சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே […]
கோவிந்த் கோச்சா ஒவ்வொரு தெருவும் சுத்தமாக அழகாக இருக்கனும் என்று வீடுகளின் மதில் ஓரம் சென்னையில் சிறு சிறு செடிகள் வைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் எக்ஸ்னோரா முயற்சி… ஆனால் அது இப்போது கண்டுள்ள அவதாரம்…? சென்னையில் ரோட்டை ஆக்கிரமித்து அன்றாட வயிற்று பசி தீர ஏதாவது சிறு கடை போடுபவர்கள் போலீஸ் கொண்டு அப்புறப்படுத்தப்படுவர்…. ஆனால் கீழ்கண்ட மாதிரியான ஆக்க்கிரமிப்புகள்…? படத்தில் நீங்கள் காண்பது சென்னை இந்திரா நகரில் எடுத்தது.. தனி வீடு.. குறைந்தது 6கோடி […]
நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு வாய்ப்பை வென்றெடுக்கவும், போராடி ஒரு வசதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், குற்றம் சாட்டவும், தன்னிலையை விளக்கவும் என புறவுலகில் நம் நிலைப்பே பேச்சில் தான் இருக்கிறது. எப்போது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், […]
(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, கனடா பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மார்ச் 9, 2011 விவாதத்தில் வழங்கப்பட்டது ஹம்சா ட்சோர்டிஸ் (Hamza Tzortzis) இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் அறிஞர், மற்றும் டாக்டர் காலித் சோஹைல் இடையே நடந்தது) பெரியோர்களே, தாய்மார்களே, நான் இஸ்லாமிலிருந்து வெளியேறி மதசார்பற்ற மனிதநேயத்தை அடைந்த என் பயணத்தின் சிறப்பு பகுதிகள் மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேற்கத்திய ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் என்னை அழைத்த முஸ்லீம் மாணவர்கள் […]
கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த வகையில் 1998 இல் வெளிவந்த ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ என்ற நூல் பற்றிய அறிமுகமாக […]
பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள். சிலர் கட்டுரைகளும் வரைவார்கள். இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர்களுள் சிலர் விட்டு விடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போது. சிலர் தொடர்கிறார்கள். சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள். சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுக் […]
முனைவர்.மு.முருகேசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, வடசென்னிமலை,ஆத்தூர். வகுப்பறைகளை விவாத களங்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனைத் தாக்கத்தை கல்வியாளர் பாவோலோ ப்ரையரிடமிருந்தும், பேராசிரியர் மாடசாமி இடமிருந்தும் நான் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது அதை செயல்படுத்துவதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கூறப்படும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை 21 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட இருக்கும் சூழல் என் மனத்தை கனமாக்கியது. அந்த நினைவோட்டத்தின் ஒரு […]
பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால். “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் எப்போதாவது பார்ப்போம். தினமும் அவனைப் பார்த்துப் பேசி பழகுவது என்பது இனி இல்லை. அவனுக்கு விருந்து கொடுத்து அனுப்ப வேண்டாமா?” என்று கேட்டான். இது எனக்கு புது விஷயம். இது வரை நான் யாரும் யாருக்கும் பிரிவு உபசாரம் செய்து விருந்து கொடுத்து கேள்விப்பட்டதும் இல்லை. கலந்து கொண்டதும் இல்லை. எல்லாம் புதுசாக இருந்தது. […]
புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது? புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா? இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா? அகத்துள் ஆழ்ந்து ஆன்மீகம் தேடுவது தொடங்கியதா இல்லை தேடலின் சங்கிலித் தொடர் அறுபட்டு நான் தடுமாறி மீண்டும் விட்ட இடத்தில் தொடங்க இயலாது உழல்கிறேனா? புற உலகிலாவது ஒட்டி ஒன்றாக முடிகிறதா? கால் பந்தாகவும் பந்தை உதைக்கும் கால்களாகவும் […]
– தேஷான் ருவன்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான். “எங்கேயாவது வெளியே போய் வருவோமா? ஒரே அலுப்பாக இருக்கிறது.” “எங்கே போகலாம்?” “எங்கேயாவது போகலாம். நான் பைக்கையும் எடுத்து வந்திருக்கிறேன்.” சில நிமிடங்களுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்ட […]