ஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது குறித்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது.பீர்முகமது அப்பாவின் பாடல்களைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சகோதரர்கள் சாகிர் அலி,பஷீர்,சாஜித் அகமது, ஹாமீம்முஸ்தபா முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட நண்பர்களும் எதிர்தரப்பில் சகோதரர் கெளஸ்முகமது,அஸ்லம்,ஷறபு உள்ளிட்ட நண்பர்களும் விவாதம் புரிகின்றனர். இதில் எனது சார்பாக எனக்குத் தென்பட்ட சில கருதுகோள்களை முன்வைக்கிறேன். 1) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா […]
ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தாற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் […]
பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்: யாரும் இந்தப் பாதையில் பயணிக்கவில்லை என்னையும் மாரிக்கால மாலைப் பொழுதையும் தவிர வருடத்தின் முதல் நாள் எண்ணங்கள் வருகின்றன தனிமையும் மாரிக்கால மாலை கவியும் நேரம் ஒரு பழைய சுனை ஒரு தவளை தாவிக் குதிக்கும் ‘தொபக்’ பழைய இருண்ட தூங்கி வழியும் சுனை திடீரென விரையும் தவளை தாவும் – தண்ணீர் தெரிக்கும் மின்னல் கொக்கின் கூவல் இருளைக் குத்தித் துளைக்கும் தட்டாம் பூச்சிகளின் ஒலிப்பில் அது […]
பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. ஷாஜிகைலாஜின் இயக்கத்தில் பொதுவுடமைத் தத்துவவாதி ஏகேஜி பற்றின படத்தில் அவரின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றின பல்வேறு தகவல்கள் அதை ஒரு சிறந்த ஆவணப்படமாக்கியிருக்கிறது.”மதர்” என்ற படம் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த […]
அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை –3 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப் பயன்படும் பகலில் பல்லாண்டு ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று மேட்டில் கிடைக்கும் மின்சக்தி ! மாட்டுச் சாணி வாயு வீட்டு மின்சக்தி ஆக்கும் ! நிலக்கரி மூலம் நிரம்ப மின்சக்தி பெறலாம், கரியமில வாயு வோடு ! […]
பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த மிகப்பெருமாற்றல் மனமாகும். சில உளவியலாளர்களின் கருத்துப்படி மனமானது நமது மூளையில் உருவாகும் ஒட்டுமொத்த சிந்தனைகளின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் உடலில் இதன் அமைவிடத்தையோ அதன் உருவத்தையோ இதுவரை எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. மேலும் சில பெளதீகவியலாளர்களின் கருத்துப்படி மனமானது எம்மைச் சுற்றியுள்ள கோளவடிவான சிந்தனைவெளி என்றும் கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அவ்வெளியின் கனவளவானது அவரவர்களின் எண்ணங்களின் பரிமாணங்களிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுள்ளதென்றும் அதன் கனவளவு குறுகும்போது மனதின் ஆற்றல் பெருமளவு அதிகரிக்கின்றதென்றும் நம்பப்படுகிறது. […]
பசும்புல்வெளியும் மலையும் ஓடையுமாய் பார்க்க அத்தனை இதமாக இருந்தது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த இயற்கைக்காட்சி! அடர் தேன்நிறத்தில் சட்டமிடப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காணப்பட்ட பொன்னிறச் சூரியவொளியின் இளஞ்சூட்டை உணரமுடிந்தது என்றுகூடச் சொல்லலாம். Seeing is Believing! அதை வரைந்தவர் ஓவியர் தர்மேஷ். கெல்சன் என்கிற பெயரில் கடந்த பதினைந்தாண்டுகளாக நிலக்காட்சிகளை மட்டுமே ஓவியங்களாகத் தீட்டிவருகிறார். ஏன் இயற்கைக்காட்சிகளை மட்டுமே ஓவியமாகத் தீட்டுகிறீர்கள்? ”ஒன்று, இயற்கைக்காட்சிகள் மனதை அமைதிப்படுத்தும். இரண்டாவது, எனக்கு அதுதான் வரையத்தெரியும்” _வெகு இயல்பாக உண்மைபேசுகிறார் […]
கட்டுரை -2 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா (1944) சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ¨ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய […]
வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது நிகழ்ச்சியின் மூலம் ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அற்புதமா? சொற்களின் சாத்தியத்தை பல பரிமாணங்களை வாசகருக்குக் காட்சியாக்கும் ஓவியமா? சிக்கல்கள் மிகுந்த மனித உறவுகளின் பிடிபடா முடிச்சுகளை அப்படியே காட்டும் நிதர்சனமா? அக உலகும் […]
ஜியா உர் ரஹ்மான் Zia ur Rehman மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக் குமார் – ஒரு ஆயுத தாக்குதலில் நவம்பர் 7 வடக்கு சிந்து மாகாணத்தில் Shikarpur ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.ஊடக அறிக்கைகளின்படி, ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட இருந்த தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்கள் சார்பாக இவர்கள் தலையிட்டார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு முஸ்லீம் […]