ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் அரைகுறை ரசவாதம் ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும் இறுகிய கருங்கல்லாகவும் காலம்…. நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு என்னால் முடிந்த உருவங்களையெல்லாம் வனைந்துபார்க்கிறேன். நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம் நான் குருவியாய் செதுக்க முனைந்து குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த உருண்டையைப் பார்த்து. கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது. மால் கற்றது கையளவெனினும் கடல்முழுக்கப் […]
நிலா என்னைத் தேடிவந்ததுண்டு அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா? மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன். அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும். அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்கும். இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்ததுபோலிருந்ததொரு காலம். நானே நிலவாகி நின்றதொரு காலம் கண்ணால் காற்றேணி கட்டி நள்ளிரவில் நிலவில் வலம் வந்ததொரு காலம் நிலவிறங்கி நெருங்கிவந்து என் நெஞ்சுருக தலைவருடித் தந்ததொரு காலம். காணாமல் போய்விட்ட […]
Posted on June 30, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://en.wikipedia.org/wiki/162173_Ryugu http://www.spacedaily.com/reports/Japan_space_probe_reaches_asteroid_in_search_for_origin_of_life_999.html +++++++++++++++++++++ நிலவினில் முதற்தடம் வைத்து நீத்தார் பெருமை யாய் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத் தவ்விய தளவுளவி களை நாசாவும் ஈசாவும் கொண்டு இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று வால் வீசிய தூசியைப் பிடித்து வந்தார் காசினிக்கு […]
முன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல்,நாவல் ? ஊஹூம் ! ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட . ஸிந்துஜா 4 இந்தக் காலத்தில்தான் அரைக் கிளாஸ் தாண்டுவதற்கு முன்பே ட்யூஷன் வைக்கும் பழக்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இது தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். இராமாயண காலத்தில் குருகுல வாசம் வழக்கில் இருந்த […]
ஆரோக்கியநாதர் ஆலயத்தின் புதுக் கட்டிட திறப்பு விழாவின் நினைவு மலர் தயார் செய்யும் பணியில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபட்டேன். சபைச் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆலயத்தின் பொருளாளர் ஆனதால் இந்த அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன். நினைவு மலரை மிகவும் சிறப்பாகச் செய்வது என்று முடிவு செய்தேன்.பால்ராஜ் நன்றாக டைப் செய்வார்..கிறிஸ்டோபர் பொதுத் தொடர்புக்கு உகந்தவர். […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் 2008-இல் வெளிவந்த மில்க்(Milk) என்ற அமெரிக்க ஓரினத் திரைப்படம், முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படம் என்பதால், எனது விமர்சனத்துக்குள்ளும், நிறைய அரசியல் பேச வேண்டியிருக்கிறது. முதலில், தற்போதைய அயர்லாந்தின் பிரதமரும், இந்திய வம்சாவளியில் வந்தவருமான உயர்திரு. லியோ வரத்கார் அவர்கள் குறித்து இங்கே பேசுவோம். லியோ வரத்கார் “நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்று வெளிப்படையாக சுயப்பிரகடனம் செய்துகொண்ட ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர். இவரது தந்தை திரு அசோக், இந்தியாவில் பிறந்த […]
மும்பை கபே பரேடில் பதினைந்து மாடி கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில் கார்த்தி ஜிஎம். சிறு வயதிலேயே கார்த்தி ஜிஎம் ஆகி விட்டான்.. காரணம் ஐஐஎம் டிகிரி தான். கார்த்தி அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அப்பா தாமோதரன் கார்த்தியின் அம்மா இறந்த பிறகு மகனைத் தவிர வேறு நினைவு இல்லாமல் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். வாரம் ஒரு முறை, அதாவது ஞாயிற்றுக் கிழமையில் கார்த்தியிடமிருந்து போன் வரும், மகனின் குரலைக் […]
கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி உள்ளதை நாம் எளிதில் கண்ணாடியில் பார்த்தாலே தெரியும். அல்லது நம் நண்பர் அல்லது உறவினர் அது பற்றி கூறலாம். அதை உடன் மருத்துவரிடம் காட்டி ஆலோசனைப் பெறுவது முக்கியமாகும். காரணம் எந்த கட்டியானாலும் அது புற்று நோய்க் கட்டி இல்லை என்பதை முதலில் நிர்ணயம் செய்தாக வேண்டும். அதற்கு தற்போது எளிமையான பரிசோதனை முறைகள் வழக்கில் உள்ளன. […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ எல்லாம் பெருத்துப் போச்சு ! எங்கும் பெருத்துப் போச்சு ! சுகிக்க முடிய வில்லை என்னால் ! உன் விழிக்குள் நோக்கி னால் என் மீது காதல் தெரியுது. நெஞ்சின் ஆழத்தில் தோண்டத் தோண்ட நிரம்பத் தகவல் புரியுது ! செரிக்க முடிய வில்லை என்னால் ! உன் அங்கம் முழுவதும் மின்னுது காந்தக் கவர்ச்சி ! என்னால் தாங்க முடிய வில்லை கவர்ச்சி […]