ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 17 of 41 in the series 10 ஜூன் 2012

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி. நாத‌ஸ்வ‌ர‌ம். எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? “மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே” அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும் த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்”என்ன‌ கோத்ர‌ம்?” கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை. ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்? அவ‌ள் போட‌ கோல‌ம். ப‌வுர்ண‌மி மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து. அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள். ============================== ============ருத்ரா

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

This entry is part 8 of 41 in the series 10 ஜூன் 2012

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும் சிலவேளை வீழ்வதாய்ப் போக்குக் காட்டும் ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும் இடித்திடித்துக் கொட்டிய நேற்றின் இரவை நனைத்த மழை உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில் அச்சமுற்றிருந்தேன் நான் மின்சாரம் தடைப்பட்டெங்கும் அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன் உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு உன் மீதான எனது சினங்களும் ஆற்றாமைகளும் வெறுப்பும் விலகியோடிப் […]

உருக்கொண்டவை..

This entry is part 6 of 41 in the series 10 ஜூன் 2012

தினம் வந்து கொண்டிருந்த கனவுப்புலியொன்று நனவில் வந்தது ஓர் நாளில். மூளைக்கனுப்பிய நியூரான் சமிக்ஞைகள் தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட திகைத்து மூச்சடைத்துத் தடுமாறி நின்ற எனை நோக்கி மெல்லக் கொட்டாவி விட்டபடி திரும்பிப் படுத்துக் கொண்டது, வாலசைவில் தன் இருப்பைத் தெரிவித்தபடியே தன் கட்டுக்குள் பிறரை வைக்க நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி. எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும் அற்ற பொழுதுகளில் கூர் பல்லால் ஆசீர்வதித்தும் என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில் பயம் கொன்று […]

நிலைத்தகவல்

This entry is part 1 of 41 in the series 10 ஜூன் 2012

கூச்சல்களும் எதிர்ப்புகளும் நிலைத்தகவல்களிலேயே முடிந்துவிடுகிறது ஆதரவுகளும் அரவணைப்புகளும் ஒருசில லைக்குகளோடு முடிந்துவிடுகிறது பெண்ணியமும் ஆணியமும் ஆங்கில விசைப்பலகையின் விசை கொண்டு தமிழுருவில் எழுதப்பட்ட வலைப்பதிவோடு முடிந்துவிடுகிறது அவலங்களும் அராஜகங்களும் பின்னூட்டங்களிலும் எதிர்வினைகளிலுமே தீர்ந்து விடுகிறது எனக்கென்னவாயிற்று, ஒரு கையில் கோப்பைத்தேநீருடன் நானெழுதிய இந்தக்கவிதை(?) பிரபல வாரப்பத்திரிக்கையில் வெளிவந்தால் மட்டும் எனக்குப் போதுமென்றாகிவிட்டது. – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

காத்திருப்பு

This entry is part 19 of 28 in the series 3 ஜூன் 2012

குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில் காலத்தின் இருப்பில் கவனம் கூடிப் போவதுவும் இதுவும் கடந்து போகுமென இதயம் கிடந்து துடித்தாலும் காலத்தின் கடப்பில் பிடி நழுவிப் போவதுவும் இதோ இந்த நொடியில் தீர்ந்துவிடப் போகிறது அடுத்தது நாம்தான் என்கிற அனுமானங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில் சுமையேற்றி வதைப்பதுவும் என நிகழ்காலம் நிழல்போலத் தெளிவின்றிப் போனதால் சுவாசிக்கக்கூட பிரயாசைப் […]

நச்சுச் சொல்

This entry is part 13 of 28 in the series 3 ஜூன் 2012

தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் கவலைகள் குற்றமில்லை விசுவாசத்தில் கொஞ்சம் விளம்பரம் குற்றமில்லை நட்பில் சில முட்கள் குற்றமில்லை நல்ல பேச்சில் ஒரு நச்சுச் சொல் சுற்றமே இல்லை வெள்ளத்தில் ஓடம் நல்ல சொல் ஓடத்துக்குள் வெள்ளம் நச்சுச் சொல் அமீதாம்மாள்

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)

This entry is part 10 of 28 in the series 3 ஜூன் 2012

++++++++++++++++++++++++++++++++ காதல் சமப்படுத்தும் இதயங்களை ++++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்

This entry is part 9 of 28 in the series 3 ஜூன் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தீவிர வலிபோல் தாக்கியது என் ஆத்மாவை உன் கீதத்தின் இசை ! என் இதயம் எப்படித் துடித்தது என்று அறியும் இதயம் மட்டுமே ! பற்றிக் கொண்டு உன்னை பகல் இரவாய்க் காத்து வருகிறேன் உற்று உன் முகம் நோக்கி முற்றுகை செய்யும் என் விழிகள் ! உனக்காகத் தான் செய்கிறேன் உந்தும் தாகம் அதிகம் வழிபட்டுச் செய்யும் அவசியம் பெரு மகிழ்ச்சியில் […]

தடயம்

This entry is part 4 of 28 in the series 3 ஜூன் 2012

    மழை ஈரத்தில் பூமி பதிந்துகொண்ட பாத அடையாளங்கள் போல எல்லா நினைவுகளும் காலத்தில் தேங்கி நிற்கவில்லை.   ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற உறைந்த வெள்ளைப் புகை உருவாக்கின ஒற்றையடிப்பாதையை சூரியன் உருகிக் கரைத்துவிடுவதுபோல   என் வாழ்க்கை வனாந்தரத்தின் ப்ரத்யேக ஸ்வரங்களைத் தொடுத்து விடுமுன்னர் கலைத்துவிடுகிறது காலம்.   கர்ப்ப வாசம் தேடி இப்போது அலையும் மனமும் விட்டுச் செல்லவில்லை எந்தச் சுவட்டையும்.     —  ரமணி

யாதுமாகி …

This entry is part 19 of 33 in the series 27 மே 2012

நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில் சமைத்து பரிமாறுகிறார்கள் .. தோல்விகளை திரையிட்டு மறைத்து வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் .. புழக்கடை தனதாயின் அதிலும் […]