30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது: கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடி இருப்பதுண்டோ? இந்த பத்தியில் ஜெயகாந்தன் வெகு ஜனத்தின் மனப்பாங்கை […]
“சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா. “நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ” “கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?” “லுக் லதா. ஆஸ் அ டாக்டர் மட்டும் நான் இதைச் சொல்லலே. டூ யூ வாட்ச் யுவர் பிகர் இன் த மிர்ரர்?” லதா சில நொடிகளுக்குப் பிறகு […]
கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து நினைவு படுத்தியது. ‘ப்ளாஸ்டிக் பைகள் அணு குண்டை விட ஆபத்தானவை” என்ற கருத்தை மேதகு நீதிபதிகள் கூறியுள்ளனர். குடி நீருக்கான நன்னீர் வாய்க்கால்கள், குழாய்கள், கழிவு நீர் ஜல […]
“ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?” “………..” “இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?” “……….” “இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?” டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க ஸார்”. பதிலில்லை. பொன்னம்மாள் படத்தின் மீது விரலை வைத்து “இது உங்க மதர் இல்லீங்களா?” “…………..” “அவங்க காலமாயிட்டாங்க….. உங்களுக்குத் தெரியுமா?” ராஜேந்திரனின் கண்களைக் கூர்ந்து நோக்கினார் […]
அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி” “காட் ப்ளெஸ் யூ” அவள் தலை மீது கை வைத்து ஆசி கூறினார். லதாவின் காரியதரிசிகள் அடிக்கடி மாறியதால் முகத்தையோ பெயரையோ நினைவு வைத்திருக்க வேண்டி இருக்கவில்லை. “மாத்தித் தானே ஆவணும். எத்தனை விவகாரம்” என்று பெற்ற பெண்ணைப் பற்றி கசப்புடன் அவள் தாய் உதிர்த்த சொற்கள் […]
ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் ஊடகங்கள் முன் வைத்த வழியில் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. அது மிகவும் எளிமையானது. தேசியக் கொடி, தேச வரைபடம், மூன்று தேசியப் பண்டிகைகள் என்னும் அளவு எளிமையானது. இதே போல் காந்தியடிகள் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்னும் அளவில் மட்டுமே அவரைப் பற்றிய புரிதல் இருக்கிறது.இந்தியன் என்னும் அடையாளத்தை இவ்வளவு எளிமைப் படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. தொன்று தொட்டு இந்திய நிலப்பரப்பில் அன்னிய படையெடுப்பை ஒரு […]
சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது அந்த அந்த சாதி பற்றிப் படிக்கும் போதே தெரிந்து விடும். அ.மனிதர் என்னும் சாதி ————————— நேர்மறையான அடையாளங்கள்: 1.தன்மானம் போற்றுவார். அதே போல் யாரையும் அவமானம் […]
இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர் அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துத் தூக்கிக் கொண்டார். கற்பூரத்தில் பந்தம் பற்றியதும் அது கொழுந்து விட்டு எரிந்தது. திரும்பிப் பார்க்காமல் ஒவ்வொருவராய் கொள்ளிடம் நோக்கி நடந்தார்கள். ராஜேந்திரனும் அவர்கள் பின்னேயே சென்றான். ஒவ்வொரு திக்கில் […]
இரவு மணி இரண்டு. “எனக்கு டீ வேண்டாம்” என்றாள் செல்வராணி, “மேக் அப்” பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த “ஷூட்டிங்க்” இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக அழகியாயிருந்து இப்போது நடிகையானவரின் பாடல் காட்சி. அவரது “கால் ஷீட்” முடிவதற்குள் “ஷூட்டிங்க்” முடிந்தாக வேண்டும். எத்தனை டீ குடிப்பது? உமட்டல் வந்தது. கால்களும் கழுத்தும் இடுப்பும் இற்று விட்டன. பக்கத்து வீட்டு ஆயாவைக் […]
பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் படுவதே அதன் சாராம்சம். நான்காவது தூண் எவ்வளவு சந்தர்ப்பவாதமும் மிகுந்தது என்பது கூடங்குளத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டைப் பார்த்தாலே புரியும். கூடங்குளம் போராட்டத் தரப்பு அனைத்துமே சரி என்று […]