ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்

This entry is part 13 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாக, தங்களுக்கு எந்தவிதச் சேதார முமில்லாமல் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களைப் பார்த்து வியக்காமலிருக்கமுடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை. பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந்தரப் பிரஜையாகவும் 24×7 நேரமும் காட்டி யவாறே, இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப் பட்டுள்ள, உருவேற்றப்பட்டுவருகிற பெண்பிம்பங்களுக்காக, பெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவருகி […]

சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்

This entry is part 8 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நம் நாட்டிலேயே முதன் முதலில் முறைப்படி தொழிற்சங்கம் தொடங்கப் பட்டது சென்னையிலும் மும்பையிலும்தான். Madras Workers Union (சென்னை தொழிலாளர் சங்கம்) என்ற பொது அமைப்பு 1918 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. காங்கிரஸ்காரரும், சைவ நெறிச் செல்வரும், தமிழறிஞருமான சாந்த சொரூபி திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அது தொடங்கப் படுவதற்கு முழு முதற் காரணமாக இருந்தார் என்பதுதான் இதில் வியப்புக்குரிய செய்தி! (பி.பி. வாடியா) பி.பி. வாடியா, சிங்காரவேலு செட்டியார், சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் துணையுடன் […]

இந்திய தேசத்தின் தலைகுனிவு

This entry is part 7 of 36 in the series 30 செப்டம்பர் 2012

இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு. 2012, ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய எவ்விதமான சொரணையும் […]

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்

This entry is part 33 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் […]

செல்பேசிகளின் பன்முகத் தாக்கங்கள்

This entry is part 31 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கு.அழகர்சாமி மனிதரின் இன்னொரு விரல் போன்று செல்பேசி(Mobile phone) ஆகி விட்டது. சிலர் மிட்டாய்கள் போல் ஒன்றுக்கு மேலும் செல்பேசிகள் வைத்திருப்பர். குடும்பத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு செல்பேசி. செல்பேசியின் தாக்கமோ இடம், காலம், சூழல் கடந்ததாயுள்ளது. சிலர் சாலையில் நடந்து போகும் போது கூட ஒரு பைத்தியம் பேசுவது போல பேசிக் கொண்டே போவர். கழிவறையில் சிறு நீர் கழிக்கும் போது கூடப் பேசிக் கொண்டே சிறுநீர் கழிப்பவர்களைக் காண்கிறோம். சிலர் உண்ணும் போது கூட […]

7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்

This entry is part 25 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஆகஸ்டு 30லிருந்து பதினோரு நாட்கள் மதுரை தமுக்கம் வளாகத்தில் நடைபெற்ற 7வது மதுரைப் புத்தகத்திருவிழா கடந்த 9ம்தேதி முடிவுற்றது. ’திரு’ என்ற தமிழ்ச்சொல் தன்மதிப்பை இழந்து வருகிறது. ஒரு புத்தக விற்பனையைக்கூட திருவிழாவென்றா அழைக்கவேண்டும்? புத்தக விழாவென்றால் என்ன குறை? பணத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமோ அப்படி தமிழ்ச்சொற்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும். மதுரை, தன்னை ”மாநகரம்” என்றழைத்துக் கொண்டாலும் மக்கட்தொகை நெருக்கமில்லாவூர். எனினும் புத்தகத்திருவிழாவில் நல்ல கூட்டம். விற்பனையும் கூட. 11  நாட்களும் பிரபலமான […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29

This entry is part 18 of 41 in the series 23 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.   புலம்பெயர்ந்து செல்வோரரின் குடியிருப்புகள் உலகெங்கினும் பெருகிக் கொண்டிருக்கின்றது தாராவி பழமையான குடியிருப்புகளில் ஒன்று. அங்கும் ஆரம்ப காலங்களில் பல இடங்களிலிருந்து வந்த போதினும் நாளடைவில் தமிழர்கள் பெரும்பான்மையினராயினர். துரையுடன் தாராவிக்குள் நுழையும் முன்னரே அதன் சுற்றுப்புறத்தையும், உள்ளே நுழையவிட்டு அதன் அமைப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய களப்பணியில் முதலில் பார்வையில் பட்டவைகளையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். நிலைமையை மதிப்பீடு செய்ய அது முக்கியம்.. சென்னையில் […]

மொழிவது சுகம் 22:. இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்

This entry is part 8 of 41 in the series 23 செப்டம்பர் 2012

                                                            – நாகரத்தினம் கிருஷ்ணா     1. உ.வே.சா “தம்மின் தம்மக்கள் அறிவுடமையை” மருந்தாளுனர் பையன் மருத்துவர்; தாலுக்கா அலுவலக ஊழியர் மகன்  மாவட்ட ஆட்சியர்; எனப் பொருள்கொள்ளாமல் இரு வேறு காலத்தைச்சேர்ந்த ஒரு […]

ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …

This entry is part 6 of 41 in the series 23 செப்டம்பர் 2012

புனைப்பெயரில் ——————- எனக்கு பொருளாதார, இன்பெலெஷன் ரீதியாக பேசத் தெரியாது… ஆனால், சமூக ரீதியாக சில வினாக்கள்…   என்னைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்களும் இந்த இடைத் தரக பன்னாடைகளும் ஒன்றுதான்.   சில்லறை கடைக்காரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாம்..?   ஆனா, என் கேள்வி வேறு… நீங்கள்  காய்கறி கடையோ, பலசரக்கு கடையோ திறப்பதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட ஜாதியினராக இருந்தால் தான் முடியும்… அதனால், தான் நாடார் கடைகள் இருக்கும். அதை விட்டால் முஸ்லீம் கடைகள் […]

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

This entry is part 29 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா   இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் […]