மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா இருவருமே லியான்டர் பேஸ்ஸுடன் ‘ஒலிம்பிக்ஸ்’ 2012ல் விளையாட ஒப்பாமற் போனதில் ஒரு சர்ச்சை துவங்கியது. பின்னர் இவர்கள் இருவருக்கும் பதில் விஷ்ணு வர்த்தன் என்பவரை லியான்டருக்கு ஜோடியாக அனுப்ப AITA முடிவு செய்த போது அதை அவர் ஏற்க மறுத்தார். இடையே சம்பந்தப் பட்ட மத்திய மந்திரி புகுந்து இரண்டு குழுக்களை அனுப்ப வழி இருக்கும் போது ஏன் இந்த சர்ச்சை என ஒரு போடு போட்டார். உடனே AITA […]
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்பது பிரசித்தமான சினிமாப் பாடல் வரி. வளர்ச்சி முழுமையடைய ஒரு பக்கம் பாடத் திட்டக் கல்வி, மறுபக்கம் விளையாட்டு, பேச்சுத் திறன், போட்டியிட்டு வெல்லும் தன்னம்பிக்கை, தலைமைக் குணங்கள் ஆகிய பலவும் மாணவனின் வளர்ச்சியின் அடையாளம். பாடத் திட்டங்கள் குறித்து வல்லுனர் மட்டுமே விவாதிக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் ‘பிஹெச்டி’ பட்டம் பெற்ற பெரிய கல்வியாளர் பணி அது. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி […]
மதியம் மணி பன்னிரண்டு. “இன்னும் கொஞ்சம் காரக் கொளம்பு வெக்கறேன். நல்லாயிருக்கா…?” அவனுக்குக் கமறி விக்கியது. “மெதுவா சாப்பிடுடா. ” தூக்க முடியாதபடி வயிறைத் தூக்கியபடி கை நிறைய அடுக்கியிருந்த கண்ணாடி மற்றும் பிற வகை வளையல்கள் ஒலிக்க மலர்விழி எழுந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள். “முதல்ல தண்ணியைக் குடிடா” “ஆம்லேட்டை ரசம் வரைக்கும் வெச்சிருக்க மாட்டே.. இரு.. அப்பளம் சுட்டுப் போடறேன்.” அப்பளம் சுட்ட படியே “ஏண்டா.. ஏதோ […]
—————————- +2க்குப் பிறகு —————————- +2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு. சென்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டுமே பதினோரு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பல பள்ளிகளில் நடத்துகிறார்கள் என்று பார்த்தோம். அதாவது பதினோராம் வகுப்புப் பாடத் திட்டம் மாணவருக்குப் போய்ச் சேருவதே இல்லை. இதன் பின் விளைவு ‘என்ஜினீயரிங்’ படிப்பில் முதலாண்டில் பல பாடங்களை மாணவர்களால் சரிவரப் புரிந்து கற்றுக் கொள்ள இயலுவதில்லை. இதற்குக் […]
தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் தூங்காமலிருந்ததில் பற்றி எரியும் கண்களையும், பித்தக் கசப்பு தட்டிய நாக்கையும் மீறி மனதில் சிறு நிம்மதி பரவியது. பொறுமையாக, கவனமாக எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதி விட வேண்டும். ஹால் டிக்கெட்டோடு கொண்டு வந்திருந்த பழனி முருகன் படத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். இரண்டு பென்சில்கள், […]
(1) நடப்பு நிலவரம் +2 வரை எப்போது பார்த்தாலும் ஊடகங்களின் பொறுப்பின்மையையும், வெகு ஜனங்களின் விழிப்பின்மையையும் குறிப்பிட்டு அவர்களை கரித்துப் கொட்டி, சபித்துத் தீர்ப்பது சரியா? அவர்களிடம் நல்ல அம்சம் எதுவுமே கிடையாதா? கட்டாயமாக இருக்கிறது. கல்வி (குறிப்பாகத் தமிழகத்தில்) பெறும் கவனம் ஊடகம், வெகு ஜனம் இருவர் தரப்பிலுமே பாராட்டுக்குரியது. மூன்றாமவராக அரசாங்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்சிகள் மாறினாலும் கல்வித்துறை அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பது நல்ல அம்சம். குழந்தைகளின் கல்வி என்றதும் சினிமாவிலாகட்டும், தனிப்பட்ட […]
“டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல தவறாகவோ தொந்தரவாகவோ நடந்துக்கலேன்னாக்க நார்மல் அப்படீங்கறாரு… ஆனா இவரை வீட்டுக்குள்ளே அடைச்சு வைக்கறது பெரும் பாடா இருக்கு. ரெண்டு நாளைக்கி மின்னாடி வேலைக்காரி செக்யூரிட்டி எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்திட்டு இவரு வீட்டுக்கு வெளியிலேயே போயிட்டாரு…நாலு இடத்தில பேந்தப் பேந்த முளிச்சிக்கிட்டு நின்னா அக்கம்பக்கத்தில இருக்குறவங்க வம்பு பேசறாங்க .. என்னைத்தானே விசாரிக்கறாங்க… நீங்க கொஞ்ச […]
‘செக்யூரிட்டி கேமரா’ வழியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் இளம் பெண்ணை லதா ‘கம்ப்யூட்டரி’ல் பார்த்தாள். இருபது இருபத்தி இரண்டு வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. தனது மண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் ஒருவேளை இதே வயதுப் பெண்ணோ பையனோ ஒரு வாரிசாக வந்திருக்கலாம். தோழியின் மகள் இவள். இப்படிப் பல இளைஞர்களைப் பார்க்கத்தான் நேரிடுகிறது. ஏதோ ஒரு சமயம் இது போன்ற ஆதங்கம் கவிகிறது. சில நிமிடங்களில் சுதாரித்துக் கொள்வதும் பழக்கமாகி விட்டது. ஒப்பனை அறைக்குச் சென்று கண்களில் துளிர்திருந்த […]
பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் நீரில் எந்த அளவு எங்கே போய்ச் சேருகிறது? மரத்தின் ஆணி வேர்கள் அருந்துவது எப்பொழுது மழை பொழிந்து நிலம் உள் வாங்கிய ஈரம்? இந்த பாட்டிலில் உள்ள நீரைப் போல அடை பட்டோ, நதி போல ஒழுங்கு பட்டோ, பொழிந்தோ, நிலத்துள் ஊடுருவியோ வெவேறு வடிவங்களில் குதூகலிக்கிறதா? ஈரமான காற்றில் தண்ணீர் காற்றுடன் கலந்ததும் […]
“டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். விபரீதமான எதையும் வெளியுலகில் அவர் செய்யாததால் காலப் போக்கில் அவர் மனம் சமனப் படும் வரை காத்திருப்பதே சிறந்தது. அவர் மன அழுத்தத்துக்கான காரணமும் பிடிபடவில்லை. இது ஆரம்ப நிலையே. மீட்க முடியாத நிலைக்கு ராஜேந்திரன் போகவில்லை. எனவே நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. டாக்டர் சங்கீதா ‘ஈமெயிலை’ லதாவுக்கு அனுப்பிய பிறகு […]