தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

  "தூரப் பிரயாணத்"தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று  அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால்  மற்ற விசேஷ அம்சங்களை நாம் தவற விட்டிருப்போம் என்னும் உறுதியான எண்ணம் இக்கதையைப் பலமுறை படித்த பின் தோன்றுகிறது.   ஜானகிராமனின் சம்பாஷணைகள்…

தோள்வலியும் தோளழகும் – இராமன்

                                                                                                                          காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன் இருகுன்றம் போன்று உயர்ந்த தோள்                                                                     விசுவாமித்திரமுனிவர் தான் இயற்றப் போகும் யாகம் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பும்படி தயரதனிடம்…

மேரியின் நாய்

2020 கார்த்திகை மாதம்-  மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும்  ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின்…
ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்

ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்

அழகியசிங்கர்             அழகிரிசாமியின் நகைச்சுவை கதை.  ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது.  பலர் நகைச்சுவை கதையைச் சொல்லும்போது தேவையில்லாததை நகைச்சுவை என்ற பெயரில் சேர்த்து துணுக்குத் தோரணமாக மாற்றி கதையைப் பலர் வீணாக்கி விடுவார்கள். கு.அழகிரிசாமி இயல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.தானே…

“அப்பா! இனி என்னுடைய முறை!”

(மங்கை ஆகஸ்ட், 1988 இதழில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       ”லலிதா! ஏ, லலிதா! சீப்பைக் காணோமே?” என்று இரண்டு நிமிடங்கள் போல் சீப்புக்காக அது இருக்கக்கூடிய  இடங்களையெல்லாம் ஆராய்ந்து, பிறகு சோர்ந்து போய்க்…

“வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)

ஜெ.பாஸ்கரன்.  கு அழகிரிசாமியின் கதைகள் சிக்கலில்லாத எளிய கதைகள். பெரும்பாலும் ஒரு கதையை உளவியல் நோக்கில், ஒரு நேர்க்கோட்டில் மண்ணின் மணத்துடன் எழுதியிருப்பார். மாக்ஸிம் கார்க்கியின் இரண்டு நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார். அதன் தாக்கம் இவரது கதைகள் சிலவற்றில் இருப்பதைக் காணலாம்.…
”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்

”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்

                   வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு கருத்துகளை மனத்தில் பதியவைக்கும் கலை கைவரப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய மனிதநேயம் மிக்க பொதுவுடைமைச் சிந்தனை…

ஒரு துளி காற்று

எல்.ரகோத்தமன் அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும்.  ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு…

‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கவிதையின் சாவி முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும் கற்களாகத் தலைக்குள் அடுக்கித் தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும் மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும் நூற்பிரிகளையும் சுவராக்கிக் தரையாக்கிக் கூரையாக்கிக் கட்டும்…

இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது

      இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு 'முப்பெரும் விழா' மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு…