சுப்ரபாரதிமணியன் பாலஸ்தீனத்து பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் நடமாட்டம்….. அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளையும் பார்வையையும் கண்டு பயந்து மக்கள் ஒளிந்து கொள்கிறார்கள். வீட்டுக் கோழிகள் கூட அங்கிருக்கும் ஆலிவ் மரங்களில் ஏறி கை தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றன. ஆலீவ்மரத்து கிளை துணுக்கு ஒன்றை ஒரு சிறுவன் ஒரு இஸ்ரேல் ராணுவ வீரனுக்கு பரிசு போல் தருகிறான். தூரமிருந்து பயத்துடன் வேடிக்கை பார்க்கும் அவன் அம்மாவின் கையில் வெங்காயம் இருக்கிறது. ஏதாவது கண்ணீர் புகை வீச்சு இருந்தால் உடனடியாக […]
“நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள் ஆவுது. கல்யாணம் ஆனப்போ… எனக்கு முதல் மனைவி தமிழ்தான். அப்புறம்தான் எல்லாமும்னு சொன்னார். அப்ப ஏன் என்ன கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்டேன். என் தமிழ்ப்பணிக்கு நீ எப்பவும் துணையா இருக்கணும்னு சொன்னார். அதிலிருந்து நான் அப்படித்தான் இருந்துகிட்டு வர்றேன்.”வளவ. துரையன் அய்யாவின் தமிழ்ப்பணிக்கு, இதைவிட ஒரு நற்சான்றிதழை யாரும் தந்துவிட முடியாது.நடப்புக் காலத்தில் […]
22.04.2023 அன்று கடலூரில் நடைபெற்ற திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய அயல்வெளிப் பயணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இப்புத்தகம் திறனாய்வு செய்யப்பட்டது. அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும் நுட்பங்களை நூல்கள் தான் செய்கின்றன. கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், […]
80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம் ஆதரிப்பார் யாரும் இல்லாததால் 64 வருட நூலகத்திற்கு மூடுவிழா இப்படியொரு பதிவை ஃபேஸ்புக்கில் கவிஞர் கனியமுது அமுதமொழி யின் டைம்லைனில் படிக்க நேர்ந்தது. கோவையில் உள்ள தியாகு நூலகம் மூடப்படலாகாது. இது குறித்த யூட்யூப் காணொளியையும் பார்த்தேன் // https://youtu.be/3sm-_zoLUGM மிகவும் வருத்தமாயிருந்தது. இது குறித்து கவிஞர் தமிழ்நதி (யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ஆறாத்துயரத்தை சுமந்துகொண்டிருக்கும் கவிஞர் தமிழ்நதி உட்பட தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இந்த நூலகம் மூடப்படலாகாது […]
சோம. அழகு சாலையோரங்களில் அழுக்குத் தலையும் கந்தல் ஆடையுமாக ஒரு உணவு பொட்டலத்தோடு எந்த வேலையும் செய்து பிழைக்க இயலாத நிலையில் சுருங்கிப் போன உடலை இன்னும் சுருக்கிப் படுத்திருக்கும் ஆதரவற்ற முதியோரைக் காணும் போதெல்லாம் தோன்றும்…. குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் தமக்கு இந்நிலை நேரும் என எண்ணிப் பார்த்திருப்பார்களா? அதிலும் சிலர் வசதியான வாழ்க்கை முறையில் வாழ்ந்திருந்ததாகக் கூறக் கேட்க நேரும் போதெல்லாம் எனது உடல் ஒரு கணம் சில்லிட்டு அடங்கும். […]
ப.சகதேவன் நமது இப்பிறவியை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தமியாளம் மொழியில் வெளிவந்துள்ள ’நண்பகல் நேரத்து மயக்கம்’ இந்தப் பிறவியில் நமது அடையாளமாக இருக்கின்ற எல்லாமும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. நமது மொழி, இனம், மரபுகள், அந்நியரோடுள்ள உறவுகள் என எல்லாவற்றுனுள்ளும் நிகழும் குழப்பம்- ஒரு வரலாற்றுக் குழப்பம் சினிமா மொழியில் சொல்லப்படுகிறது. இப்படத்தின் கதை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பழனி- ஒட்டஞ்சத்திரத்திற்குஅருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கின்றன.. அங்கிருந்து […]
கடல்புத்திரன் முதல் நிலவிய கல்வியிலும் …அப்படித்தான் நடைபெற்றிருந்தது . ஒரே காலனி சிந்தனை , மயக்கம் . இலங்கையின் அறுபது வீத உணவை…. வழங்கிற …தமிழர்களின் ஒத்துழைப்பையும் ( தமிழர் விவசாய முறைகளை ) கெளரவத்துடன் பெற்றிருக்க வேண்டாமா ? . விவசாய அறிவு அவர்களை விட இவர்களிடமே அதிகமாகவே இருக்கிறது . எதிலும் , இன அலட்சியம் தொடர்க்கிறது . தமிழர்பசளை முறைக்கு முற்றாகவே கல்தா ! மொழிக்கு அவமரியாதை . நிலம் பறிப்பு . […]
முருகபூபதி சினிமாவுக்கு அத்திவாரம் கதை. ஒரு கட்டிடம் பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால் உருவாகின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் பல சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகியிருக்கின்றன. பாலுமகேந்திரா சிறந்த சில சிறுகதைகளை, கதை நேரம் என்ற வெப்சீரியல் தொடராக வரவாக்கினார். அதன் தொடக்கத்தில் வரும் எழுத்தோட்டத்தில் மூலக்கதையை எழுதியவரின் பெயரையும் காண்பிப்பார். கமல், தனது குருதிப்புனல் திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில், அக்கதைக்கே சம்பந்தமில்லாத எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் […]
முருகபூபதி மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால், இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும் வீரகேசரி சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம் துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக வழங்கியது. வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும், படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு வந்திருக்கும் வீரகேசரி […]
திராவிடப்புண்ணாக்கன் வடக்கத்தியானை விரட்டப் புறப்பட்டிருப்பது ஏறக்குறைய அண்டர்வேருக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்வதற்குச் சமமானது. இங்கே வடக்கத்தியானை விரட்டியடித்தால், வடக்கே தமிழனை விரட்டியடிப்பார்கள். அதன் மூலமாக அரசியல் லாபம் பார்க்கலாம் என்று நினைப்பது பேராபத்தில் முடியும் என்பதினை திராவிடப்புண்ணாக்கன் உணருவது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல்தான். தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவெங்கும் ஏறக்குறைய இரண்டு கோடித் தமிழர்கள் வசிக்கிறார்கள். தோராயமாக பெங்களூரில் பத்து இலட்சம், மும்பையில் முப்பது இலட்சம், தில்லியில் பதினைந்து, பீகாரில் ஐந்து எனப் பரவலாக தமிழர்கள் வசிக்காத இடமே […]