சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ் நேற்று (ஜூலை 12, 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. தளத்தின் முகவரி: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: யோக்காய் – சுந்தர் வேதாந்தம் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் – ரவி நடராஜன் விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்! – லதா குப்பா பிஞ்ஞகன் – நாஞ்சில் நாடன் கல்லும் மண்ணும் – வ.ஸ்ரீநிவாசன் மற்றவர்களின் வாழ்வுகள் -மைத்ரேயன் பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’…

வெகுண்ட உள்ளங்கள் – 8

கடல்புத்திரன்                                                        எட்டு இருளத் தொடங்கியிருந்தது. “வாவன்ரா.காம்பில தமிழன் சிந்திய ரத்தம் வீடியோ கசட் இருக்கு. சுந்தரம் வீட்டு தொலைகாட்சியில போட கேட்டிருக்கிறம். ஒம் என்றவையள்’ என்று அவனை திலகன் கூப்பிட்டான். அவளின் நினைவை விரட்ட உதவியாயிருக்கும் என்று புறப்பட்டான்.காம்பில் யாரும்…
இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)

இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)

சின்னக்கருப்பன் கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் புதுமைப்பித்தன் பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.உங்கள் கருத்துக்களை அந்த நிகழ்வு பின்னூட்டமாகவும் இடலாம். திண்ணைக்கும் அனுப்பி வைக்கலாம். https://www.facebook.com/ConnecticutTamilSangam/posts/714365012470884 புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும்…
வைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.

வைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.

கொரோனா வைரஸ் காரணமாக முழுவதும் மூடப்பட்ட உடைக்கு உள்ளே உட்கார்ந்துகொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அந்த உடை எவ்வளவு சூடாக ஆகும் என்று நன்கு தெரியும். அதுவும் வெப்பமாக பிரதேசங்களான சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற இடங்களில்…

எதிர்வினை ===> சுழல்வினை

முனைவர். நா. அருணாசலம் எந்தத்  தோட்டத்திலும் ஆப்பிள்கள் தானாய் விழவில்லை. ஈர்த்தல் விதியால் நீயூட்டன், ஐயின்ஸ்டீன்களின்   மூன்றாவது காதலியின் நான்காவது கணவரிடம் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் விலை பேசுகின்றன.    ஒற்றைச் சிலம்பில் மாணிக்கங்களைத் தொலைத்த கண்ணகிகள் கோவலனையும் சேர்த்தே தேடித்தர…

இதயத்தை திறந்து வை

கனவுகள் மெய்ப்பட உறவுகள் தள்ளிவை உறவுகள் மெய்ப்பட கரன்சியை சேர்த்து வை மனிதம் மெய்ப்பட மதங்களை கடந்து நில் இறைமை மெய்ப்பட இதயத்தை திறந்து வை                      …

அசுர வதம்

அசுரனைக் கொல்வதா அசுர வதம் அசுரன் கொல்வதும் அசுர வதம் நமக்கு அவன் செய்வது தவறு எனில் அவன் பார்வையில் நாம் அவனுக்கு செய்வதும் தவறு கொரோனா... உருவானதோ உருவாக்கப் பட்டதோ இவ்வுலகில் ஜனித்து விட்ட அதுவும் ஓர் உயிர் ஜனித்த…

யாம் பெறவே

          கௌசல்யா ரங்கநாதன்         ......... என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி யாரை விட்டது.? நான், என் கணவர், ஒரே மகன், நல்ல வேலையில் இருப்பவன், மருமகள் (அவளும் கை நிறைய…

அவர்கள் இருக்க வேண்டுமே

“சாமி” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தேன். யாரும் வரவில்லை. மீண்டும் கூப்பிட்டேன். முருகசாமியின் மனைவி அருணா வெளியில் வந்து, “வாங்கண்ணே” ஏன் வெளியே நிக்கறீங்க?” என்றாள். உள்ளே சென்றேன். “எப்படிம்மா இருக்கான்” என்று கேட்டுக்கொண்டே மிதியடிகளைக் கழற்றி விட்டேன். “அதற்குள்…

மாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)

