சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்

This entry is part 2 of 37 in the series 22 ஜூலை 2012

அன்று 1949 = வருடத்திய ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தின் ஒரு நாள் முற்பகல். தேதி 27 அல்லது 28 ஆக இருக்கவேண்டும். எது என்று நிச்சயமாக நினைவில் இல்லை. ஜெம்ஷெட்பூருக்குப் போகவேண்டும். வழியில் சென்னையில் கழித்த முதல் முற்பகல் அது. ஜெம்ஷெட்பூரில் இருக்கும் மாமா எழுதியபடி சாயந்திரம் செண்டிரலில் இருந்து புறப்படும் கல்கத்தா மெயில் ஏறவேண்டும். காரக்பூர் வரை. ஒரு நாள் விட்டு மறு நால் காலை கார்க்பூர் போகும். பின் அங்கிருந்து பம்பாய் மெயிலில் […]

நினைவுகளின் சுவட்டில் – 94

This entry is part 1 of 37 in the series 22 ஜூலை 2012

அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான்  அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி […]

மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்

This entry is part 32 of 32 in the series 15 ஜூலை 2012

நதீம் எஃப் பரச்சா இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே ஜூலை 4 ஆம் தேதி, புதன் கிழமை, பஹவல்பூர் (தெற்கு பஞ்சாப்) நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டெஷனின் உள்ளே வெறியேறிய கும்பல் ஒன்று உடைத்து புகுந்தது. அந்த கும்பலின் குறி ஒரு நாடோடி. இப்படிப்பட்ட நாடோடிகளை பாகிஸ்தானில் ஏராளமாக இருக்கும் சூபி துறவிகளின் தர்க்காக்களின் அருகே பார்க்கலாம். இந்த நாடோடிகளை மலாங் malang என்று அழைப்பார்கள் அந்த பகுதி மக்கள் இந்த நாடோடியை சித்தசுவாதீனம் இல்லாதவர் என்று […]

நினைவுகளின் சுவட்டில் (93)

This entry is part 19 of 32 in the series 15 ஜூலை 2012

இன்னொரு நண்பரைப் பர்றிச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன். “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே பாடத் […]

அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்

This entry is part 18 of 32 in the series 15 ஜூலை 2012

நான் 1950 களின் ஆரம்ப வருடங்களின் நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறேன். மார்ச் 19-ம் தேதி ஹிராகுட் அணைக்கட்டின் நிர்வாக அலுவலகத்தில் ஆரம்பித்தது என் வெளி உலகத் தொடர்பு. ஒரிஸ்ஸாவின் சம்பல்பூர் ஜில்லாவின் ஹிராகுட்டில். அது ஒரு கிராமமாக இருந்திருக்க வேண்டும். மகாநதி என்னும் மிக பிரம்மாண்ட அகலமும் பனைமரங்களையே முழ்கடித்து விடும் ஆழமும் கொண்ட நதி அது. உண்மையிலேயே மகா நதி தான். அதன் குறுக்கே தான் அணை கட்டும் திட்டம். முதல் சில மாதங்களுக்குப் பிறகு […]

கல்வியில் அரசியல் -1

This entry is part 15 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன் பகுதி ஒன்று – இணையான அதிகார மையங்கள் அரசியல் என்றதும் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் ‘கல்வியில் அரசியல்’ என்றதும் கல்வியிலுமா? என்றெலாம் பரிணமிக்கக் கூடாது. அரசியல் குடும்பம் முதல் ஐநா சபை வரை கூட்டாக மனிதன் வாழும் அல்லது சேரும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இருக்கும். எதற்காக ஒரு அரசியல் நடவடிக்கை எடுக்கப் படுகிறது, யாரால் எடுக்கப் படுகிறது என்பது முக்கியம். எதுவானாலும் ஒரு விஷ்யம் அரசியல் ஆக்கப் பட்டதுமே அது பற்றிய சீர்தூக்கிய அணுகுமுறைக்கோ […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21

This entry is part 13 of 32 in the series 15 ஜூலை 2012

சீதாலட்சுமி                             அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின்   இசையில் ஏழு ஸ்வரங்கள் ஆனால் அது காட்டும் பரிமாணங்கள் எத்தனை எத்தனை ! இசை கற்றவரெல்லாம் சுயமாக ஸ்வரங்கள் அமைத்து ராகம் பாடிவிட முடிவ தில்லை. அது ஒரு சிலரால் மட்டுமே முடிகின்றது. இது சங்கீதத்தில் மட்டுமல்ல. சமூக நலப் பணிசெய்ய வந்தவரெல்லாம் பெரிதும் ஈடுபட்டு தொண்டு செய்ய முடிவதில்லை .அதனால் பலரின் விமர்சனங்களுக்கு இந்த பணி ஆளாக நேரிடுகின்றது. எனக்கு நான் […]

நகரமும் நடைபாதையும்

This entry is part 9 of 32 in the series 15 ஜூலை 2012

கு.அழகர்சாமி ஒரு நகரின் நிலை நன்றா இல்லையா என்பதை எப்படித் தேர்வது? அந்த நகரின் நடை பாதைகள் நிலையைப் பாருங்கள். இப்படி ஒரு கருத்தை சென்னைக்கு வருகை தந்த ஒரு வெளி நாட்டு மேயர் ஒருவர் சொன்னதாய் இந்து நாளிதழில் எப்போதோ படித்த நினைவு. சொன்ன கருத்தில் ஒரு மேலை நாட்டுப் பின்னணியும் கண்ணோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலை நாட்டு நகர் ஜனத் தொகையையும் , நம் நகரங்களின் ஜன நெரிசலையும் ஒப்பிட முடியாது […]

அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….

This entry is part 29 of 41 in the series 8 ஜூலை 2012

சில முகங்கள் வாடும் போது மனதை பிழிகிறது… பத்தாவது படிக்கும் போதே பெருவாரியான பள்ளிகளில் ஒரு ஃபார்ம் கொடுக்கப்பட்டு ஜாதி என்ன என்று கேட்கும் போது, பழைய உண்மை புதிதாய் புலப்படுகிறது… அன்றோரு நாள் சில ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பரவ, சமத்துவ உலகம் காண ஒரு அரிய கண்டுபிடிப்பு செய்தார்கள்…. அது தான் 99 = 42 என்று… என்ன செய்திருக்க வேண்டும், எல்லா கோவில் பிரகாரங்களில் இரவு பகல் பார்க்காமல், படிப்பு சம்பந்தமான கோச்சிங்குகளை […]

சிரியாவில் என்ன நடக்கிறது?

This entry is part 26 of 41 in the series 8 ஜூலை 2012

பிபிஸி ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற பார்வையாளர்களும் மார்ச் 2011இலிருந்து இதுவரை 9000 பேர்கள் சிரியா போராட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். போராட்டம் எப்படி ஆரம்பித்தது? சிரியா நாட்டின் தெற்கில் இருக்கும் நகரமான டேரா (Deraa)வில் 14 பள்ளிச்சிறுவர்கள் துனிசியாவிலும் எகிப்திலும் மக்களது கோஷமாக இருந்த ஒரு கோஷத்தை சுவரில் எழுதினார்கள். அரபி மொழியில்.”மக்கள் இந்த அரசு வீழவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்ற பொருள். இதற்காக போலீஸ் இந்த சிறுவர்களை கைது செய்து அழைத்து சென்று சித்ரவதை செய்தது. […]