சத்யானந்தன் பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத புன்னகை அபூர்வமாகவே தென்படும் மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின மலர்கள் புன்னகைப்பதில்லை வாடாமலிருக்கின்றன பின் இதழ்கள் நீங்கி விடுதலையாகின்றன மென்மையான கத்தி என்று ஒன்று இருந்தால் அதைச் சுழற்றி புன்னகைப் பட்டறை நடத்தலாம் விரைவில் காலாவதியாவதெல்லாம் பூவென்றால் புன்னகையும் ஒரு பூதான் எவ்வளவு நேரமாகி விட்டது? ‘உன் புன்னகை வன்முறை’ என்று இந்த அலுவலக வரவேற்பாளரிடம் நான் மானசீகமாகவே கத்த […]
நான் சிந்தனையில் இருந்து மீண்ட போது அந்தப் படகு இல்லை என் பார்வையின் வீச்சுக்கு அப்பால் அது போய் விட்டது எழுந்து நின்று கரையோரம் நீள நடந்து அந்த மேட்டில் ஏறி படகைத் தேடலாம் கவனத்தைக் கடலின் ஆர்ப்பரிப்பு கலைக்கிறது ஆக உயரமாய் எழும்பும் அலை வந்து மோதி ஈரமணலை விரித்து மறைகிறது மேகங்கள் பறவைகள் கவியும் மாலை நட்சத்திரங்கள் எதிலிருந்தும் தடம் மாற்றி விடும் ஆர்ப்பரித்து ஓங்கி வரும் […]
சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக சகபயணி எதிர்ப்பயணி யாவரும் ஒரு அமைப்பின் பன்முகங்கள் உன் உரிமை என் கனவு என்றும் நேரெதிராய் அமைப்பின் அதிகாரம் என்னும் புள்ளி மூன்றாவதாய் எட்டு திக்கும் முக்கோணத்துக்குள்
காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் வரிசையில் இயந்திரத்தனமும் அடிமைத்தனமும் அபூர்வ கிறுக்கு நொடிகளும் அவனுக்கு வேடிக்கையாய் குறுஞ்செய்திகள் கைபேசி அழைபுகள் இவற்றில் என் வேடங்கள் அபிநயங்கள் மீது அவன் விமர்சனம் என்னை விரக்திக்கே தள்ளும் எனக்கு முன்னால் தூங்கி நான் உறங்கும்போது எழுந்து நடமாடி பின் உறங்கி நான் விழித்த பின் எழுபவன் அவன் என் இடங்களை அவன் ஆக்கிரமிக்க […]
சத்யானந்தன் பரிசுப் பொருள் என் கௌரவத்தை உறுதி செய்வது பளபளப்புக் காகிதத்தால் மட்டுமல்ல அதன் உள்ளீடு ரகசியமாயிருப்பதால் உள்ளீடற்ற ஒரு உறவுப் பரிமாற்றத்தை அது நாசூக்காக்குகிறது அதன் உள்ளீடு மீண்டும் கை மாறலாம் மினுக்கும் காகிதம் கை கொடுக்க வீசவும் படலாம் பரிசின் எல்லாப் பக்கங்களும் எதிர்பார்ப்புகளால் வலுவானவை கனமான ஒரு செய்தியைப் பரிசுகள் சேர்ப்பிக்கின்றன ரகசியமாய்க் கைமாறும் பரிசுகளில் மட்டுமே சமூகம் கைதவறி விட்டவை உள்ளீடாய்
சத்யானந்தன் காற்றாடிகள் வெறும் காட்சிப் பொருள் உங்களுக்கு அதனாலேயே மாஞ்சாக் கயிறு உங்கள் புகார்ப் பட்டியலில் மட்டும் பட்டம் விடுவதில் வீரமும் போட்டியும் துண்டித்தலும் தனித்து மேற்செல்லுதலும் மாஞ்சாவன்றி சாத்தியமேயில்லை நீங்களோ என் காத்தாடியின் வெற்றி பற்றி நான் பேசத் துவங்கினாலே மாஞ்சா செய்த காயங்கள் பற்றி புலம்பத் துவங்குகிறீர்கள் வீரத் துக்கும் காற்றாடிக்கும் விளையாட்டுக்கும் மட்டுமல்ல நீங்கள் எனக்கும் அன்னியமே
சத்யானந்தன் பரிமாற்றங்களின் தராசில் ஏறுமாறாய் ஏதேனும் மீதம் இருந்து விடுகிறது நாட்காட்டியின் தாள்கள் திரைகளாய் அபூர்வமாய் நினைவின் பனிப் பெட்டகத்தில் உறைந்து போயிருந்த முகம் எப்போதோ எதிர்ப்படுகிறது எந்தத் தழும்பில் அந்தப் பரிச்சயம் இழையோடுகிறது என்றறிய வெகுகாலம் பிடிக்கிறது பகலின் பரிகாச முகங்கள் இரவில் ரத்தக் காட்டேரிக் கனவுகளாகின்றன மீறல்கள் வம்புச் சண்டைகள் அதிர்வுகளாய் எடுத்து வைக்கும் தப்படி ஒவ்வொன்றிலும் இடறுகின்றன கடந்து செல்ல சட்டை நீக்கிய பாம்பு போல் ஊர்ந்து செல்ல வேண்டும் பல்லில் துளி […]
சத்யானந்தன் ஒரு உறைவிடத்தில் அமைவதோ அதை நீங்குவதோ சொற்களே தீர்மானிக்கும் அதிகார முத்திரையுள்ள சொற்கள் பெரிய வளாகங்களை எழுப்பி விடுகின்றன அவற்றுக்கு அன்னியமான விளிம்பு நிலையினனுக்கு கூரை என்னும் கொடுப்பினை இல்லை சொல்லாடல்கள் சூழ சுவர்கள் எழும்பியதென்றே குகைகளை அடைந்தான் சித்தார்த்தன் ஒரு துடைப்பக் குச்சி சணல் துண்டு உடுப்புக்களாய் இருந்த துணிகளின் துணுக்குகள் காகம் அறியும் மனித வசிப்பில் எதைக் கவ்வி எடுத்தால் கூடு அமையுமென்று
சத்யானந்தன் எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது? கடற்பரப்பில் அன்று புள்ளியாய்த் தெரிந்த அதே கட்டுமரமா இன்று கரையேறிக் கிடக்கிறது? வாகன நெரிசலில் மருத்துவ விடுதியில் உணவகத்தில் ரயில் நிலையத்தில் காந்திருந்த வரிசைகளுக்குள் என்ன வித்தியாசம்? ராட்சத வணிக வளாகத்தில் எதிர் எதிர்ப்பக்கம் நகரும் படிக்கட்டுகளில் மேற்தளம் செல்பவன் கீழிறங்கும் என்னைப் பார்த்தா கையசைத்தான்? நான் என்னருகில் இருந்தவர் இருவருமே பதிலளித்தோம்
சத்யானந்தன் அன்று நான் அழைத்தபோதெல்லாம் உங்கள் கைபேசி அழைப்பை ஏற்காவில்லை என் குறுஞ்செய்திகள் கண்டுகொள்ளப் படவில்லை நேரில் சந்தித்த போதும் நீங்கள் பிடி கொடுக்கவில்லை உங்களைத் தேடிய சூழ்நிலை மட்டுமல்ல பின்னர் என் தேவையா இல்லை உங்கள் இடமா எது காலாவதியானது நினைவில்லை இன்று உங்கள் பெயரும் கைபேசி எண்ணும் என்னுடையதில் தொன்மமாய்