மதுராந்தகன் -- மாலு  சுப்ரபாரதிமணியன் நாவல்  இரண்டாம் பதிப்பு பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர் --  இந்த நாவலை கையில் எடுக்கும்போது மாலு எனும் தலைப்பு ஏதாவது பெண்ணின் பெயராக இருக்கும் என்று நினைத்தேன் .சற்றே ஏமாற்றம். மலேசிய மண்ணில் ரப்பர் மரங்களுக்கு இடுகின்ற கத்திக்  கோடுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன்.  இது ஒரு பின்நவீனத்துவ    நாவல் வகையைச் சார்ந்தது,. யதார்த்த நாவலைப் போல் இல்லாமல் படிக்கையில் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் ஆசிரியர் சொல்லி செல்கின்றமுறையிலும் சற்று தெளிவு ஏற்படுகிறது .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருச்செல்வன் மலேசியா சென்றுபோதை மருந்து கும்பலோடு சிக்கி கொள்வதோடு மலேசிய சட்டப்படி தூக்கு தண்டனை கைதியாக ஆதரவின்றிகஷ்டப்படுகிறான். இவன் ஒரு நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன். இவனுக்கு குடும்பம் உள்ளது .அவன் தகப்பனார் அப்பாசாமிகலெக்டரை சந்தித்து மலேசிய சிறையில் இருக்கும் தன் மகனை விடுதலை செய்ய செய்து தருமாறு மனு கொடுக்க நடையாய்நடக்கும் .செல்வனைப் பற்றி மேல் விவரம் கூறப்படவில்லை .அவன் படிப்பு தகுதி மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றான். அதற்கு தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் மலேசிய மண்ணில் சிக்கிக் கொள்கிறான் .முறையாகமனு எழுதிக் கொடுக்கத் தெரியாத செட்டியார் அப்பாசாமி .இதனை மகனை காப்பாற்ற வேண்டும் என்று தவிப்பது மட்டும்அதற்குரிய சரியான வழிமுறைகளை தெரியாதவராக இருக்கிறார் . இன்னொருவர் விக்னேஷ் .இவரும் பணம் சம்பாதிக்க சென்றவர்தான் ஆனால் ஓட்டல் கடையில் வேலை செய்துகொண்டிருந்தவர்.  விசா முடிந்தபின் தலைமறைவு தமிழனாக உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே உள்ளார் .பசியால்மயக்கமடைந்து விக்னேஷ் , நிலா என்ற பெண்ணும் அவரின் பாட்டியும் அடைக்கலம் கொடுத்து அவருக்கு பாதுகாப்பாகஇருக்கிறார்கள். இவரும் ஒரு நெசவாளி .ஆனாலும் இவரைப்பற்றிய குடும்ப விவரங்கள் தெரியவில்லை .திரும்பி இந்தியா வரவழி தெரியாமல் ரப்பர் காடுகளில் அலைந்து திரிகிறார் .நிலா என்ற பெண்ணை ரசிக்கிறார் .நடக்க முடியாத நிலையிலும்இவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொள்கிறார் .ஆனால் அவர்களை விட்டு விலக முடியாமல்தங்கியிருக்கிறார்.  மலேசிய மண்ணில் விசா முடிந்தபின் தமிழன் உயிருக்கு பயந்து கொண்டு  அவர்களை போன்ற எண்ணம் உள்ளவர்கள் பணம்சம்பாதிக்க வெளிநாடு செல்ல ஆசைப் படுபவர்கள்  படும் சிரமம் இந்நாவலில் . மொத்தத்தில் இந்த நாவலில் உள்ளகதாபாத்திரங்கள் கையாலாகாதவர்கள் .ஆகவே அடிபடுகிறார்கள். அப்பாசாமி இறுதிவரை கலெக்டரை சந்திக்க வில்லை. விக்னேஷ்க்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை விட்டு வெளியேறமுடியவில்லை ..திருச்செல்வன் தூக்கி லிடவும் இல்லை .ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் மலேசியாவின் வரலாறுபலராலும் கூறப்படுகிறது. பணம் சம்பாதிக்க செல்லும் இவர்கள் விசா டைம் எவ்வளவு காலம் விசா காலம் முடிந்த பின்னும்அங்கே தலைமறைவு வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை எழுதி இருக்கலாம். அது சிலருக்குப் பயன்படலாம் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும்  மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து…