தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15

  கால தேச வர்த்தமானங்களைக்  கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு வைத்த மைல்கல் போல அன்றும் அதற்கு அப்புறமும்  தான் முதலில் கொண்ட அபிப்பிராயத்தையே ஒரு சுமையாக முதுகில் ஏற்றிக் கொண்டு, கண்…

இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

                             [எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு…

கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்

அழகியசிங்கர்     கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன்.  அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.அவருடைய எதாவது ஒரு கவிதையை…

கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது

கோ. மன்றவாணன்      கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்த விவாதம் குறித்துக் கொஞ்சம் காண்போமே...       தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கள் விகுதி…

பரகாலநாயகியும் தாயாரும்

                                    பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார்.              மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ           மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட           எய்வண்ண வெஞ்சிலையே துணையாக…

அருளிசெயல்களில் பலராம அவதாரம்

இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவரது மனைவியின் பெயர் ரேவதி, இவரின் தங்கையின் பெயர் சுபத்திரை ஆவாள். ஆழ்வார்கள் தம் அருளிச்செயல்களில் ஒரு சில இடங்களில்…

யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

  சு.பசுபதி, கனடா   1. அறிமுகம் யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின் ஆசிரியப்பாக்கள், நீதிக் காலத்தின் வெண்பாக்கள், காப்பிய காலத்தின் விருத்தங்கள், சிற்றிலக்கிய காலங்களின் சந்தங்கள்,…
ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’

ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’

அழகியசிங்கர்     இக் கதை மிகக் குறைவான பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தக் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்றால் தன்னுடைய பையன் கோபுவிற்குப் பாட்டுச் சொல்ல விரும்புகிறாள் இந்திரா.    பையன் கோபுவிற்கு அதில் விருப்பம் இல்லை.  அவன் கராத்தே வகுப்பில் சேர…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13

  காவலுக்கு  ஒரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி?  மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் வெளிக் கொணரும் கலைத்திறமை தி. ஜானகிராமனிடம் பளிச்சிடுகிறது. வெத்திலைக்கார வேதாந்தி (மனுஷன் பாம்பாட்டிச் சித்தரின், சிவவாக்கியரின் சிந்தனைத் தெறிகளை உள்வாங்கிக் கொண்ட…

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

கோ. மன்றவாணன்       எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். அதுவரை செம்மையாக்குநர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.       ஆங்கிலப் பதிப்பக உலகில் தொழில்முறை செம்மையாக்கம் உள்ளது.…