(வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

This entry is part 20 of 42 in the series 25 நவம்பர் 2012

Sand and Foam – Khalil Gibran (5) (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5) பவள சங்கரி புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம். சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு. எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன். […]

வருவேன் பிறகு!

This entry is part 16 of 42 in the series 25 நவம்பர் 2012

-பா.சத்தியமோகன் நெஞ்சில் யாருமில்லாத போது நுழைகிறேன் இருக்கின்ற சிலரும் உறக்கத்தில் இருக்கின்றனர் காற்று இன்று அமைதியாய் இல்லை எவருக்கும் அமைதி பற்றி தெரியவில்லை நன்கு அறிய முடிகிறது ஒருவன் சந்தேகிக்க எனக்கு வரும் காற்றின் முன்நின்று அதையும் தடுக்கும்போட்டியில் உள்ளான்! விலகி எழுந்துபோக நினைக்கிறேன் இருக்கின்ற சிலரின் கால்கள் உறக்கத்தில் மட்டுமே நடக்கப்பழகியுள்ளதையும் அறிகிறேன் இதற்கு மேல் நான் எழுத எண்ணிய காகிதமும் குத்துகிறது யாருமில்லாதபோது வருகிறேன் பிறகு! *****

ரூபம்

This entry is part 15 of 42 in the series 25 நவம்பர் 2012

தோட்டத்துப் பூக்கள் பிணம், கடவுள், மணமக்கள் அலங்கரிப்பது எதை என்று தெரிந்து கொண்டா மலர்கிறது முலைப் பாலின் போதை மது புட்டியில் முடியும் நடுநிசி தூக்கம் இல்லை கனவுத் தொல்லை கை கதவைத் தட்ட உள்ளேயிருந்து பதிலில்லை படுக்கைவிரிப்பில் அவள் வந்து சென்ற சுவடுகள் நாய் காலை நக்குவது தெரிகிறது எனக்கு குவார்ட்டர் பத்தாது சுயத்தை இழக்கவே ஏதோ ஒரு போதை இரவில் நான் சாப்பிட்ட பாத்திரத்தை நக்கிக் கொண்டிருக்கும் பூனை போதையில் தெரியவில்லை நேற்றிரவு பெய்த […]

இராத்திரியின் சக்கரங்கள்

This entry is part 11 of 42 in the series 25 நவம்பர் 2012

இன்று, இப்பொழுது, இங்கு இயந்திரத்தின் மனசாட்சி ஒன்றை ஒளியில் ஒட்டி எனக்கு முன் வைத்தது மின்னணுக்களின் அசுரப் பயணங்கள்   அதை அழுது தீர்த்திராத இந்த இரவின் தனிமையிலிருந்தவாறு என்னுடனே வந்து கொண்டிருக்கும் இருளிற்கு பரிசளித்தபடி யாத்திரைகள் நீடிக்கின்றன   வேகமாகச் சுழலும் இரு சக்கரங்களை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்   பாதுகாவலற்ற மனதின் இன்பத்தையும் இனம் புரியாததொரு பயத்தையும் இந்த இரவிற்கு வரமெனக் கொடுத்தது யார்..?   பார்வையற்றிருக்குமிந்த கொடூர இராத்திரியின் சக்கரங்கள் ஓய்வற்று சுழல்கின்றன … *** கலாசுரன்

ஒரு ரத்தக்கண்ணீர்

This entry is part 8 of 42 in the series 25 நவம்பர் 2012

ருத்ரா அதோ அங்கே ஒரு “கிரஹப்ரவேசம்” மாவிலை தோரணங்கள். மங்கலப்புகை மூட்டம். கொம்புகளை ஆட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் “கோ மாதா” மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனும் இதைத்தான் குறிப்பிட்டான். ஆ வை அன்னையாக‌க்க‌ருதுவ‌தில் பிழையில்லை. ஆனால் த‌மிழ் அன்னையை ம‌ட்டும் தெருவோர‌ம் எச்சில் இலைக‌ள் எப்போது குவியும் என்ற‌ இட‌த்தில் இருத்திவிட்டு “ஹோம‌ங்க‌ள்” கொடி க‌ட்டுகின்றனவே! ல‌க்ஷ்மி ஹோம‌ம் க‌ண‌ப‌தி ஹோம‌ம் …….. ம‌ந்திர‌ங்க‌ள் திகு திகு வென்று எரிகின்ற‌ன‌. ஸ்லோக‌ங்க‌ள் எனும் ஆக்கிர‌மிப்பு செய்த‌ ஓசைக்கூச்ச‌ல்களின் […]

“ஆம் ஆத்மி”

