கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல் நீரும் கலந்து உடம்பு முழுக்க ப் பரவியது. குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும். அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை இறக்கி வைப்பாள் . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ..சரியாக நடக்க முடியவில்லை .அதுவும் இப்படியான இடத்தில் வந்து செங்குத்தான இடத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது .. ஆகவே உணவு விடுதிக்குச் செல்லாமல் மகளே உணவைக்கொண்டு வந்தாள் .. அவளும் சிரமப்பட்டு உணவை எடுத்து வரவேண்டியிருந்தது. வெளியில் போகும் […]
K N வெங்கடேஷ் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. (திருக்குறள்-102) திருக்குறள் விளக்கம் – நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும் நம் நாட்டில் அரசியல் தலைவரின் மறைவு என்றால் பேருந்துகள் ஓடாது. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விடும். வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் மறைவினை அதிகாலையிலே அறிவிப்பார்கள். அந்த […]
உஷாதீபன் ரமணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா? தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ? ஏம்ப்பா இப்டித் […]
இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள் பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள். குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய […]
ஜனநேசன் சந்திரவதனாவின் பார்வை, நீர்வழிய , மரணப்படுக்கையில் கிடந்த அம்மாவின் மீது நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள் எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது . இதயத் துடிப்பும் குறைந்து வருகின்றது . மருத்துவர் சொன்னக் கெடு தாண்டி இரண்டு நாள்கள் உதிர்ந்து விட்டன. ஆனால் பேச்சற்று, உணர்வற்ற அம்மாவின் உயிர் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமிடையே உள்ளேயா, வெளியேவா என்று கயறு இழுப்புப் போட்டி நடத்திக் கொண்டிருந்தது. உயிர்ப்புறா நெஞ்சுக்கூட்டுக்குள்ளே கரபுறத்துக் கொண்டிருந்தது. நெருங்கிய உறவுகளும், […]
உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் தெரியாது. […]
கோமான் ஷைலக் & வில்லன் புருனோ காலம்: அடுத்த நாள் பகல் பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேணோ, மற்றும் இரண்டு படைவீர்கள் இடம் : சைப்பிரஸ் தீவு, கடல் அலைகள் கொந்தளிப்பு, பேய்க் காற்றடிப்பு மாண்டேணோ : உங்கள் கண்களுக்கு கப்பல்கள் வருவது தெரிகிறதா முதற்காவலன்: [தொலைநோக்கியில் பார்த்து] ஒரு காக்கை, கழுகு கூட இல்லை. அலை உயரம் மிகுந்திருப்பதால் கடல் தொடுவானத்தில் ஏறும் கப்பலோ, பறக்கும் கொடியோ தெரியவில்லை. மாண்டேனோ: ஓலமிடும் கடற்புயல் நிலத்தின் […]
செல்வராஜ் ராமன் A)ஆகச் சிறந்த காதல் : அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள். சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ? இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ […]
இரா முருகன் பொது யுகம் 5000 புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள். […]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : […]