ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)

This entry is part 3 of 36 in the series 18 மார்ச் 2012

ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை எடுத்துச் சென்றோருள் ஆகச் சிறந்தவராக அறியப்படுபவர். இவரது “ஜென் ஒரு அறிமுகம்” என்னும் உரையுடன் நம் வாசிப்பை நிறைவு செய்வது முத்தாய்ப்பாக இருக்கும். ஜென் ஒரு மதமா? இல்லை. மதம் எனப் பெருமளவு புரிந்து […]

இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்

This entry is part 2 of 36 in the series 18 மார்ச் 2012

  (I) வறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம் 1.முன்னுரை இந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line) குறித்த  ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை வாசகர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதை வாசகர்களின் பரவலான கருத்தலைகள் மூலம் அறிய முடிந்தது.  மத்திய திட்டக் குழு(Central Planning Commission)  இந்தியாவின் வறுமைக் கோடு குறித்த தனது […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்

This entry is part 34 of 35 in the series 11 மார்ச் 2012

மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் மறைந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், நடிகருமான திரு.தி.சு.சதாசிவம் அவர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கும் அவரோடான சந்திப்புகள் நினைவுக்கு வந்து மனம் கனத்தது. கடந்த ஒரு வாரமாக அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன. அவரைச் சந்திக்கும் முன்னராகவே, பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது மொழி பெயர்ப்பு நாவல்கள் இரண்டினைப் படித்து அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது. பிரபல கன்னட […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3

This entry is part 26 of 35 in the series 11 மார்ச் 2012

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். கற்பனைக் காட்சிகளில் தோய்ந்த மனத்தைத் திருப்ப என்னிடமிருக்கும் சேமிப்புக் குவியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சில புகைப் படங்கள் கீழே விழுந்தன. அவைகளைக் கையிலெடுக்கவும் முதல் புகைப்படமே என்னை மீண்டும் நினைவுக் குழியில் தள்ளிவிட்டது. கலைவாணர் அரங்கில் செங்கை மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது. அந்த நிறைவு விழாப் புகைப் படங்களில் ஒன்றுதான் அது. முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். சமூக நலத்துறை […]

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்

This entry is part 24 of 35 in the series 11 மார்ச் 2012

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்திக்குப் பயன்படும் பகலில் பல்லாண்டுகள் ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று மேட்டில் கிடைக்கும் மின்சக்தி ! மாட்டுச் சாணி வாயு வீட்டு மின்சக்தி ஆக்கும் ! நிலக்கரி மூலம் நிரம்ப மின்சக்தி பெறலாம், கரியமில வாயு வோடு ! அந்த முறைகள் யாவும் ஓர் அளவுக் குட்பட்டவை ! […]

வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “

This entry is part 21 of 35 in the series 11 மார்ச் 2012

தமிழ்மணவாளன் முன்னுரை: மனம் என்பது யாது? அதன் ஸ்தூல வடிவம் யாது? அதெற்கென ஸ்தூல வடிவம் இருக்கிறதா? மூளையும் மனமும் ஒன்றா? மூளை நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் தலைமையகம். அறிவியக்கத்தின் கட்டுப்பாட்டையும் அதுவே கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, எது நல்லது எது கெட்டது எனத் தீர்மானிக்கிற திறன் மூளைக்கு உண்டு. எதனால் நன்மை விளையும்;எதனால் தீமை விளையும் எனத் தீர்மானிக்கவும் மூளையால் முடியும். அவ்வாறெனில் மனம் எனத்தனியே என்ன …? மிக எளிது. அது ஸ்தூலமற்ற, […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 34

This entry is part 7 of 35 in the series 11 மார்ச் 2012

“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம். ஓய்வுறு எடுத்துக் […]

கருவ மரம் பஸ் ஸ்டாப்

This entry is part 4 of 35 in the series 11 மார்ச் 2012

நவநீ என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். […]

வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்

This entry is part 1 of 35 in the series 11 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை ஆதிகாலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி தன் இனத்தை நிலை நிறுத்தினான். மனிதன் தன் தேவையினை இயற்கையிடம் பெற்று நிவர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்தவம் தேட முயன்ற மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடி, காய், கனி, மரப்பட்டை போன்றவற்றிலிருந்த மருந்துகளைக் கண்டறிந்து தனக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்துக் கொண்டான். வைரமுத்து […]

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.

This entry is part 32 of 45 in the series 4 மார்ச் 2012

— தமிழ்மணவாளன் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அண்மையில், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்னும் திரைப்படம் வெளியான போது, பரவலாக பலரது பாராட்டுகளையும், குறிப்பிடத்தக்க ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. வியாபார ரீதியிலான படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வித்தியாசமான அம்சங்களுடன் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’வியாபார ரீதியிலான அம்சங்களைக் கொண்ட படம் தானெனினும், அழுத்தமான கதையின் துணையோடு அதனை பூர்த்தி செய்திருந்தது எனலாம். படித்த, பட்டதாரி இளைஞர்களுக்கு, பணிவாய்ப்பு மறுக்கப் […]