This entry is part 7 of 42 in the series 25 நவம்பர் 2012

ருத்ரா ஆம். இது இனிமேல் குப்பன் சுப்பன்களின் பார்ட்டி. தாத்தா அப்பா பேரன் பூட்டன் என்று எத்தனை நாளைக்கு “நூல்”பிடித்துக்கொண்டிருப்பது? ரத யாத்திரை போகும் அந்த ரதத்தில் ராமனை இறக்கிவிட்டு (ஊழல் பழி சொன்ன) சலவைத்தொழிலாளிக்குத் தான் இனி தூப தீபமா? எப்படியிருப்பினும் பொது ஜனம் என்றாலும் சரி மகா ஜனம் என்றாலும் சரி சாமான்யன் என்றாலும் சரி பொத்தான் அமுக்கும் போது..இந்த‌ “பொது உடைமையை” ம‌ன‌தில் வைத்துக்கொண்டால் ச‌ரி. வெள்ளைக்குல்லாய்க‌ளின் கும்ப‌மேளா போல் தெரிந்தாலும் ஊழ‌ல் […]

ஓடிப் போனவள்

This entry is part 6 of 42 in the series 25 நவம்பர் 2012

தி.ந.இளங்கோவன் கூடை நிறைய இலுப்பங்கொட்டைகள், கிளி கொத்திப்போட்ட பழங்களை பொறுக்கி காயவைத்தவள் அவள். சாக்கு மூட்டையில் வேப்பங்கொட்டைகள். மரம் மரமாய்ப் பொறுக்கி, தண்ணீரில் போட்டு பிதுக்கிப் பிசைந்து அலசி காயவைத்து சேகரித்தவள் அவள். பில்லறுத்துப் போட அவளின்றி காய்ந்த வைக்கோலை அரை மனதுடன் அரைத்து நிற்கிறது பசுங்கன்று. அந்திமல்லி பறிக்க அவளின்றி அங்கேயே உதிர்க்கிறது பூக்களை. அரைத்துவந்த அரிசியும் தவிடும் எட்டு போட்ட சித்திரமாய் பிரியாமல் மூட்டையிலே கிடக்குதங்கே அவளில்லாக் காரணத்தால். கல் கட்ட அவளில்லை, மரவட்டையாய் […]

என் ஆசை மச்சானுக்கு,

This entry is part 5 of 42 in the series 25 நவம்பர் 2012

குளச்சல் அபூ ஃபஹத் அன்புக்கணவா ..!!! முகப்புத்தகத்தில் உனது கவிதை வந்ததாம் – உன் வளைகுடா தனிமையை கண்ணீராய் வடித்திருந்தாயாம்….. கடிதங்கள் போய் இணையங்கள் வந்தபின் நீ நிறைய எழுதுகிறாயாம் – யாரோ தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர் நல்ல கவிதைகள் என்று….. நீ எனக்கெழுதுவது மாதமொருமுறை எனினும் தபாலில் உனது கடிதம் வரும்போது நீயே வந்ததாய் நினைத்துக்கொள்வேன்….. குடும்பத்தை விசாரித்து குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் – கூடவே நீ மாதம் அனுப்பும் பணத்தின் கணக்கையும் கேட்டிருப்பாய்….. கடிதத்தின் […]

விஷமேறிய மரத்தின் சிற்பம்

This entry is part 3 of 42 in the series 25 நவம்பர் 2012

மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட மரத்தின் ஆதிக் கிளைகள் காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன விருட்சங்களை வெட்டிச் செல்லும் விஷமேறிய பார்வைகளை சிற்பி காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில் வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம் எவ்வளவு ப்ரியத்துக்குரியது நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில் அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில் வன்மங்கள் கூராகின இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது புராதனச் சடங்குகளின் பிரிந்த […]

ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!

This entry is part 23 of 29 in the series 18 நவம்பர் 2012

“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு…” பாரதி மும்பை நகர் வீதிகளில் தேடினான். கவிதை என்றால் இலக்கியம் நினவுக்கு வந்தது. “காண்டேகரின்”எழுத்துக்களின் மின்னல் பீலிகளாய் அந்த “கிரவுஞ்ச வதம்” அவ‌ன் கண்ணுக்குள் நிழல் காட்டியது. அந்த‌ காவிய‌க்க‌சிவோடு “சேரத்து தந்தம்”தன்னை பண்டமாற்றம் செய்ய‌ தேடினான் தேடினான் ஒரு மராட்டியனை. அன்று அங்கே எல்லோரும் தேடித்தேடி தேம்பினார்கள் ஒரு மராட்டியனை. ஆனால் அந்த பேனா பிடித்த‌ மராட்டியனுக்குப் பதில் அவ‌ன் பார்த்ததெல்லாம் வாள் பிடித்த மராட்டியன்கள் தான். வாள் […]