முதல் சந்திப்பு : எங்கிருந்தாலும் சோர்ந்துவிடாமல் அயராமல் இயங்கும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் ! கற்றதையும் பெற்றதையும் சிந்தனை வடிவில் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் ! ! முருகபூபதி “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் “ என்ற சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது. 1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் எனக்கு நண்பர்கள் உருவானார்கள். அவ்வாறு 1975 இல் […]
சோம. அழகு எந்தவொரு மனநிலையிலும் அதற்கு ஏற்ற (அல்லது ஏற்பில்லாத) எவ்வுணர்வையும் பூசிக்கொண்டு எந்தத் தொனியிலும் கூற முடிகிற ஒரு வாக்கியம் இது. ரொம்பவே வெட்டியாக இருந்த அந்த சுபதினத்தன்று ஒரு நொடி சந்திரமுகியாக (ஜோதிகாவைச் சொன்னேன்!) மாறி கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு தினுசாகச் சொல்லிப் பரிசோதித்த பின்பே எழுதுகிறேன். இன்பம், துன்பம், சோகம், விரக்தி, கோபம், சினம், துயரம், பயம், கவலை, ஏமாற்றம், பரிவு, எரிச்சல், சலிப்பு, அலட்சியம், வெறுப்பு, வியப்பு என […]
சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! படித்தோம் சொல்கின்றோம் : சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன…? ! முருகபூபதி “ வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் […]
Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET யோகா என்றால் என்ன?யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான “யுஜ்” என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு “சங்கமம்” அல்லது “ஒன்று கலத்தல்” என்ற பொருளும் உண்டு. உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு […]
சோம. அழகு எச்சரிக்கை : கடுமையான ஒவ்வாமை மனநிலையில்தான் எழுதத் துவங்கினேன். In my defense, எல்லோருமே வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் புள்ளியில் கொஞ்ச நேரமேனும் சஞ்சரித்திருப்போம். ‘அன்பு* (* – நிபந்தனைகளுக்குட்பட்டது)’ என்று வகைப்படுத்தினால் எளிதாய் இருக்குமோ? ஏனோ அதுதான் சிறந்ததாகத்தான் படுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் யாராக இருந்தாலும் “உன் வெளியில் நான் உன் அனுமதியின்றி நுழைய மாட்டேன். என் வெளியில் நீயும் அத்து மீறாதே! ஆனால் உனக்கு உதவி தேவைப்படும் […]
குரு அரவிந்தன் தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது. கனடாவின் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப்லாங்க் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு நாள் […]
சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக […]
ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர். அவர் எம்போன்றோர் நினைவில் வாழ்ந்திருப்பார்.
Sir: My aunt – Jyothirlatha Girija – has been a regular contributor in thinnai magazine. She unfortunately passed away yesterday. Request to please publish this for your readers. Thank you, Mahendran
சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் […]