கால் செண்டரில் ஓரிரவு

This entry is part 19 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  சேத்தன் பகத் – தமிழில் சிறகு இரவிச்சந்திரன். அன்னிய ஆங்கில எழுத்தாளர்களுக்கு நிகராக சேத்தன் பகத் நாவல்கள் போற்றப்படுகின்றன. பகத் வட இந்தியக்காரர். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். எல்லாம் இந்தியாவைப் பற்றி. ஒரு நாட்டின் உள்விசயங்களைத் தெரிந்து கொள்ள, அவரது கதைகளை, அயல்நாட்டினர் அள்ளிக் கொண்டு போகிறார்கள். சுவாரஸ்யம் கூடினால், சுற்றுலா பயணியாக வந்து விட்டு போகிறார்கள். அரசுக்கு லாபம் அன்னிய செலாவணி. சேத்தன் பகத்தின் ஒரு நாவலைத் தழுவி 3 இடியட்ஸ் எடுத்து நண்பனாகவும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28

This entry is part 16 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை   நினைவுகள் அனைத்தும் சுகமாக இருக்குமென்பதில்லை. சுமையான நினைவுகளும் உண்டு என் பயணத்தில் மலர்த்தோட்டங்களும் உண்டு. குமுறும் எரிமலைகளும் இருக்கும். எளிதில் உணர்ச்சி வயப்படுவேன். இது என்னிடமுள்ள குறைகளில் ஒன்று. வெளிப்படையான பேச்சு விவேகமல்ல. இதுவும் என் குறைதான். என்னிடமிருக்கும் குறைகளை அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பதுடன் திருத்திக் கொள்ளவும் முயற்சிப்பேன். மனிதன் ஓர் கலவைதானே. ஒன்றில் மட்டும் என்றும் நான் உறுதியானவள். என்னால் முடிந்த உதவிகளைச் […]

(100) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 14 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்‌ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் தான், ஊரை விட்டுப் போய்விட வில்லை. அலுவலகமும் அதேதான். அதே கட்டிடம் தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் உடனிருந்து என்னேரமும் பார்வையின் வட்டத்துக்குள் இருந்து கொண்டிருந்த சோப்ரா, மிருணால், மஞ்சு சென்குப்தா, எல்லோரையும் விட்டு வேறு தளத்துக்கும் வேறு அறைக்கும் செல்வதென்றாலும் எந்த அளவுக்கு இழப்பு இருந்ததோ அது இழப்பு தானே. […]

இஸ்லாமிய பெண்ணியம்

This entry is part 24 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ஹெச். ஜி. ரசூல் 1) பெண்ணின் உடல் – உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் […]

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

This entry is part 23 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து  தாமும் […]

திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு

This entry is part 21 of 28 in the series 9 செப்டம்பர் 2012

மலர்மன்னன் மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்க்கவேண்டும். தமிழக அரசியலில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டம் […]

(99) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 20 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே.   ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27

This entry is part 14 of 28 in the series 9 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு   கழனி  மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.   இது ஓர் பெண்ணின் புலம்பல். அவள் யாராயிருந்தால் என்ன, பெண்ணிற்கு இயல்பாகத் தோன்றும் உணர்வுகள் கட்டியவளுக்கும், காதல் பரத்தைக்கும் ஒன்றுதான். இப்பாடல்  நம் சங்க இலக்கியத்தில் ” குறுந்தொகை” காட்டும் […]

2016 ஒபாமாவின் அமெரிக்கா

This entry is part 11 of 28 in the series 9 செப்டம்பர் 2012

சித்ரா சிவகுமார் ஹாங்காங் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில், அமெரிக்க திரைப்பட ரசிகர்களைப் புயலெனத் தாக்கியுள்ளது ‘2016 ஒபாமாவின் அமெரிக்கா’ என்ற ஆவணத்திரைப்படம். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்..  அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பது தான் இந்த ஆவணப்படத்தின் முக்கிய கரு. 2010இல் வெளியான “ஒபாமாவின் பெருங்கோபத்திற்கான ஆணிவேர்” (ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்) ஒபாமாவைப் பற்றிய பல விவரங்களைத் தந்தது.  இதை அமெரிக்காவில் 17 வயதில் குடியேறிய இந்திய […]

மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

This entry is part 7 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்     பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள்  விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே. அரசு அலுவலங்களிற்கூட அதிக எண்ணிக்கையில் விடுப்பெடுப்பதற்கு இக்காலங்களையே தேர்வு செய்கின்றனர். நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கடையை கட்டிவிடும் காரியமும் அரங்கேறும்.   சோர்வைத் தொலைத்து புத்துணர்வுடன் இயங்கும் பிரான்சைக் காண்பதற்கு செப்டம்பர் […]