author

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

லாரி கோல்ட்ஸ்டீன் (டொரோண்டோ சன்னில் வெளியான கட்டுரை ) (இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் என்று எண்ணுபவர்கள் ஹமாஸின் கொள்கை விளக்க அறிக்கையைப்  படித்ததில்லை.) ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம், ஐநா பொதுச் செயலாளர் பான் கிமூன் தொடங்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரையில் இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். அடிப்படையில் ஹமாஸுடன் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக முனைய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. இந்த அறிவுரையில் இரண்டு […]

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன. பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது […]

மனம் பிறழும் தருணம்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

சிவக்குமார் அசோகன் ஒரு சனிக்கிழமை அன்று இளங்கோ, தீபிகா வீட்டிற்கு என்னையும் அழைத்த போது முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் ஆசை வளர்ந்து கொண்டே வந்ததால் பிறகு சரி என்றேன். முதலில் மறுத்ததற்கும் பிறகு சரியென்றதற்கும் காரணம் இளங்கோ தான். அவன் தீபிகாவைத் தொடர்பு படுத்தி சொன்னக் கதைகள் தான். கதைகள் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இன்றுவரை அவை நிஜமா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு.   தீபிகா அவனுடன் ஒரே கம்பெனியில் […]

இப்படியும்……

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 மீனாள் தேவராஜன் நான் ஒரு பேரிளமங்கை. எனக்குள் ஏற்பட்ட பாதிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனது ஊர் சிங்கப்பூர்.. பேருந்தில் பயணிக்கும் என்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பேன். அப்படித்தான் ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிவிட்டேன். காலை நேரம். கூட்டம் நிரம்பி வழிந்தது. பரவாயில்லை. அடுத்த பேருந்துக்குக் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும். வேலைக்குத் தாமதமாகிவிடும் என்று நினைத்தேன். பலருக்கு அமர்வதற்கு   இடமில்லை. ஆனால் ஒரு நவ நாகரீகப் பெண் தன் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் தன்னுடைய கைப்பை […]

தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  என்.செல்வராஜ்   நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்லநாவல்எதுஎனதேடினேன்.ஆனந்தவிகடன்படித்ததில்டாப் டென்என்றதலைப்பில் 2006 ல்பலஎழுத்தாளர்களின்கருத்துக்களைவெளியிட்டுள்ளது.   குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். […]

என்றோ எழுதிய வரிகள்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

கீதா சங்கர் Lagos Nigeria அம்மாவிற்கு பிடித்த அலங்காரம் அப்பாவிற்கு பிடித்த அடையாளம் பொருளாதாரத்திற்கு ஏற்ற படிப்பு…வேட்டை நாயாய் வெறி கொண்டும் கடிக்கும் வந்த அரணை வந்த வேலை மறப்பதாய வாழ் நினைத்த வாழ்க்கை பேச நினைத்த வார்த்தை ரசிக்க நினைத்த கலைகளின் காற்றில்அடித்துப் போனதே உண்மை் வாழ்க்கை என்பது வெறும் மாயை.. விரித்த படுக்கை என்னை உரசிப் போன தனிமை எல்லாம் மறக்க மீண்டும் எனை மறந்தேனே நானும். தீப்பெட்டியாய் தினம்தினம் உரசி உரசி பிரிவோம் […]

கவிதை

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

மு.ரமேஷ் பறவை ஒன்றை கைவிட்ட துயரத்தில் புகையின் காதை திரிகி இழுத்து கொண்டு வானிலேறும் காற்று ஊரை எரித்தவனின் முகத்துக்கு முன்னால் தனது மயிற் கற்றையிலிருந்து ஒன்றை உதிற்த்துவிட்டு கீழிரங்கும் சிறகு   எனது நிழலும் நீக்கப்பட்ட வண்ணமும் வனப்பும் இழந்த பழுப்பேறிய கவிதையை ப் பரிசலித்தது நீ என்பதை யாரிடம் சொல்ல எல்லாம் நீங்களாக இருக்கிறபோது   ஆமாம் இப்போதும் பார்த்துகொண்டேயிருக்கிறேன் அந்தத் தொலைகாட்சி விளம்பரத்தை அடர்நிறம் கொண்ட அது குறித்து வெளுத்துக்கட்டுகிறாய் என் உயிரினும் […]

கவிதாயினியின் காத்திருப்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

“ ஸ்ரீ: “                                மழைக்கால நாளொன்றின் இரவு நேரம் – கண்ணாடி ஜன்னலின் வெளியே அவ்வப்போது தீக்குச்சி கிழிக்கும் மின்னல் வெட்டு ; பணி முடித்துச் செல்லும் வேலையாட்களின் சன்னமான பேச்சொலியாய் இடியோசை ஒன்றிரண்டு ; நின்றுவிட்ட பெருமழையின் நினைவேந்தல் நிகழ்ச்சியென சன்னமாய்த் தொடரும் தூறல் ; வெண்டிலேட்டர் இடைவெளியில் சில்வண்டுகள் ஒலிபரப்பும் புல்லாங்குழல் ; வயதான வித்வானின் குரலைப் பிரதியெடுக்கும் தவளைகளின் இசை ஒத்திகை ; வந்துபோகும் மின்சாரம் வழக்கம் போலவே ; […]

‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது.  மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து  ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், […]

கவனங்களும் கவலைகளும்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  எஸ். ஜெயஸ்ரீ இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு அருமையான, இனிமையான இசையாகும். அதுபோல சிறுகதை, நாவல், கட்டுரை, பக்தி இலக்கியம், நவீனகவிதை, மரபுக்கவிதை, சொற்பொழிவு என ஏழுதந்திகளால் இழுத்துக்கட்டப்பட்ட இலக்கிய இசைக்கருவியைத் தன்னகத்தே கொண்டுள்ளவர் வளவ. துரையன். தன்னுடைய பதினெட்டு வயதிலிருந்து இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், தன்னுடைய நாற்பத்தேழாம் வயதிலிருந்து புத்தகங்கள் எழுதி வெளியிடத் தொடங்கி உள்ளார். தற்போது அறுபத்தைந்து வயது […]