பி.கே. சிவகுமார் (திருச்சி தந்தை பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழாய்வுத் துறையும், நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் படைப்புகள் குறித்த இருநாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஜனவரி 7-8, 2025 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு திரையிடப்பட்ட கட்டுரையின் எழுத்து வடிவம் இது.) நண்பர்களுக்கு வணக்கம்! வட்டார வழக்கில் கதை சொல்வது என்பது அந்தப் பகுதியில் புழங்கும் பேச்சு வழக்கைக் கவனித்து, பெரும்பாலும் புழங்கும் உச்சரிப்பையும் மொழியாளுகையையும் பிரதியெடுப்பதாகக் […]
படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார். 1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர். 1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய […]
குரு அரவிந்தன். வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை மனித சிந்தனை வளத்தின் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை. தேவையானவை. மனிதனில் உதிக்கும் அத்தனை சிந்தனைகளுக்கும் வழியும், வாய்ப்பும், தெளிவும் திருக்குறளில் உண்டு. தற்காலத்தில் கணினித் துறையின் புதிய சிந்தனை மற்றும் செயல் வளமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவியல் துறைக்கான பல கூறுகளும் அத்துறையின் சிந்தனை மற்றும் செயல் நேர்த்திக்கும் வழிவகை காட்டுகின்றது திருக்குறள். திருக்குறளை இன்றைய செயற்கை நுண்ணறிவியல் […]
தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !! முருகபூபதி இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம். பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன. ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி – கே.வி. கோவர்தனன் இலக்கியம்/கருத்து இரு முனைக் கத்தி – அருண் கோலட்கர் – ஆர். சீனிவாசன் கனடா! கனடா! – ஜெகதீஷ் குமார் அறிவியல் ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-3 – அருணாசலம் ரமணன் மூன்றாம் […]
யசோதா சரவணன் மேட்டுப்பாளையம் மேடுகளும் பள்ளங்களுமாகவே வாழும் மக்களின் வாழ்நிலைகளும் உயர்சாதி பணக்காரனின் வீடோ மேட்டுப்பகுதியில் அதை இருபது அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது. அதையொட்டிய தலித்துகளின் வீடுகளோ கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில். கருங்கல் சுவற்றின் துளைகளில் கசியும் கழிவுநீரும், வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும் கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடும்போது அவர்களின் ஹாலோபிளாக் வீடுகளின் அஸ்திவாரங்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அவர்கள் அடுக்குமூட்டையில் அடி மூட்டைகளாய் இருக்கும் அருந்ததியர்கள். சுற்றுச்சுவருக்கு ஒற்றைச் […]
முருகபூபதி இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது. நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி […]
சுப்ரபாரதிமணியன் இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம், தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது.. வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும் விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன. . கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின் அனுபவங்களை, அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த […]