து இடம் பெறுகிறது. குணங்குடி என்பதை குணங்கள் குடி கொண்டநற்பதி / சுவனம் / கனவுலகு […]

ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)

This entry is part 35 of 41 in the series 8 ஜூலை 2012

ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” ! நான் அறிந்தவரை ஈழத்துக் கவிதைகளின் அசைவுகள்,அனுபவங்கள் அண்மைக்கால சூழலில் புலமும் புறமுமாக எழுதப்படுவதையும் சித்தரிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.பிரிநிலை என்பதுகளில் தீவிரமாக கட்டமைக்கப்பட்ட சூழலில் யுத்தத்தின் அனுபவங்களை அல்லது வரலாற்றுப் பதிவுகளை தொண் ணூறுகளில் துயர்தலின் வலிகளாக,ஆறாத காயங்களின் முறையீடுகளாக காணப்பட்டன. நீளும் சமூகப் பிரச்சினைகளை அகிலன்,சிவசேகரன்,அரபாத்,ஜெயபாலன்,இளைய அப்துள்ளாஹ் என படைப்புக்கள் காயங்களோடு வெளிவந்தன.நெஞ்சை உழுக்கும் விதமாக வாசிப்புக்கள் அமைந்ததோடு உண்மைநிலை சடுதியாக […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)

This entry is part 17 of 41 in the series 8 ஜூலை 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்கள் காண விரும்பிய பாரதம்      மகா கவியும் மக்கள் கவியும் பாரதம் அனைத்துத் துறைகளிலும் உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினர். எவ்வாறெல்லாம் பாரதம் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தமது பாடல்களில் குறித்து வைத்தனர். பாரத நாட்டைப் பற்றி பல்வேறு கனவுகளைக் கொண்டிருந்ததற்கு இருகவிஞர்களின் பாடல்களே சான்றுகளாக அமைந்துள்ளன. பாரதி இந்தியாவைப் பற்றி பற்பல கனவுகள் கண்டு அவற்றையெல்லாம் பாடல்களாகப் பாடி […]

கோவை இலக்கியச் சந்திப்பு

This entry is part 11 of 41 in the series 8 ஜூலை 2012

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற  இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில்      இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. ஜுன் மாத நிகழ்வு நரசிம்மலுநாயுடு நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்த்து.. கோவையில் இதழியலின் முன்னோடியாக இருந்தவர் நரசிம்மலுநாயுடு. பயண இலக்கியங்களில் முத்திரை பதித்தவர். அரிய நூல்களைப் பதிப்பித்தவர்.எண்ணிக்கையில் அவர் பதிப்பித்தவை நூற்றுக்கு மேல் இருக்கும். கோவை கிழாரின் நூல்கள் வெளிவர உத்வேகமாக இருந்தவர்.கோவையின் சிறுவாணி குடிநீரின் மூலத்தைக்கண்டு பிடித்து […]