தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம் ஏக்கம் மனக்குமிழ்களாய் கொப்பளிக்கும் மலர் எது? வண்ணமில்லாததா இல்லை வாசமில்லாததா? இரும்புத் தட்டில் எடைக்கல்லின் இணையாவதா? ரசாயனப் புன்னகை பிளாஸ்டிக் பைக்குள் விரிக்கும் பூங்கொத்தா? இதழ்கள் சிறகுகள் என்றே விரித்து விரித்து முயன்று முயன்று […]
18.4.2015 சனிக்கிழமை வடபழனி பேருந்து நிலையம் எதிரில் ஆர்கேவி அரங்கம் என்னும் “ப்ரிவியூ தியேட்டரில்” ஜெயகாந்தனுக்கு நினைவில் நிற்கும்படியான ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கேகே நகரின் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. கவிதா பப்ளிகேஷன்ஸ் சொக்கலிங்கம் ஜெயகாந்தனின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடத் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவருடன் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சா.கந்தசாமி சாகித்ய அகாதமியில் ஏழு ஆண்டுகள் முயன்று ஜெயகாந்தன் மீது ஆவணப்படம் தயாரிப்பதில் […]
ஜோஸப் யாருக்காக அழுதான்? சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது? கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை? சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன? இவர்கள் நம் நெஞ்சில் இன்றும் வாழ உயிராய் ஜெகேயின் புனைவு வெளி “என்னைக் கொல்வதும் – கொன்று கோவிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடியிருப்பதுண்டோ?” அவர் கேள்வி விழிப்புக்கு விதை தமிழில் இலக்கியம் இலக்கியத்தில் ஜெயகாந்தன் […]
பாலம் நெடுக நெருங்கி நின்றன வாகனங்கள் முடிவின்றி நீண்ட போக்குவரத்து நெரிசல் பாதிக்கப் பட்ட பயணிகள் திருச்சி ஸ்ரீரங்கம் எனப் பிரித்து இரு ஊர்களைத் தனித்தனியாய்க் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள் பாலம் இடைவழி மட்டுமோ? இரண்டற்றதாக்காதோ? எந்த அன்புப் பாலமும் அப்படி இருக்காது இக்கரை அக்கரை பாலம் எல்லாம் ஒன்றாயிருக்கும் நான் மாறினாலும் மாறிடுவேன் மூன்று வார்த்தையில் அவள் துண்டித்துக் கொண்டு போனது விதிவிலக்கு
தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பல கவிதைகள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்து நமக்கு தெலுங்கு இலக்கியத்தின் பரிச்சயம் சாந்தாதத் அவர்களின் எழுத்தில் கிடைத்திருக்கிறது. “திசை எட்டும்” இதழில் இவரது பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது கடினம். எனவே அவரது உழைப்பும் மொழிபெயர்ப்பும் கவனம் பெறுபவை. மொழிபெயர்ப்பாளர்கள் புனை கதை எழுதுவது குறைவே. “வாழ்க்கைக் காடு” என்னும் சிறுகதைத் தொகுதி அவரின் புனைகதைகளின் புதிய தொகுதி. புனைவு மொழிபெயர்ப்பு என இரு தளத்தில் இயங்கும் பெண் படைப்பாளியான அவர் ஹைதராபாத் […]
சத்யானந்தன் மரத்தின் இலைகிளையின் அடர்ந்த பெரும் தோற்றமாய் வெள்ளைப் படுதா மேல் வீச்சுடன் விழுந்த கருப்பு மையாய் அரிதாய்க் காணும் யானையின் சயனமாய் வெண்பஞ்சுச் சிதில் விஸ்வரூபமானதுவாய் கடலலையின் நுரை வடிவாய் மேகங்கள் அலையும் அடிக்கடி வடிவம் மாறும் வானின் மன அலைகள் என் கற்பனை விரிய விரிய வெவ்வேறாய்த் தெரியும் அழகு அலைகள் மேகங்கள் மின்னல்கள் அரங்கேறும் பெண் முகம் […]
உன் உண்மை எது உண்மை என்னும் கேள்வி இரண்டும் பலிபீடம் ஏற என் உண்மை நிறுவப் படும் அலைதல் திரிதலே தேடல் பிடிபட்டதே புரிதல் என்னும் விளக்கங்கள் இடம்பிடிக்கும் அகராதிகளில் என் உண்மையின் அரசியலில் தனிமையின் உயிர்ப்பு தனித்துவத்தின் ஆற்றல் நீர்த்துப் போகும் கரவொலிகள் ஒட்டுண்ணிகளாய்
சத்யானந்தன் பலரை சிறையில் அடைத்த வாளும் கிரீடமும் சிறைப்பட்டிருக்கின்றன அருங்காட்சியகத்தில் உயரமான மாணவர்களுக்குக் கூட பெருமிதமான வரலாறு சிறு குறிப்புகளின் ஊடே பிடிபடவில்லை சிறுவரை அழைத்து வந்த ஊர்தியில் யாருமில்லை வெற்றிடமுமில்லை பையன்கள் விளையாடுவர் காட்சிக் கூடத்துக் காணொளிப் பதிவு இயங்கும் வரலாறு புரண்டு படுக்கும் சிலிக்கான் சில்லுகளில் வெளியே வெய்யிலில் மௌனமாய் திறந்த அடைப்பில் வரலாற்றின் உள் அறிந்த அரிய பார்வையாளனாய் கல் மரம்
ஏதோ ஒரு ஆடியில் மட்டும் பெருக்கு சிறு ஓடை போல் தான் நிரந்தரமாய் நதி தான் அது ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம் இலை கிளை நடுமரம் அடிமரம் மட்டுமே மரம் வேர்கள் வேறுதான் சூட்சமம் இல்லை காலை மதியம் மாலை நேற்று இன்று நாளை கடந்தது நிகழ் எதிர் எல்லாமே காலந்தான் சூட்சமம் மட்டுமே மலர்கள் வேறு மணிகள் வேறு மாலை வேறு தான் கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு வானவில் வேறு வானம் வேறு தான் […]
பள்ளி ஆசிரியர் முன் வரிசை வகுப்புத் தோழன் தோழி அப்பா மூத்த சகோதர சகோதரி தொடங்கி வைத்தார் கல்லூரியில் உச்சக் கட்டம் மேலதிகாரி வாடிக்கையாளர் சகவூழியன் மேலெடுத்துச்செல்ல மகன் மகள் மனைவி அண்டை அயல் தரும் அதிர்வுகள் ஓய்வதில்லை தனியே பயணம் செய்தால் கைபேசி வழி தாக்குதல் தொடரும் மின்னஞ்சல் முகனூல் மேலும் எண்ணற்ற செயலிகள் உறக்கத்தின் எதிரிகள் அதிர்வின் அதீதம் பழகி அபூர்வ மௌனமே அச்சம் […]