கோடுகள்

அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று…
நடை

நடை

மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை.…
அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அழகியசிங்கர்               என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன்.  நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன்.             திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது.  இரண்டு கதைகளை அவர்…
மொழி பெயர்ப்பு கவிதைகள்  ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

மொழிபெயர்ப்பு  : மூலம்    : ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ] தமிழில்   : தி.இரா.மீனா        சில சமயங்களில் மழை பெய்யும்போது இளம்பருவத்தில்  தனிமையிலிருக்கும்  போது மனிதர்களுக்கு ஏன் ஆடை வேண்டுமென்று  வியப்படைந்த தருணங்களை நினைத்து, சில சமயங்களில்…

தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான்…

இன்னொரு புகைப்படம்

கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக புகைப்படங்களின் மத்தியில் இன்னொரு புகைப்படமானேன் நிச்சிந்தையில்…

நீ இரங்காயெனில் ….

திர்லதா கிரிஜா (அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) - காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  கட்டுரைகள்: இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா. கிரிதரன் அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம் – சிவா கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை- ரவி நடராஜன்…
மொழிபெயர்ப்புக் கவிதைகள்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

  ட்டி. ஆர். நடராஜன்    1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது     ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட்  என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது.  என் அறைகள் அறைகளுக்கான அளவில்  அதன் ஆத்மா ஆத்மாவின் அளவில். பின்னணியில் உயிரணுவின் ரீங்காரம் அதற்கு மேலாக…
மினி பாரதம்

மினி பாரதம்

வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது பதின்மர்க்கான புதினமாகும். ஜோதிர்லதா கிரிஜா