சித்ரா சிவகுமார், ஹாங்காங் தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் சமூகத்தினர், மழைக்கடவுளாக சேக்கை நம்பினார்கள். அவர் மேகங்களுக்கு அப்பால், வானத்தின் மத்தியில், மிகவும் உயர்ந்த இடத்தில் அழகான தோட்டத்தின் நடுவே அமைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் அதிகம் தங்க மாட்டார். சூரியன் எங்கெல்லாம் தன் முழுச்சக்தியைக் காட்டி வரண்டு போகச் செய்கிறாரோ, அங்கெல்லாம் சென்று, தன் மழைக்குடுவையைத் திறந்து, மழை பெய்யச் செய்து, செடி கொடி, விலங்குகள் மனிதர்களுக்கு இதம் அளிப்பார். அதனால் இரக்கம் […]
சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள். ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே […]
முதல் பாகம் – கிருஷ்ணபுரம் 1580-1620 ” இம்மலைகள் நிரந்தரம், என்றேனும் சிதற நேர்ந்தாலும் பாறாங்கல்லாய், ஒரு சிறுகல்லாய் ஒரு கைப்பிடிமணலாய் இதே இடத்தில் தான் வாழ்ந்ததற்கு தானே சாட்சியாக கிடக்கலாம். ஆர்ப்பாட்டங்களுடன் கதைசெய்யும் மனிதன்மட்டும் பிறர் ஊடாக தான் வாழ்ந்ததை நினைவூட்டவேண்டும். ” 3. இறையெடுத்த மிருகத்தைப்போல பாதிகண்களைமூடி இரவு மயக்கத்தில் மூழ்கியிருக்கக் கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது. நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் மரங்கள் அவ்வப்போது அசைந்து கொடுத்தன. மௌனமான அந்த அதிர்வை […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இல்லை, இல்லை ! கடவுள் கைகொடுப்பார் உனக்கு. நீங்கள் பணத்தை ஏற்றுக் கொண்டது நியாயமே ! நமது சல்வேசன் சாவடியை நீங்கள் காப்பாற்றினீர் ! ஆனால் என் மனது அதை ஏற்கத் தயங்குகிறது. போ போ அணி வகுப்புடன் ! இன்று உன் சொற்பொழிவைக் கேட்கப் பெரிய கூட்டம் வந்திருக்கும் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் […]
ஆமையும் வாத்துக்களும் ஒரு ஏரியில் சம்புக்ரீவன் என்றொரு ஆமை இருந்தது. அதன் சிநேகிதர்களாக சங்கடகன் விகடன் என்று இரண்டு வாத்துக்கள் இருந்தன. ஏதோ கால வித்தியாசத்தால் பன்னிரண்டு வருஷகால மழை தவறிப்போய் நீர் வறட்சி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் வாத்துக்கள் இரண்டும் யோசிக்கத் தொடங்கின. ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த ஏரியில் நீர் வற்றிவிட்டது. வேறு ஏதாவது ஏரி குளம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். நண்பன் சம்புக்ரீவனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விடலாம்’ என்று தீர்மானித்தன. […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் வணிகத்தைப் பாருங்கள். பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன். விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன். இதில் எனக்கில்லை குற்ற உணர்வு. பணம் பணம்தான் ! அது விஸ்கி விற்று வந்தால் என்ன ? வெடி மருந்து விற்று வந்தால் என்ன ? பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் ! […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஒரு வழியாக இந்தப் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது. பிளாக்ஸ்டேபிள் நிலையத்தில் இறங்கும் போதே மனம் சிறகடித்துப் பறக்கிறது.¢ இக்கிணி உசரங் கொடுத்திருந்தேன் இப்போது. தெர்கன்பரியில் நீல செர்ஜ் புது சூட் தைத்திருந்தேன். புது டை தனியே வாங்கி வைத்திருக்கிறேன். ரெண்டும் அணிந்து டக் டக்கென்று நடந்து போகப் பிரியப்பட்டேன். சரக்குவண்டியில் என் பெட்டி தனியே வந்தது. சரியான நேரத்திற்கு அது என் பெட்டியைக் கெண்டு சேர்த்துவிடும். வந்து தேநீர் சட்டுப்புட்டென்று குடித்த ஜோரில் […]
இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. * 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். […]
சமுத்திரமும் நீர்க்குருவியும் பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் முதலான இன்னும் எத்தனையோ ஜந்துக்கள் நிறைய இருந்தன. அதன் கரையோரத்தில் ஒரு நீர்க்குருவியும் அதன் மனைவியும் இருந்து வந்தன. ஆண் குருவிக்கு உத்தான பாதன் என்று பெயர். பெண் குருவிக்குப் பதிவிரதை என்று பெயர். ருது அடைந்ததின் பலனைப் பெற்று அந்தப் பெண் குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்தது. அது தன் கணவனைப் பார்த்து, […]
திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் […]